மேகமாய் இருப்பதனால்
என் மனதிலே
மெதுவாக மிதப்பாய்
என்றிருந்தேன்
தென்றலாய் இருந்தேன்
மேனியை
அனலாய் வருடி செல்கிறாயே
மலராய் இருப்பதனால்
என் வாழ்விலே
மணமாக வீசுவாய்
என்றிருந்தேன்
சூரியனாக இருந்து
உடலை தீயாக
சுட்டெரிகின்றாய்.........
மலை போல்
உன் நினைவுகள்
மனதை
வாட்டிய
போதும் உன்னை
நாடியே ஓடி
வந்தேன் ...........
இறுதியில் தான்
தெரிந்துகொண்டேன்
நீ இன்னொருவனின்
இதயத்தில் என்று .........

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக