
வாழ்க்கை எனும் பாடத்தில் காதல்
எனும் நாடகத்தில் நீயும் நானும் காதலர்கள் ,
இது இறைவன் போட்ட முடிச்சு நீ காதலியாகவும்
நான் காதலனாகவும் இரு வருடங்கள் -அந்த காலம்
மறக்க தன முடியுமா ..?-இல்லை வெறுக்க தான் முடியுமா ..?
உனக்காக நானும் எனக்காக நீயும் என நம்பி இருந்த காதல் காவியங்கள் ,
எல்லோர் காதலுக்கும் கடற்கரை மணல் சாட்சி எமது காதலுக்கு - அந்த கடவுள் சாட்சி .,இப்படி எல்லாம் இருந்த நீயும் ஏன் இப்போது தடு மாறி விட்டாய் .............?
கேள்விக்கு பின் விடை என்பது கணக்கில் சரித்திரம் -
ஆனால் விடைக்கு பின் கேள்வி என்பது தான் காதலின் விசித்திரம் ,
என்னை நீ இறந்து விட சொல் இன்புறுவேன் - ஆனால் மறந்து விட சொல்லாதே நான் இறந்து விடுவேன் .,பனி சுமந்த மலர்கள் ,
கனி சுமந்த மரங்களையும் இனி ஒரு முறை காண கிடைத்தால் .., என் அற்ற மகிழ்ச்சியில் எழுதுவேன் . எல்லையற்ற வரிகள் காவியாக என் நிழல் தான் உன் முகம் பார்க்கும் கண்ணாடி என்றால் , உன் முகம் தான் என் நிழல் போன்ற நினைவுகள் புரிந்தால் என்றும் குழப்பம் வராது., குழப்பத்தில் தான் என்றுமே புரிய வராது , மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி என்றால் மறு மொழி தேவை இல்லை , ஆனால் உன் சம்மதமே மௌனமானால் வேறு வழி இல்லை . பண்ணும் போது காதல் சுகம் பிரிந்த பின் என்னும் போது கூட தான் காதல் அதை விட சுகம் ..
