என் தேவதையே
கவியும் எழுதுவேன்
என
எனக்கே தெரியாத வரிகளை
உன்னை நினைத்து எழுத
வைத்தாய் .!
நீ என்னிடம் காதல் சம்மதம்
கேட்டு என்னை மீண்டும்
பிறக்க வைத்தாய்
காதல் கருவறையில் .!
அதனால் மறந்தேன்
என் தாயின் கருவறையை
இழந்தேன் உறவு வலையை
நீ வீசிய காதல் வலையில்
அகப்பட்ட மீனாக துடித்தேன் .!
நீ என்னை வெறுத்து விட்டு
என் நினைவுகளை அழைத்து
சென்றதால் உன்னை
சுமந்த மனதுடன்
காத்திருப்பேன் உன்
மணவாழ்க்கை
அழைப்பிதழ் வரும் வரை
உன் அழைப்பிதழ் என்னை
அழைக்காதபோதும்
வாழ்வின்
இறுதி வரை
உன் வசந்தமான
வரவை என்றும்
எதிர் பார்கின்றேன் நான் ..!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக