counter

Well Come To My Page

வெள்ளி, 20 செப்டம்பர், 2013

அவள் மீதான காதல்


ஒவ்வொரு நாளும் புதியதாய் கற்று கொள்ள தவறியதில்லை ,ஆனால் எப்பவும் நாளைய மீதான பயம் இருந்து கொண்டே இருந்தது .இது இப்படி தான் ,இதை இப்படி தான் முடிக்க வேண்டும் என்று நினைப்பே தவிர முடித்த பாடில்லை தவறான ஒன்றின் மீதான நம்பிகையை மட்டும் தினமும் அதிகரித்து கொண்டே போகின்றது .


அந்த கனடா மாநகரின் ,அழகான தெருவில் அமைதியான சூழலில்,ஆடம்பர வீடொன்றில்  என்னவள் வசித்து கொண்டிருகின்றால் ,எங்கோ உலகறியாத ஒரு மூலையில் ஒரு மூடன் கிருக்கிகொண்டிருகிறான் ,இங்கு ஆடம்பரமும் இல்லை அமைதியும் இல்லை ,இங்கு அவனை சுற்றி மதுவும் ,மாதுவும் இருக்கின்றது ஆனால் ஏதோ ஒரு மயக்கத்தில் அவைகளை புறந்தள்ளுகின்றது அவனது போதை அவள்மீதானது .


அவனுக்கு தெரியும் அவன் சொன்ன ஒரு பொய் ,எப்படியாவது அவளிடம் சொல்ல நிமிடங்களை கணக்கிட்டு கொண்டிருக்கிறான் ,ஆனால் இப்போதைக்கு தகுதி இல்லை அவளிடம் அதை சொல்வதற்கு ..

                 அதை சொல்லும் நேரம் வரும்  போது 
                                         " காளான்கள்  எல்லாம் மரங்களாகி விடும் "

ஒவ்வொரு நாளும்  அவளிடம் இருந்து வரும் குறுஞ்செய்திகளும் ,ஈமெயில்களும் அவனது நினைவுகளை அலங்கரித்தது கொண்டிருக்கின்றது ,இனி என்றுமே கிடைக்க மாட்டாள் என்று தெரியும் ஆனால் போலி புன்னகையையும் ,நேசத்தையும் அவள்மீது தெளிக்க தெரியவில்லை .ஒவ்வொரு மனிதனும் எப்படியோ வேறுபடுகின்றான் ,ஆனால் அவன் எண்ணங்கள் அவளை ஒற்றே அமைகின்றது  .


எப்படியோ அவளிடம் ஒரு கேள்வி எவ்வளவு தீவிரமாய் என்னை காதலித்தவள் கடைசியில் மன மாற காரணம் என்ன ...?

பலவந்தமா ..........?
இல்லை 
பணபந்தமா .....?

வெள்ளி, 13 செப்டம்பர், 2013

திங்கள், 9 செப்டம்பர், 2013

நிஷா





நிஷா ..................
நீ
நீ வந்து போனதாவது
உனக்கு நாஜபகம் 
இருக்கிறதா ..............?

பூக்கள் என்று உன்னை
வரவேற்ற போதே பூகம்பமாகி
கலவரம் செய்தாயே
காயப்படுத்தி விட்டு போனவளே
உன்னை நினைக்கும் போது 
எல்லாம்
ஆன்மா கூட அழுது 
கொள்கிறது
எத்தனையோ 
வேதனைகளை
கடந்த போதிலும் 
உன்னை
மாதிரி ஒருத்தியும் 
வருத்தியதில்லை ..!
இரக்கம் இல்லாத 
தேவதையே ....! 
உன்னால் உறக்கமே
எதிரியாகிவிட்டது.
நிஷா ..!
 இனியும் நீ வந்து
போகாதே..!
வலிகளோடாவது
வாழ விடு ............!



நிம்மதியை குழி தோண்டும் பெண்



நிம்மதியை குழி தோண்டும் பெண் ..!

நிம்மதியை குழி தோண்டி 
புதைத்து விட்டு 
கனவுகளை விதைக்க 
சென்றது வாழ்க்கை ....

காதலிப்பது இனிமைதான் 
பிரிவு மட்டும் துயரத்திலும் 
துயரம் - அழுத்தி அழுத்தி 
அவள் நினைவை மல்லாக் 
கிடந்தது கிளற விடாமல் 
பாறங்கல்லொன்றை தூக்கி 
வைத்தேன் தலையில் 

இல்லை என்றால் 
எழுத்துக்களிடையே 
பலவந்தமாய் புகுந்து 
கவிதை எங்கும் 
ஒட்டி கிடக்கிறது 
சோகங்கள் .

ஏழையின் கண்ணீர் காதல்




ஏழையின் கண்ணீர் காதல் ...!


என் அன்பின் இனியவளே ............
ஏன் இந்த ஏழையின் மீது 
அளவு கடந்த அன்பு நான் உன்னை 
விட்டு பிரிவது எல்லாம் உன் 
நலனுக்காகவே ....பைத்தியக்காரன் 
போலிருக்கும் என்னிடம் - ஒரு 
பைங்கிளி வாழ்வதா ..............
சொல் பெண்ணே ..............?
உனது காதல் உண்மை தான் 
என்னுடன்   சேர்ந்தால்  - அது 
பொய்யாகிவிடும் 
அன்பே .......!
நிலா போன்ற அழகு நீ 
தேய்ந்தாலும் வளர்ந்தாலும் 
ஒளிமங்காமல் இருப்பாய் 
இவன் நட்சத்திரம் விழுந்தால் 
கரிக்கட்டைதான் நிலையில்லா 
என் வாழ்க்கையில் நிலவே .......
இனையாதே உண்மைக்காதலி 
இருந்தும் என்னால் கண்ணீர் 
தான் சிந்த முடிந்ததே தவிர 
கானம் பாட முடியவில்லை ............!

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

நிலவே நீ தான் யாருக்கு சொந்தமடி




உன் நினைவுகள் என்னை தாக்கும் பொழுது என் விரல்களுகிடையில் சிக்கி கொள்ளும் பேனா சில நேரம் புன்னகையும் பல நேரம் கண்ணீரும் சிந்துகிறது ..........

இந்த பாடல் என்னவளுக்கு

இந்த பாடல் என்னவளுக்கு 


அன்பே ..!
நீ அழகி என்பதற்காய் 
என்னை அலைய வைப்பது 
நியாமில்லை 
நான் கருப்பு என்பதினால் 
என் மனதை காயப்படுத்துவது 
நியாயமில்லை - நான் ஏழை 
என்பதால் என்னை ஏங்க வைப்பதில் 
நியாயமில்லை -நான் இங்கு 
ஏழை தான் ஆனாலும் 
உன்னை நேசிக்கும் இந்த இதயம் 
இங்கு ஏழையல்ல .!

சுனாமியா ..! சூறாவளியா ..?


சுனாமியா ..!      சூறாவளியா ..?

பெண்ணே ..!
நீ பிறந்தது ஆண்களை அழிக்கவா .?
இல்லை அழகி என்ற ஆணவத்தை 
காட்டவா ..?
உன் இமை அழகில் மயங்கிய - என் 
இமைகள் உறங்க மறுக்கின்றன 
சுழலும் பரிதியில் சுற்றும் ஒவ்வொரு 
நிமிடமும் சதா உன் நினைப்பு  - வீசும் 
காற்று உன் மூச்சோ ..! சுடும் சூரியன் 
உன் பொன் சிரிப்போ ...!பெய்யும் மழை 
உன் கண்ணீரோ .....? ம் ......ம் .....ம் .....ம் .....
இவற்றை விட உன் பெயர் என்ன 
சுனாமியா ..!      சூறாவளியா ..?

நிலவு இரண்டு



தமிழை தரம் பிரித்து -ஒவ்வொரு 
எழுத்தாய் எடுத்து தூசு தட்டி சலவை செய்து 
வானவில்லின் வர்ணத்தை கலவை செய்து 
சத்தமில்லாமல் முத்தம் ஒன்று கொடுத்து 
கவிதை ஒன்று எழுதினேன் -"வையகத்தில் 
வானம் ஒன்று நிலவு இரண்டு என்று "
என் கவிதையை விஞ்ஞானமும் ஏற்கவில்லை 
மேஞ்ஞானமும் ஏற்கவில்லை -கவிதை 
பிழையென்று கண்டனம் தெரிவிக்கின்றனர் 
அதனால் சகியே நீ வந்து நிரூபித்து விடு 
உலகத்தில் நிலவு  ஒன்றல்ல இரண்டுதான் 
என்று வண்ணம் கொண்ட வெண்ணிலவு 
விண்ணில் ஒன்று -தங்க கணம் கொண்ட 
பெண்ணிலவு மண்ணில்  ஒன்று அது "நீ "
தான் என்று 

புதன், 4 செப்டம்பர், 2013

முதன் முதலாய் அம்மாவுக்கு





ஆயிரந்தான் கவிசொன்னேன் 
அழகழகாப் பொய் சொன்னேன் 
பெத்தவளே ஒம்பெரு(மை)ம 
ஒத்தவரி சொல்லலையே! 

காத்தெல்லாம் மகன்பாட்டு 
காயிதத்தில் அவன் எழுத்து 
ஊரெல்லாம் மகன் பேச்சு 
ஒங்கீர்த்தி எழுதலையே! 

எழுதவோ படிக்கவோ 
ஏலாத தாய்பத்தி 
எழுதிஎன்ன லாபமின்னு 
எழுதாமாப் போனேனோ? 

பொன்னையாத் தேவன் பெத்த 
பொன்னே! குலமகளே! 
என்னைப் புறந்தள்ள 
இடுப்புல்வலி பொறுத்தவளே! 

வைரமுத்து பிறப்பான்னு 
வயித்தில்நீ சுமந்ததில்ல 
வயித்தில்நீ சுமந்த ஒண்ணு 
வைரமுத்து ஆயிருச்சு 

கண்ணுகாது மூக்கோட 
கறுப்பா ஒருபிண்டம் 
இடப்பக்கம் கெடக்கையில 
என்னென்ன நெனச்சிருப்ப? 

கத்தி எடுப்பவனோ? 
களவாணப் பிறந்தவனோ? 
தரணிஆள வந்திருக்கும் 
தாசில்தார் இவந்தானோ? 

இந்த வெவரங்க 
ஏதொண்ணும் அறியாம 
நெஞ்சூட்டி வளத்தஒன்ன 
நெனச்சா அழுகவரும் 

கதகதன்னு களி(க்) கிண்டி 
களிக்குள்ள குழிவெட்டி 
கருப்பட்டி நல்லெண்ண 
கலந்து தருவாயே 

தொண்டையில் அதுஎறங்கும் 
சொகமான எளஞ்சூடு 
மண்டையில இன்னும் 
மசமன்னு நிக்கிதம்மா 

கொத்தமல்லி வறுத்துவச்சுக் 
குறுமொளகா ரெண்டுவச்சு 
சீரகமும் சிறுமொளகும் 
சேத்துவச்சு நீர்தெளிச்சு 

கும்மி அரச்சு நீ 
கொழகொழன்னு வழிக்கையிலே 
அம்மி மணக்கும் 
அடுத்ததெரு மணமணக்கும் 

திக்திக்கச் சமச்சாலும் 
திட்டிக்கிட்டே சமச்சாலும் 
கத்திரிக்கா நெய்வடியும் 
கருவாடு தேனொழுகும் 

கோழிக் கொழம்புமேல 
குட்டிக்குட்டியா மெதக்கும் 
தேங்காச் சில்லுக்கு 
தேகமெல்லாம் எச்சிஊறும் 

வறுமையில நாமபட்ட 
வலிதாங்க மாட்டாம(ப்) 
பேனா எடுத்தேன் 
பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன்! 

பாசமுள்ள வேளையில 
காசுபணம் கூடலையே! 
காசுவந்த வேலையிலே 
பாசம்வந்து சேரலையே! 

கல்யாணம் நான் செஞ்சு 
கதியத்து நிக்கையிலே 
பெத்தஅப்பன் சென்னைவந்து 
சொத்தெழுதிப் போபபின்னே 

அஞ்சாறு வருசம்உன் 
ஆசமொகம் பாக்காமப் 
பிள்ளைமனம் பித்தாச்சே 
பெத்தமனம் கல்லாச்சே 

படிப்புப் படிச்சுக்கிட்டே 
பணம் அனுப்பி வச்சமகன் 
கைவிட மாட்டான்னு 
கடைசியில நம்பலையே! 

பாசம் கண்ணீரு 
பழையகதை எல்லாமே 
வெறிச்சோடி போன 
வேதாந்த மாயிருச்சே! 

வைகையில ஊர்முழுக 
வல்லூறும் சேர்ந்தழுக 
கைப்பிடியாக் கூட்டிவந்து 
கரைசேத்து விட்டவளே! 

எனக்கொண்ணு ஆனதுன்னா 
ஒனக்குவேற பிள்ளையுண்டு 
ஒனக்கேதும் ஆனதுன்னா 
எனக்குவேற தாயிருக்கா? 

- கவிப்பேரரசு வைரமுத்து - 

செவ்வாய், 3 செப்டம்பர், 2013

காதல் சொல்ல வருகிறேன்

நாட்கள் நகர்ந்தாலும் உன் நியாபகங்கள் 
நகர்வதில்லை ஏன் ....?



































































எறும்புகள் இழுத்துச் செல்லும் சிறகொடிந்த ஈசலாய் உன் நினைவுகளிடம் என் இதயம்...