ஒன்றுமில்லாது
பூமிக்கு வந்த போது
புது பொலிவைத் தந்து
விட்ட என் பெற்றோருக்கு
நன்றி .!
புரியாத புதிராக
நானிருந்த போதினில்
புதிருக்கு விடை தேடித்
தந்த என் ஆசானுக்கு
நன்றி .!
எல்லாம் இருப்பினும்
பாசம் என்னவென்று
இருக்க வேண்டும் என்று
உணரவைத்த என் காதலிக்கு
நன்றி ............!
நண்பரென்று நம்பி பின்
நடு வீதியில் கிடக்கும்
நாயென்று
ஆகும் முன்பே ஏமாற்றத்தை
மட்டும் தந்து விலகி சென்ற
என் நண்பர்களுக்கு
மிக மிக நன்றி


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக