counter

Well Come To My Page

வெள்ளி, 30 செப்டம்பர், 2011

என் காதலியே




ஐந்து வருடங்கள்

கழிந்து
இன்று
அவளை
பார்த்த பொழுதுதான்
தெரிந்தது
என் காதல்
காதலோடு
முடிந்து போனததற்கு
காரணம்

அன்பான துணை

அழகான குழந்தை
அமைதியான இல்லம்
வளமையான வாழ்க்கை

சந்தோசத்தின்

உச்சத்தில்
நான்

நீ

இந்த
ஏழை கவிஞனின்
கை பிடித்திருந்தால்
அந்த
பாரதி கண்ணம்மாவாக
அரிசி பருப்பிர்க்குமே
அழுது
கொண்டிருந்திருப்பாய்

என் காதலியே

என்னை
காதலிக்காததற்கு
நன்றி

என் ஆண்டவனே

என் காதலியை
என்னை காதலிக்காமல்
செய்ததற்கு
நன்றி

உன்

சந்தோசத்தின்
உச்சம்தானடி
என்
காதலின்
மிச்சம்

அது போதும் – இந்த

ஆயுள் முழுதும்……………..

வியாழன், 2 ஜூன், 2011

காதலிக்கான முதல் கவிதை




"காதலிக்கான முதல் கவிதை !!!!!!!!!!!!!!!!!!!!!!


நீ பகலில் நடந்து வரும் பொழுது

ஒரே குழப்பமாக இருக்கிறது...
சூரியனும் நிலவும் எப்படி
ஒரே நேரத்தில் காட்சி அளிக்கின்றன!!!

நிலா நிலா ஓடி வா என்று
சிறுவயதில் பாட்டி சொன்ன பொழுது
நான் நம்பவில்லை.
நிலவு ஓடி வரும் என்று,
இன்று நம்புகிறேன்!!!

வீட்டிற்குள் விண்மீன்கள் எப்படி வந்தது
என்று வியந்தேன் பிறகு உணர்த்தேன்
அவை உனது கண்கள் என்று.
விண்மீன்களால் இவ்வளவு வேகமாக
முடியாதே !!!

பிரம்மன் உன்னை படைத்த பிறகு
சிறிது கவனம் தவறி இருக்கிறார்.
கவனமாக இருந்திருந்தால் உன்னை
இந்திரலோகம் அல்லவா அனுப்பி இருப்பார் !!!

உன் குரல் இனிமையை கண்டதால் தானே
உன் வீட்டின் அருகில் மட்டும் குயில்கள்
மௌணம் சாதித்தே செல்கின்றன !!!

வெளியில் செல்லும் பொழுது முகமூடி
அணிந்து உன் உதட்டை மறைத்துக்கொள்
வண்டுகளுக்கு எப்படி தெரியும் தேன் இருக்கும்
இடம் எல்லாம் பூக்கள் அல்ல என்பது!!!

இனிப்பு பிடிக்கும் என்றேன் இன்று,
உன் உதட்டின் சுவை அறியாததால்

உன் தோழில் விழும் பூக்களுக்கு தெரியுமா
தொடுக்கப்படும் போது,
தான் ஒரு தேவதைகாக தொடுக்கப்படுகிறோம்
என்று???

உன் காலில் இருக்கும், காலனிக்குத் தெரியுமா
அதன் மீது எவ்வளவு கோபம் கொண்டுள்ளது பூமி என்று?
(உன்னை தொட விடாமல் தடுப்பதற்க்காக)

உனது ஆடைகளுக்கு சொல்லி வை அவை இப்பொழுது தொட்டு கொண்டிருப்பது எனக்கு சொந்தமான பொருள் என்று
உன் தோடுகள் ஏன் சிவந்திருக்கின்றன ??


நாம் பேசும் காதல் வசனங்களில் வெட்க பட்டா ??

உன் பெயரை உச்சரிக்கும் போது மட்டும் ஏன்,
என் உள்ளத்தில் ஒர் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறக்கின்றன !!!
நிஷா என்ற பெயருக்குள் எத்தனை ஆயிரம் கீதங்கள்
ஒழிந்திருக்கின்றன ??
ஒவ்வொருமுறை சொல்லும் போதும் இனிக்கிறதே !!!

புருவத்திற்க்கு நடுவில் வைத்தால் மட்டுமல்ல
எங்கு வைத்தாலும் அழகு தான் ஏனென்றால்,
அந்த பொட்டுக்கு அழகு சேர்ப்பதே நீ தானே !!!

மான் விழியாள் என்று சிலரை சொல்கிறார்களே!!!
உன் விழியை விட அவை அழகா என்ன ??

முள்ளில்லாமல் கூட ரோஜா பூக்குமா என்ன ??
இரண்டே இதழ் மட்டும் கொண்டாலும்
இந்த ரோஜா மட்டும் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறது !!!

நிழற்படம் எடுக்கும் பொழுது அழகாக தலை சாய்க்கிறாய்.
ஏங்குகின்றன என் தோள்கள்,
உன் தலை சாயும் இடத்திற்கு எப்பொழுது வருமென!!

சும்மா இருந்த இளைஞனையும்
கவிஞனாக மாற்றிவிடாயே!!!
இதுதான் காதலா ???
இதுதான் காதலா !!!
சொல்லடி என் காதலியே!!!

ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

அவள் வேசிதான்


மரணத்திற்கு மருளும்

மனிதர்களே...........!
நான் காதலியை தேடினேன்
உண்மையான காதலியை தேடினேன்
கடசியில் கண்டெடுத்தேன்
உண்மையாகவே
அவள் மட்டும் தான்
என்னை உண்மையாக காதலிப்பவள்

பெயர் கேட்டால் பலர்

பேயறைந்தற்போல் நிற்பீர்கள்
இடைவிடா தூக்கத்தின்
இருப்பிடமான கல்லறைதான்

ஆம் இவள்தான்

என் காதலி
எத்தனைபேர் வந்தாலும்
கள்ளமில்லா உள்ளத்துடன்
வாய் திறந்து சிரிக்கிறாள்
சிறு குழந்தையை போலே

ஆனாலும் எனக்கு ஒரு

அல்ப சந்தேகம்
ஒருவேளை அவள்
காம கிழத்தியாய் இருப்பாளோ...?
உயிரை நேசிக்காமல்
உடலை மட்டும் அணைக்கிறாளே.......!

இன்னொறு சந்தேகம்

இவள் அசைவத்தை உண்டு
சைவத்தை தன்மேல் போர்த்தி
சத்தமில்லாமல் தூங்குகிறாளே.......?!
இவளின்
மதமென்னவோ.........?
இனமென்னவோ................?

இறுதி வரை சலிக்காமல்

இதழ் எடுக்காமல்
சத்தம் கொடுக்காமல்
எனக்கு வலிக்காமல்
முத்தமிடும் இவளை தான்
எந்த பிரச்சனையும் இன்றி
துணிவுடன் காதலிக்கலாம்;

அவள் வேசிதான்

அவளின் அணைப்பில்
யாருக்கும் பேதமில்லை என்பதால்
வெட்கமில்லாமல் சொல்கிறேன்
நான் வேசியின் காதலன்

அவளை முத்தமிட

ஆவலுடன் காத்திருந்து
அவள் விரும்பாத உயிரை
மரணதூதனுக்கு மாலையாக்கிவிட்டு
மல்லார்ந்து அவள்
மார்பில் சாய்ந்து
அவளின் சத்தமில்லா
முத்தத்தில் சமாதியாவேன்
காத்திருக்கிறேன்
அவளின் அழைப்பு
வரும் நாளை நேக்கி......

இப்படிக்கு

எத்தனையாவது என‌
எண்ணிக்கை தெரியவில்லை
என்றாலும் உன்
அன்புகாதலன்....

ஞாயிறு, 23 ஜனவரி, 2011

உன் மீதான என் காதல்

நிஷா நிஷா நிஷா நிஷா நிஷா ...................!
நினைவு இல்லையா நிஷா நிஷா .
நினைவுகள் இல்லையா நிஷா நிஷா ?
நாஜபகம் வல்லையா நிஷா நிஷா ..!
நானுள் இல்லையா நிஷா நிஷா ..?
என் காதலி நிஷா நிஷா ..............!






எல்லாம் நீயாகி என்

ஆத்மாவுக்குள் பேசப்படும்

உன்னைப்பற்றி

எடுத்தெரிந்து பேசுகிறாய் .!


உருண்டு புரளும் உன்
விழிகளின் பிடியில் திரண்டிருக்கும்
என்னை நினைத்து பார்க்க
நேரமில்லாமலா
இருக்கிறாய்......?

கொஞ்ச நாளின் உன் அமைதி
போக்கும் உன் போலி சிரிப்பும்
என் நெஞ்சை பிழிந்து சாறாயூற்றும்.!

சராசரி ஒருத்தியாய் எனக்குள்
வந்திருந்த நீ
என்னை மட்டும் எப்படி எடுத்தாய்
கெடுத்தாய் ..?

மது கடலின் அலையில் சுருண்டு
வளைந்து தலை நிமிர முடியாத
ஒருவனை போல் எனை நீ கடக்கும்
போதெல்லாம் எனக்கிருக்கும் .!

உன் திமிரும் திரும்பாத உன்
தலைக்கனமும் ஓர் அரச படையாய்
வந்தென்னை அடக்கினாலும்
உன் மீதான என் காதல்
அடங்காதடி................!