நம் இதயம் எந்த
அளவுக்கு பிடித்தவர்களிடம்
சண்டை போடுகிறதோ
அந்த அளவுக்கு அவர்களிடம்
அன்பை எதிர்பார்க்கிறது
நண்பர்கள் தவறு செய்தால்
மன்னித்து விடாதே
மறந்து விடு ஏனெனில்
அவர்கள் உன் உறவுகள்
அல்ல உன் உணர்வுகள்
எப்போது நீ ஒரு
உயீர் மீது அதிக
அன்பு வைக்கிறாயோ
அப்போதே உன் உயீர்
பலவீனம் அடைகிறது
உனக்கு பிடித்த
பலருடன் பழகுவதை
விட உன்னை மட்டுமே
பிடித்த ஒருவருடன்
பழகிப்பார் உன்னையே
உனக்குப் பிடிக்கும்
உண்மையான அன்புக்கு
மட்டுமே உன் கண்ணீர்
துளிகள் தெரியும் நீ
மழையில் நனைந்தாலும்
கூட
தூக்கம்
அதுவும்
என்னைவிட்டு தொலைதூரம்
சென்று விட்டது - என் காதலை போல்
சிரிப்பு
உதடுகள் என் உள்ளத்து
உணர்வுகளை மறைக்கப்
போடும் நாடகம்
காத்திருப்பு
எனது உயீர் என்னை
விட்டுப்பிரியும் - வரை
காத்திருக்கிறேன் உன்
நினைவுகளுடன்
கடிகாரம்
என் காலைக் கனவுகளை
கலைக்கும் எதிரி
அன்பு
உலகில் என்றுமே
உறுதியான அத்திவாரம்
தலையணை
வாலிப விழுதுகளின்
கற்பனை மனைவிகள்
நாகரீகம்
தொடைகளைத் தொட்டு
விட்ட ஆடைகளுக்கு பெயர்
கனவு
இரவு எனும் செடியில்
பூக்கும் பூ
நிலவு
வானம் எனும் அரண்மனையில்
நட்சத்திரங்கள் எனும் தோழிகளோடு
பவனி வரும் மகாராணி
பேனா
என் மனதிலுள்ள வார்த்தைகளுக்கு
உயீர் கொடுத்து செதுக்கும் சிற்பி
கவிதை
ரசிப்பவனுக்கு பாயாசம்
ரசிக்காதவனுக்கு கசாயம்
காதல்
நீ விடும் மூச்சு எனக்காக
என்றால் நான் வாழும்
வாழ்க்கை உனக்காக அன்பே
வலிகள்
உலகில் உண்மையை விட
பொய்யே கூடியது
நீ ஒருவரை நேசிக்கலாம்
அது இயல்பானது
ஆனால் அவரை துன்புறுத்தாதே
பெண்மை
இறைவனுக்கு இவ்வுலகில் நிரந்தரமாக
இருக்க முடியாமையினால் தோற்று
வித்த சக்தியே பெண்மை
கண்கள்
என் உள்ளத்து உணர்வுகளின்
பிரதிபலிப்பாய் கண்ணீரை பிறப்பிக்கும்
கண்ணே நீயும் ஒரு தாய் தானே
நிரந்தரம்
நித்தம் நித்தம் மாறும் உலகில்
நிரந்தரம் எனும் வார்த்தை
ஒன்றே நிரந்தரம்
காதல்
கனவிலே காலங்கழிக்கும்
குறிக்கோள் அற்றவர்களின்
ஒரே குறிக்கோள்
கல்வி
கருவறை முதல்
கல்லறை வரை
நம் வாழ்வுடனே
வளர்ந்து வரும்
அழிவற்ற அழகிய கலை
நம்பிக்கை
முழுமையாய் நம்பியிருந்தேன்
அன்று உன்னை
முகவரி இல்லாமல்
மடிந்து விட்டோ இன்று

