counter

Well Come To My Page

திங்கள், 12 நவம்பர், 2012

என் காதல் ரகசியங்கள்


என் தேசம் சுற்றியதான 
மெலிய பூகம்ப அதிர்வுகளுடன் 
துயரம் நிறைந்த அகதியாய் 
உன் பேரன்பையும் 
சுமந்து நடக்கின்றேன் 

அப் பேரன்பு பெருவெளியில் 
வந்து வந்து  முட்டும் 
உன் பொன் முகம் -கொஞ்சம் 
இளைப்பாறி நீ தந்த முத்தத்தின் 
தடங்களை தடவுகின்றேன் 

பெறுமதி வாய்ந்த மிகுந்த 
அழகிய தமிழில் பேசுவாய் 
ஆண்டுகளை செலவிட்டு 
கண்டையடைந்திருகிறேன் 
உன்னை 
அந்த வேணிட் காலங்கள் 
இந்த காதல் தேசத்தை 
கொஞ்சம் வளப்படுத்தட்டும் 

உணர்ச்சி பெருக்கில் 
உன்னுடன் முரண்பட்ட 
காலத்தை எண்ணி வருந்துகின்றேன் 

மழைகால நிலவாக 
சில காலம் காணாமல் போனாய் 
சோகங்களை மட்டும் இன்னும் 
விடுவதாகவே இல்லை 

வா வழித்தவறியேனும் 
என் பாதையில் நடந்து விட்டு 
போ .........
திறவாய் பெருங்கனவின் நீண்ட 
இரவுகளில் உன் மௌனம் 
கசிந்துருகும் கவிழ்ந்த 
என் இமையின்  அடர்த்தியில் 
புதைந்து கிடக்கும் என் 
காதல் ரகசியங்கள் 

கருத்துகள் இல்லை: