வெள்ளை காகிதம்
எடுத்து பேனாவோடு
நீரோடை அருகில்
உட்கார்ந்து உன் கவிதைகளை
தேடுகின்றேன் .............
கண்ணே ....!
என் பாதங்களை
தொட்டு செல்லும்
ஒவ்வொரு துளி தண்ணீரும்
உன்னை நினைவு படுத்த
என் கவிதைகளுக்கும்
கால் முளைகின்றது ................
கற்பனைகள்
எட்டி நடைபோட
பக்கத்தில் குட்டி தாமரை
ஒன்று தன் அழகை
காட்டிக் கொள்ள
என் விழிகள் தாகம்
தீர்த்து கொள்கிறது ........
கண்ணே .........!
உன்னை நினைத்தால்
அசிங்கமானதையும்
நான் அழகாய் வர்ணிப்பேன்
இவன் வித்தியாசமானவன்
என்றா பார்க்கிறாய்
ஆம் உண்மைதான்
உன்னை காதலித்தவன்
நானாச்சே .!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக