counter

Well Come To My Page

புதன், 9 ஜனவரி, 2013

அழகாய் பூக்குதே

அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொல்லாமல்
உள்ளங்கள் பந்தாடுதே
(அழகாய்..)

ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்
அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும்
காதலன் கை சிறை காணும் நேரம்
காதலன் கை சிறை காணும் நேரம்
மீண்டும் ஒரே கருவரை கண்ட நாளை
கண்ணில் ஈரம்
(அழகாய்..)

கடவுளின் கனவில்
இருவரும் இருப்போமே ஓஹோ
கவிதையின் வடிவில்
வாழ்ந்திட நினைப்போமே ஓஹோஹோ

இருவரும் நடந்தால்
ஒரு நிழல் பார்ப்போமே ஓஹோஹோ
ஒரு நிழல் அதிலே
இருவரும் தெரிவோமே ஓஹோஹோ

சில நேரம் சிரிக்கிறேன்
சில நேரம் அழுகிறேன் உன்னாலே
(அழகாய்..)

ஒரு முறை நினைத்தேன்
உயிர் வரை இனித்தாயே ஓஹோ
மறுமுறை நினைத்தேன்
மனதினை வதைத்தாயே ஓஹோஹோ

சிறு துளி விழுந்து
நிறை குடம் ஆனாயே ஓஹோஹோ
அறை கணம் பிரிவில்
வரைவிட செய்தாயே ஓஹோஹோ

நீ இல்லா நொடி முதல்
உயிர் எல்லாம் ஜடத்தை போல் ஆவேனே
(அழகாய்..)

படம்: நினைத்தாலே இனிக்கும்
இசை: விஜய் ஆந்தோனி
பாடியவர்கள்: பிரசன்னா, ஜானகி ஐயர்

சட்டி சுட்டதடா கை விட்டதடா

சட்டி சுட்டதடா கை விட்டதடா
சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
நாலும் நடந்து முடிந்த பின்னால்
நல்லது கெட்டது தெரிந்ததடா
(சட்டி சுட்டதடா..)

பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதை மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதை மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா
ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா
அமைதி தெய்வம் முழுமனதில் கோவில் கொண்டதடா
(சட்டி சுட்டதடா..)

ஆரவார பேய்கள் எல்லாம் ஓடி விட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடி விட்டதடா
தர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா
தர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா
மனம் சாந்தி சாந்தி சாந்தி என்று ஓய்வு கொண்டதடா
(சட்டி சுட்டதடா..)

எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா
நான் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா
எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா
நான் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா 
(சட்டி சுட்டதடா..)

படம் : ஆலயமணி
இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர் : TM சௌந்தர்ராஜன்
பாடல் வரிகள் : கண்ணதாசன்

உன்னை காதலி என்று சொல்லவா

உன்னை காதலி என்று சொல்லவா
நீ அதற்கு மேலே அல்லவா
உன் கூந்தல் நேர்வாக்கிலே என் காதல் நெடுஞ்சாலை
உன் மூச்சுக்காற்றெல்லாம் அதில் தென்றல் தொழிசாலை
இதுவரைச் சொன்னது கவிதையல்ல
இதற்கு மேல் சொல்ல நான் கவிஞன் அல்ல
(உன்னை காதலி..)

அன்பே உந்தன் பார்வை ஏதோச் சொல்ல
கட்டி அணைத்தால் என்ன
எந்தன் பிரிவுக்கு பதில் சொல்ல
பெண்ணே நீயும் ஒரு கனவல்ல
ஒரு போராட்டம் தான் எந்தன் நெஞ்சுக்குள்ளே
நானும் சொல்ல
அன்னாந்து பார்க்கும் போது
ஆகாயம் நீல நிறம்
மண் மீது பார்க்கும் போது
என் வாசல் கோலம் நீதான்
விரல் நகத்தை கண்டால் கூட
முன் நின்று இரசிப்பேனே
உந்தன் நெஞ்சை கண்டால்
சொர்க்கம் என்றேப் போவேன் நானே
(உன்னை..)

சில்லென்று நீர்ப்போல நானிருந்தேன்
என்னை நீ தொட்டதால்
எந்தன் வெள்ளை தேகம் வெண்ணீராச்சு
கண்ணாடி சிற்பம் போல உன்னைக் கண்டேனே
இவள் முன்னாடி நான் இன்று
என்னை நானே காதல் கொண்டேன்
தீமூட்டும் ஆசையாலே தினந்தோறும் நின்றுப்போனேன்
தாய் வீட்டை நான் மறந்து உன்னோடு ஓடிவந்தேன்
ஆகாயம் பூமியெல்லாம் ஆண்டாண்டு காலமடி
ஆனாலும் என் காதல் அதைத்தாண்டி வாழுமடி
(உன்னை..)

படம்: கந்த கோட்டை
இசை: தீனா
இசை: நரேஷ் ஐயர், சாதனா சர்கம்

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
(அதோ..)

காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே
கடலும் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
(அதோ..)

தோன்றூம்போது தாயில்லாமல் தோன்றவில்லையே
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே
வாழும்போது பசியில்லாமல் வாழ்வதில்லையே
போகும்போது வேறுபாதை போவதில்லையே
ஒரே வானிலே ஒரே மன்னிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
(அதோ..)

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோவில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
(அதோ..)

படம்: ஆயிரத்தில் ஒருவன்
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்: TM சௌந்தர்ராஜன்
வரிகள்: கண்ணதாசன்

என்னவளே என்னை மறந்தது ஏனோ...........

என்னவளே என்னை மறந்தது ஏனோ
எண்ணி வந்தேன் உந்தன் நினைவுகள் தானோ
என்னை சிதைத்தவள் நீ
பின்பு அணைத்தவள் நீ
இன்று விலகிச் செல்லும் எந்தன் நிம்மதி நீ

கண்கள் ரெண்டு ஆன போதும் காட்சிகள் ஒன்றல்லோ
இது புரிந்தும் கொஞ்சம் புரியாமல் நீ கேட்பது முறையல்லோ
காற்று போகும் திசையில் அலைகள் போகுதே
உன் உயிர் போகும் திசையில் என் உயிர் போகுதே
(என்னவளே..)

நான் செல்லும் பாதை முள் மீது போகும் என்றால்
என்றென்றும் அன்பே கரம் கோர்க்க நீயும் வந்தால்
நானும் வந்தால்
நிம்மதி நீளும் 
இல்லை என்றால்
ஜீவன் வாழும்
அன்பே என் ஜீவன் உந்தன் கண்ணில்
ஏன் இன்னும் தாபம் உந்தன் நெஞ்சில்
என் கண்ணில் ஏக்கம்
நெஞ்சம் ஈர்க்கும்
நீதான் என்றும்
உந்தன் சொந்தம்
(என்னவளே..)

பெண்ணே நம் காதல் கை கூடும் நேரம் வந்தால்
ஓ விழியோடு சேரும் என் பார்வை நீதான் என்றால்
நானே என்றால்
மனம் வானம் செல்லும்
சென்ற பின்னால்
மழை சாரல் தூவும்
ஏன் இந்த மாற்றம் எந்தன் நெஞ்சில்
ஏதோ ஒரு மாயம் உந்தன் கண்ணில்
மனம் தேடும் உன்னை
இங்கு தந்தேன் என்னை
நீங்காதென்னை
இல்லை இல்லை
(என்னவளே..)

ஆல்பம்: என்னவளே
இசை: திலீப் வர்மன்
பாடியவர்கள்: திலீப் வர்மன், திலா

என்னுயிரே என்னுயிரே என் ஆருயிரே

என்னுயிரே என்னுயிரே என் ஆருயிரே
என்னுயிரே என்னுயிரே என் ஓருயிரே

கண்கள் தாண்டி போகாதே என் ஆருயிரே என் ஓருயிரே
ஒரு காதலிலே மொத்தம் ஏழு நிலை
இது எந்த நிலை என்று தோன்ற வில்லை
என் ஆறறிவில் ரெண்டு காணவில்லை
என் ஆருயிரே என் ஓருயிரே
வந்து சேர்ந்து விடு என்னை சேர விடு இல்லை சாக விடு

சூரியன் சந்திரன் வீழ்ந்ததிந்து போய் விடும்
நம் காதலிலே வரும் ஜோதியிலே இந்த பூமியிலே ஒளி கூடிடுவோம்
காதலர் கண்களே சூரியன் சந்திரன் ஆகாதோ

கைகள் நான்கும் தீண்டும் முன்னே
கண்கள் நான்கும் தீண்டிடுமே
மோகம் கொஞ்சம் முளை விடுமே
கண் பார்வை முதல் நிலையே

ஆருயிரே என்னுயிரே உள்ளம் கொண்டது ஓர் மயக்கம்
என்னுயிரே காதலில் இரண்டாம் நிலைதான் பால் மயக்கம்
மெய் தீண்டும் நேசம் தொடங்கியதோ
இது காதலின் மூன்றாம் படி நிலையோ
என் உடல் வழி அமிர்தம் வழிக்கின்றதோ
என் உயிர் மட்டும் புது வித வழி கொண்டதோ

என்னுயிரே என்னுயிரே உன்னை கொஞ்சம் தீண்டுவேன்
ஏழ்வகை காதலை எப்போதிங்கே தாண்டுவேன்
இதில் நான்காம் நிலையை அடைந்து விட்டேன்
என் நருமலரே உன்னை தொழுது விட்டேன்
என் சுய நினைவென்பதை இழந்து விட்டேன்
அந்த சூரியன் எழும் திசை மறந்து விட்டேன்
(கண்கள் தாண்டி..)

என் உடல் பொருள் தந்தேன் சரன் புகுந்தேன்
என் உயிரை உனக்குள் ஊற்றி விட்டேன்
இதுதான் காதலில் ஐந்து நிலை
நான் உன் கையில் நீ திவலை

ஒரு மோகத்தினால் வரும் பித்து நிலை
இது மோசமில்லை ஒரு முக்தி நிலை
நம் காதலிலே இது ஆறு நிலை
(என்னுயிரே..)




கவிதைகள் ...






எழுதிப் பாருங்கள் என் போல காதலில் தோற்று ..
எழுதுவது பாவம்
ரசிப்பது புண்ணியம்




அவள்

மனதில் வரைந்த ஓவியங்கள் 
அவளுடனான அவனின் காதலனால் 
உயிர்த்தெழுந்தது 
நான் ஏழை என்பதால் ......








வார்த்தைகள் இல்லை அவர்களை வாழ்த்த ..............

இறைவன் படைத்த இயற்கைகள் அனைத்தும் அவளுக்கு பரிசாக்கட்டும்



அன்னப் பாத்திரமேந்தி 
வீடுகள் தோறும் ஏறியிறங்கும் 
மாலைநேர வாடிக்கைப் பிச்சைக்காரன் 
நான் உன் காதலுக்காக .....................




எங்கோ ஒரு இடத்தை சுற்றி 
நிழலாடிக் கொண்டிருந்தது 
என் காதலில் நம்பிக்கைகள் உன்னை சேரும் என்று ................


என்னை ஒரு காதல் 
எத்தனையோ கண்ணீர்கள் 
அதில் எத்தனையோ கதைகள்


நீண்ட பயணம் 
இறந்த காதல் குழந்தை 
ஆயுள் முழுவது கண்ணீரை அடக்கி வைத்து




என்றாவது ஒருநாள் 
அவளை சந்திக்க நேரிடலாம் 
அப்போதுகூட 
நிச்சயமாக சொல்கிறேன் என்
இறுதி மூச்சில் கலந்திருக்க வேண்டும்
உன் சுவாச பரிசம்


இந்த உலகத்தில்
என்னை இன்னமும் வாழவைத்துக் கொண்டிருக்கும் உன் நினைவுகள்தான்
என்னை தினம் தினம் கொல்லவும் செய்கின்றன...



என் மூச்சு ஒரு நாள்
உன் முகவரி தேடி வரும்
அப்போதாவது திறந்து வை
உன் இதயத்தின் கதவுகளை..




உணர்ச்சிகளை அடக்கி உறங்க நினைக்குறேன்..
உன் நினைவுகளை மறந்து வாழ நினைக்குறேன்..
இரண்டுமே வலிக்கிறதே……
உன் நினைவுகளை போல்.





நீ விட்டு சென்ற தனிமையில் 

மரணம் கூடெ என்னை வெறுக்கின்றது 
தயக்கம் இன்றி பொறுக்கிச்செல்.. 
சிதறி கிடக்கும் என் இதயத்தை



உன்னால் உடைந்த என் மனதை ஒரு முறை ஒட்ட வைத்து தா 
ஆயுள் உன் நினைவுகளை சரி சுமப்பதட்கு



என் காதலை விதைத்தவள் நீ 
பொத்தி  பொத்தி  வளர்த்தவன் நான் 
அதுதானோ வலிகளையும் எனக்கே தந்து விட்டாய் .......



நீ என்னில் கொண்டது பொய்யன்புயானாலும் 
மெய்யாலும் அதை மறந்து வாழ முடியாது ..............


உணர்வுகளுக்கு
உருவம் கொடுத்தது உன் காதலடி ......!