counter

Well Come To My Page

திங்கள், 21 செப்டம்பர், 2015

ஏமாற்றங்கள்

நத்தையாய் தினமும் 
ஊர்கிறது நீ தந்த 
ஞாபகங்கள் 

ஏமாற்றங்கள் 
கண்களை 
அருவியாக்கின 
இருந்தாலும் 
ஓரிரு எதிர்பார்ப்புகள் 
அணைகட்டி விட்டன 

எதிர்பார்ப்புகளுடனே 
நகர்வது தானே 
வாழ்க்கை 

தீச்சுவாலைக்குள் 
தன்னை தியாகித்து 
ஜொலிக்கின்றதே 
தங்கம் 

அதுபோல 
நானும் புடம் 
போடப்படுகிறேன் 
ஏமாற்றங்கள் 
என்ற 
தீச்சுவாலைக்குள் !