counter

Well Come To My Page

திங்கள், 12 நவம்பர், 2012

முடியாத ஒரு நினைவு




காலை எழுந்தேன் 
முடியவில்லை 
ஒரு வகை சோக சயனம் 

ஆடையனிந்தேன் 
உயீர்  இல்லை 
அழகுபடுத்த இஷ்டமில்லை 

பல்கலைக்கழகம் போனேன் 
படிப்போமென்று  முடியவில்லை 
முன்னமே உன்னிடம் 
பாடம் பயீன்றுப்பதால்  

வாசகசாலை 
வந்தேன் வாசிப்போம் என்று 
வாய்ப்பே இல்லை 
தலைப்பில்லா 
ஒரு சோக  நாவல் 
விரிந்து கிடப்பதால் என்னுள் 

தூங்க படுகின்றேன் 
தூக்கமில்லை 
நீ நிதம் நெஞ்சில் 
விழித்திருப்பதால் 

மரிக்க நினைக்கின்றேன் 
முடியவில்லை 
காதலுக்கும் ,கல்விக்கும் 
மரணமில்லை என்பதால் 

உன்னை நினைத்து நினைத்து 
தூற்று போகின்றேன் 
தோல்வியே இங்கு 
லாவகமாக கிடப்பதால் 

கருத்துகள் இல்லை: