எனக்கு கவிதை எழுத
கற்று தந்த நீ
கண தூரம் சென்றுவிட்டாய்
உன் நினைவுகளை
சுமந்தபடி சுமையோடு
இருக்கின்றேன்
என் உயர்வுக்கு ஓயாது
ஜெபித்த நீ என் உயிர்ருக்குள்
இருக்கிறாய்
எந்த ஊருக்குள் நீ இருக்கிறாய்
எனத் தெரியாமல்
உறக்கம் தொலைத்து
நான் நிற்கின்றேன் .....
என் மனத் திரையின்
நிலம் கொத்தி நீ நம்பிக்கை
விதை தூவினாய்
நானின்று விருட்சமாய்
வளர்ந்து நிற்கை இல்
விலகி நீ எங்கே போனாய் .?
என் விளிப்பார்வைகள்
உன்னை
தொட நினைக்கையில் நீ
தொடுவானமாய் போனதால்
என் கணமெல்லாம்
இன்று கனலாய்
சுடுகின்றது -உன் முகம் காண
துடிப்பது
என் கண்கள் மட்டுமல்ல
என் அத்தனையும்
தான் என்பதை எத்தனை
சீக்கிரத்தில் நீ புரிந்து
கொள்வாயோ அன்பே ..?
உன் கரம் பட்ட மறு கணம்
தான் என் விழி நீருமிங்கு
விடை பெரும் என்பதையாவது
விரைவாய் நீ புரிந்து கொள் ...!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக