சிறந்த வாழ்க்கை என்றால் என்ன .?என்பதற்கு பல விதமான கருத்துகளை சொல்லலாம் .மனதை சந்தோசமாக வைத்திருப்பது ,கனவை நனவாக்குவது ,தேவையான குறிக்கோளை நிறைவேற்றுவது சமூகத்தில் சிறந்தரவராக திகழ்வது போன்ற பல விசயங்களை இதில் உள்ளடக்கலாம்
இந்த எந்த விடயத்தை எடுத்துகொண்டாலும் இதில் எதிர்பார்க்க படுவது மனதை சந்தோசமாக வைத்திருப்பது ,கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்தின் உள் நோக்கம் மனதை திருப்தி படுத்துவது தானே .?வேதனை துயரம் ,துன்பம் ,இவைகளில் இருந்து நாங்கள் விடுதலை பெற முயற்சிப்பது ஏன்.?
மனதை சந்தோசமாக வைத்திருக்க தானே.?எங்களுக்கு புரியா விட்டாலும் இது தான் மறைத்திருக்கும் உண்மை ,மனதுக்கு நிம்மதியும் ,அமைதியும் சந்தோசமும் இல்ல விட்டால் உலகத்தில் என்ன இருந்தும் என்ன பயன் .?
எவ்வளவு சொத்து சுகங்கள் இருந்தாலும் ,உடல் அழகு இருந்தாலும் ,கல்வி அறிவு இருந்தாலும் ,வேதனையும் துயரமும் கலந்த வாழ்க்கையாகஇருந்தால்அந்தசொத்தாலும் ,சுகத்தாலும்,அழகாலும் ,கல்வியாலும் என்ன பயன் .?
இதை அதிகமானோர் அறியாமல் இல்லை ,ஆனால் இதை நடைமுறை வாழ்க்கையில் எப்படி கொண்டு செல்வது என்பது தான் அதிகமானோருக்கு உள்ள பிரச்சனை
இது நடைமுறை வாழ்க்கையில் சாத்தியமாகுமா.?
வெற்றி =திருப்தி+வாழ்வு+சேவை இது வெற்றி என்ற சொல்லுக்கு நூற்றுக்கு நூறு வீதமான சரியான கருத்து என்று சொல்ல முடியாது என்றாலும் எங்களுடைய வாழ்க்கையை சிறப்பாக கொண்டு செல்ல இந்த அணுகு முறை தேவைப்படுகிறது.திருப்தி என்பதை அறிந்து கொள்ள அவ்வளவு கஷ்டம் இல்லை ,நாங்கள் விரும்புகின்றவற்றை நிறைவேற்ற ஒருவரினதும் உதவியோ ,அனுமதியோ தேவை இல்லை .நாங்கள் விரும்புகின்றவற்றை தேடி சென்று செய்வோம் .நாங்கள் அப்படி விரும்புகின்றவற்றை சந்தோசமாக செய்கின்ற போது எங்களை அறியாமலே மனதுக்கு திருப்தி விளங்கும்
இதில் தடைகள் ஏற்பட்டாலும் அவற்றை கடந்து சென்று குறிக்கோளை அடைய முயற்சிப்பதுண்டு,நாங்கள் செய்யும் தொழிலானாலும் அப்படி தான் சிலர் தொழில் செய்வது சம்பளத்தையும் ,வருமானத்தையும் எதிர் பார்த்தே தவிர சந்தோசத்தையும்,திருப்தியையும் எதிர் பார்த்தல்ல ....
ஏதோ செய்ய வேண்டும் என்பதற்காகவே செய்கிறார்களே தவிர அதில் கடமை உணர்ச்சியுடன் இல்லை ,உண்மையிலும் நூற்றுக்கு நூறு வீதமாக நாங்கள் திருப்தி அடைய கூடிய தொழிலை கண்டு பிடிப்பது மிகவும் கடினம் ,என்றாலும் மனதுக்கு திருப்தி இல்லாத வேலையை செய்வது அதிலும் மிகவும் கஷ்டமானதாகும் .
அது உள்ளத்தில் வேதனையை உண்டு பண்ண கூடியது ,சிலர் பெரிய உத்தியோகம் அதிக சம்பளம் இவற்றைவிட எதிர் பார்ப்பது திருப்தியைதான் அதனால் தான் அதிகமான வருவாயை தர கூடிய தொழில்களையும் உதறி தள்ளி மனத் திருப்தியை தர கூடிய தொழில்களை தேடி கொள்கின்றனர் .
அடுத்து என்ன இறந்தாலும் எங்களுடைய வாழ்க்கையை கொண்டு செல்வதற்க்கு ஒரு வழியை தேர்ந்தெடுப்பது அவசியம் தானே .?அதாவது உணவு ,உடை,கல்வி இவை எல்லாம் அன்றாட வாழ்க்கைக்கு அவசியம் அல்லவா ,எந்த ஒரு துறவியானாலும் அவருக்கு வாழ்வதற்கான சில அவசிய தேவைகள் இருக்க தான் செய்யும் .
அதை அவரே தேடி கொள்ள வேண்டும் .எங்களுடைய தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்க்கு எமக்கு தேவைபடுவது பணம் தொழில் ஒன்று செய்வதும் இந்த பணத்தை தேடி கொள்ளத்தான் ,ஆனால் சிலர் கிடைத்ததை கொண்டு திருப்தி அடைவது இல்லை ,முழு வாழ்க்கையும் பணத்தின் பின்னால் ஓடியே கழிக்கின்றனர் இந்த பணத்தின் மீது கொண்ட ஆசையினால் இருக்கும் நிம்மதி ,சுதத்திரம்,குடும்ப வாழ்க்கை ,நித்திரை இவை எல்லாவற்றையும் இழக்கின்றனர்.
பணத்தை தேட போய் நோயை பரிசாக பெறுகின்றனர்,இறுதியில் கஷ்ட பட்டு சேர்த்த பணம் மருந்து மாத்திரைக்கு செலவு செய்து விடுகின்றார்கள் ,கடசியில் அறியாமலே முதுமை அடைந்து விடுகிறார்கள் ,இவற்றிக்கு காரணம் பணத்தின் மீது கொண்டுள்ள மோகமே தவிர வேறு ஒன்றும் இல்லை ,இப்படியானவர்கள் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் பணத்தின் பின்னால் ஓடினோமே தவிர அதனால் அடைந்த பலன் ஒன்றும் இல்லை என்பதை உணர்த்து வேதனைப்படுவார்கள்
இந்து காலம் கடந்த ஞாணமாகும்.இன்று போட்டி pootu கொண்டு உழைக்கிறார்களே தவிர வாழ்க்கையை அந்தந்த வயதில் அனுபவிக்க தவறிவிடுகிறார்கள் ,குடும்ப வாழ்க்கையை பற்றி வயது முதிர்ந்த பெற்றோரை பற்றி ,உலகத்தை பற்றி பிள்ளைகளை பற்றி ,உலகத்தை பற்றி அதன் அவசியத்தை பற்றி அவனால் சிந்திக்க முடியவில்லை ,அதற்கான அவகாசமும் அவனுக்கு இல்லை ,பணம் படைத்தவர்கள் சந்தோசமாக வாழ்கின்றார்கள் என்று
நினைக்காதீர்கள் ,நாங்கள் நினைக்க வேண்டியது அதுத முறை தான் சேவை ,எங்களுடைய திருப்திகாகவும் ,பணத்திற்காகவும் நாங்கள் எவ்வளவு பாடு பட்டாலும் உள்ளத்திக்கு உண்மையான நிம்மதி கிடைக்க போவதில்லை
உள்ளதிக்கு சந்தோசமும் நிம்மதியும் ஏற்பட வேண்டுமாயின் எங்களால் எதாவது ஒரு சேவை சமுகத்திற்கு ஏற்பட்டிருக்க வேண்டும் ,எவ்வளவு தான் சொத்து சுகம் இருந்தாலும் ஒரு மனிதனால் தனித்து வாழ முடியாது வாழ்க்கையில் நிமதியை காண வேண்டுமாயின் நிச்சியமாக எங்களுடைய சேவையை மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் .அந்த சேவை சிறியதாக இருந்தாலும் என்றாலும் எல்லா சேவைகளும் பெறுமதி வாய்ந்தவை ,பஞ்சரான டயரை ஒட்டும் பயனின் சேவை இல்லாமல் போனால் எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும் வாகனத்தை வைத்து கொண்டு வீதியில் நிற்க வேண்டியது வரும் என்பதை மறந்து விட கூடாது .வெயில் என்றும் மழை என்றும் பாராமல் உழைக்கும் பாட்டாலியின் வியர்வையினால் தான் காபட் போடப்பட்ட பாதைகளில் வாகனங்களில் பறக்கின்றோம்,எனவே நாங்கள் செய்யும் வேலையும் வருமானத்தை எதிர் கொண்டு செய்தாலும் அதில் ஒரு சேவை இருக்கின்றது என்பதை மறந்து விட கூடாது .
எனவே சிறந்த சந்தோசமிக்க ஒரு வாழ்க்கை தேவையாயின் எங்களால் மற்றவர்களை திருப்திபடுத்தும் விதத்தில் ஒரு சேவை நடத்தி இருக்க வேண்டும் .வாழ்க்கையின் சந்தோஷதிற்க்கும் நிம்மதிக்கும் பணமும் தேவை என்று சொன்னாலும் பணம் தான் முக்கியம் என்று சொல்லி விட முடியாது அதனால் தான் நாங்கள் செய்யும் ஒவ்வரு வேலையிலும் சரி ,சேவையிலும் சரி திருப்தியை காண வேண்டும் ,திருப்திக்காக வேலை செய்வோரிடத்தில் பணம் இரண்டாம் பட்சம் தானே ,சம்பளதித்காக வேலை செய்கிறோம் என்ற உணர்வு அவர்களுக்கு இலகுவில் ஏற்படுவதில்லை.
எனவே இந்த வெற்றியை பற்றிய அணுகுமுறையை நினைவில் வைத்து கொள்ளுங்கள் திருப்தி+வாழுதல்+சேவை என்ற மூன்று காரணங்களையும் சமமாக கொண்டு சென்றால் முழு வாழ்க்கையையும் இன்பமாக்கி கொள்ளலாம்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக