" ...... "
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இன்று என்னவளின் பிறந்தநாள்
தாய் வயிற்றில்
முதல்முறை பிறந்தேன்
உன் அன்பினால்
மறுபடி பிறந்தேன்
பட்டுப்போன இந்த
பட்ட மரத்துக்கு
பசுமை ஊட்டிய
மழைத்துளிகள்
உன் நினைவுகள்
என்றும் உன்னை
எண்ணினேன் உயிராக
எண்ணியதால் நீ
எனக்கு கொடுத்த பரிசு
கண்ணீர் ஒன்றுதான்
என் கண்ணீர் உனக்கு
பன்னீர் என்றால் சொல்
ஒரு முறையல்ல
இன்னும் ஓராயிரம்
முறை அழுது விடுகிறேன்
உன் ஆசைதீர !
நீ கைவிட்டுப் போனாலும்
காத்திருக்கிறேன்
என் காதல் கல்வெட்டுக்குள்
உன்னை எதிர்பார்த்து!
இன்று வரை
புரியவில்லை எனக்கு
நீ என்னை வெறுப்பதன்
காரணம் - தொலைவில்
கூட தெரியவில்லை
உன் பூ முகம்
பிரிவு என்னும்
வலியை என்
உண்மைக் காதலுக்கு
பரிசளித்தாய்
ஆனாலும் உன்னைப்போல
எனக்குத் தெரியவில்லை
என் இதயமாய் இருக்கும்
உன்னைப் பிரிவதற்க்கு
மறந்து விடு என்று
சொன்ன போது நானும்
உன்னிடம் மறப்பதாக
சொல்லிவிட்டேன்
ஆனாலும் உன்
நினைவோடு தினமும்
போராடி
போராடி தோற்று
கொண்டே இருக்கிறேன்
எப்படி உன்னை
மறப்பது
என்று எனக்கு
தெரியாது
அதையும் நீயே
சொல்லிவிடு என்னவளே !







.jpg)



















