நீலமில்லா வானத்தை
பூமி விரும்பாது .!
நீ இல்லாத வாழ்க்கையை
என் மனமும் விரும்பாது .!
நிறுத்தி நிறுத்தி எடுத்து
செல்ல காதல் என்ன பேருந்து
பயணமா .?
உயிருக்குள் நீ வந்து
தங்கிய பின் விலகி செல்ல
நான் என்ன வாடகை வீடா ..?
நிலவென்று உன்னை வர்ணித்தேன்
நீங்கி விடுவாய் என அறியாமல் .!
மலரென்று உன்னை வர்ணித்தேன்
உதிரிந்து விடுவாயென அறியாமல்
அனுதினம் உன் கனவில் வருவதாக
சொல்வாயே நீயே எனக்கு கனவுதான்
என சொல்ல மறந்தாயே ......!
திரும்ப திரும்ப நினைத்தாலும்
திரும்பி நீ வர மாட்டாய் என என்
மனதுக்கு தெரியவில்லை ....!
உள்ளதை கொள்ளையடித்த என்
உணர்வுகளை அழ வைத்து
சென்று விட்டாயே .............!
என்னை மணப்பேன் என நீ தந்த
வாக்குறுதியெல்லாம் என்ன
நீ எனக்கு போட்ட வாய்கரிசியா ..?
உன் எல்லாம் பாகங்களையும்
மெழுகாய் செதுக்கிய பிரம்மன்
இதயத்தை மட்டும் கற்களால்
செதுக்கி விட்டான் போல
என் கல்லறைக்கு அதிலிருந்து
கல் நிரப்ப ..................!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக