நிஜங்களை எப்போதும்
இரசிப்பதற்கு அலை
மோதும் என்
கண்களுக்கு விருந்தாக
கிடைப்பது நிழல்களே .!
நிழல்களை
நிஜங்களென்று
அறியாத என்
அப்பாவிக் கண்கள்
நிலை மறந்து
சில கணங்கள்
சிலையாகிப் போனதுண்டு
சொற்களால் சோடிக்கப்பட்ட
காதல் மொழிகளில்
கசிந்துருகி
காயம் கண்டுவிட்ட போதும்
முகமூடிக்குள் ஒளிந்திருக்கும்
முகங்களை என்னால்
அடையாளம்
காண முடிவதில்லை
வண்ணங்களின் வனப்புகளில்
மயங்கிபோய்
தாளாத துன்பத்தில்
வீழ்ந்து தவித்தபோதும்
இன்னும் நிழல்களை
நிஜங்களென்று நம்பும்
அறியாமை தொடர்கிறது