counter

Well Come To My Page

புதன், 9 அக்டோபர், 2013

பல்லாக்கு வாங்கப் போனேன்

கண்ணதாசனிடம் ஒரு சாதாரணமான அம்பாசிடர் கார் இருந்தது .ஒரு நண்பர் தன் வைத்திருந்த வெளிநாட்டு காரை விற்கப்போகிறார் என்ற தகவல் அவர் காதில் விழ ,அந்த வெளிநாட்டு காரை வாங்க மிகவும் ஆர்வமாக இருந்தார் கவிஞர். இருவரும் பேசி காரின் விலையை  கூட முடிவு செய்துவிட்டார்கள் .முழுப்பணத்தையும் கொடுத்து வாங்க முடியாத நிலமையில் இருந்தார் கவிஞர் .எனவே மூன்றில் ஒரு பங்கு பணத்தை மட்டும் உடனே அட்வான்சாக கொடுப்பது என்றும் மீதி பணத்தை விரைவில் கொடுத்துவிடுவது என்றும் இரண்டு பேரும் பேசி சம்மதித்து இருந்தார்கள் 

கவிஞர் தன்னிடம் வரப் போகும் புது வெளிநாட்டு கார் பற்றிய கனவுகளில் மூழ்கினார் .ஒரு குறிப்பிட்ட நாளில் நண்பரின் வீட்டுக்கு போய் காரை எடுத்துக்கொண்டுவர முடிவு செய்திருந்தார் .ஆனால் ,அதற்கு முதல் நாள் அந்த நண்பரின் சில நண்பர்கள் " பண விடயத்தில் கண்ணதாசன் ரொம்ப மோசம் " அவருக்கு ஊர் முழுக்க கடன் இப்போது அட்வான்சாக கொடுத்துவிட்டு காரை எடுத்துக்கொண்டு போய்விடுவார் .ஆனால் ,அதன் பிறகு அவரிடமிருந்து மீதி பணம் வரும் என்பதற்கு உத்தரவாததமில்லை " என்று போட்டு கொடுக்க ,காரை கண்ணதாசனுக்கு விற்க சம்மதித்திருந்த நண்பர் பல்டி அடித்துவிட்டார் .

இது தெரியாமல் மறு நாள் காலை ,வெளிநாட்டு காரை எடுத்து கொண்டு வருவதற்கு தன்னுடைய டிரைவரை அழைத்துக்கொண்டு நண்பர் வீட்டிற்கு போனார் கண்ணதாசன்.நண்பரோ மிகுந்த தயக்கத்தோடு தன்னுடைய முடிவை மாற்றி கொண்டதை நேரடியாக சொல்லாமல்  "இந்த கார் எங்கள் குடும்பத்துக்கு ரொம்ப ராசி .!எனவே விற்க வேண்டாம் என்று என் மனைவி சொல்லுகிறாள் .எனவே தற்போது காரை விற்பதாக இல்லை " என்று சொல்லிவிட்டார் .இது கண்ணதாசனை  மிகவும் கலங்கசெய்தது 

அன்று மத்தியானம் இயக்குநர் ராமண்ணா டைரக்ஸனில் ம்க்ர் நடித்த "பணக்கார குடும்பம்" படத்துக்காக சோகமான காட்சியில் ஒரு பாட்டு எழுத வேண்டி இருந்தது .கார் வாங்குற விடயத்தில் தமக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தின் தாக்கம் அந்த சமயத்தில் அவர் எழுதிய பாட்டில் வெளிப்பட்டது .பாடலை இப்படி தொடங்கினார் கண்ணதாசன்.....

பல்லாக்கு வாங்கப் போனேன் ஊர்வலம் போக நான்
பாதியிலே திரும்பி வந்தேன் தனி மரமாக

பாடல்: பல்லாக்கு வாங்கப் போனேன்
திரைப்படம்: பணக்காரக் குடும்பம்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
ஆண்டு: 1964

பல்லாக்கு வாங்கப் போனேன் ஊர்வலம் போக நான்
பாதியிலே திரும்பி வந்தேன் தனி மரமாக
பல்லாக்கு வாங்கப் போனேன் ஊர்வலம் போக நான்
பாதியிலே திரும்பி வந்தேன் தனி மரமாக

மல்லிகைப் பூ வாங்கி வந்தேன் பெண்ணுக்குச் சூட
மல்லிகைப் பூ வாங்கி வந்தேன் பெண்ணுக்குச் சூட அதை
மண்மீது போட்டுவிட்டேன் வெய்யிலில் வாட வெய்யிலில் வாட

பல்லாக்கு வாங்கப் போனேன் ஊர்வலம் போக நான்
பாதியிலே திரும்பி வந்தேன் தனி மரமாக

மணமேடை போடச் சொன்னேன் மங்கலமில்லை
மணமகளைக் காண வந்தேன் குங்குமமில்லை
மணமேடை போடச் சொன்னேன் மங்கலமில்லை
மணமகளைக் காண வந்தேன் குங்குமமில்லை
காதலுக்கே வாழ்ந்திருந்தேன் கற்பனையில்லை
கல்யாணம் கொள்வது மட்டும் என் வசமில்லை என் வசமில்லை

பல்லாக்கு வாங்கப் போனேன் ஊர்வலம் போக நான்
பாதியிலே திரும்பி வந்தேன் தனி மரமாக

கண்ணாலே பெண்ணை அன்று கண்டது பாவம்
கண்டவுடன் காதல் நெஞ்ஜில் கொண்டது பாவம்
கண்ணாலே பெண்ணை அன்று கண்டது பாவம்
கண்டவுடன் காதல் நெஞ்ஜில் கொண்டது பாவம்
கொண்ட பின்னே பிரிவைச் சொல்லி வந்தது பாவம் வெறும்
கூடாக பூமியில் இன்னும் வாழ்வது பாவம் வாழ்வது பாவம்

பல்லாக்கு வாங்கப் போனேன் ஊர்வலம் போக நான்
பாதியிலே திரும்பி வந்தேன் தனி மரமாக
பல்லாக்கு வாங்கப் போனேன் ஊர்வலம் போக நான்
பாதியிலே திரும்பி வந்தேன் தனி மரமாக

கருத்துகள் இல்லை: