counter

Well Come To My Page

புதன், 11 ஜூன், 2014

காதலிக்க நேரமில்லை


முட்கள் நகர்ந்தன 
நேரம் காட்டவில்லை 
கடிகாரம் 
யாரோ சொன்னார்கள் 
காதலிக்க நேரமில்லை .!

காதல்


மின்மினிகளின் முதலிரவு 
நாளைய அழகை காண 
அஸ்திவாரம் காதல் .!

விதி

மனித ஆயுளில் 
கண்ணீர் சேமிக்கும் 
சுமையான விதி 
காதல்.....!

உன் நினைவு

உன் நினைவுகளில் நான் 
அடிக்கடி விழுந்து கொள்கிறேன் 
நடக்க எத்தனிக்கும் - ஏழு 
மாத குழந்தை போல .!

நீ


தொலைந்த இதயத்தை 
தேடி வந்தேன் 
நீயோ வேறொரு 
சிறை கூண்டில் . 

யார் நீ .?


மலருக்கு வாசம் கொடுத்தவள் நீ 
முள்ளை மலராக்கியவள் நீ 
கடல் நீரை குடிநீராக்கியவள் நீ 
வாழ்வின் வசந்தத்தை புரியவைத்தவள் நீ 
பாசத்தை உணர வைத்தவள் நீ 
பல ஆண்களை அலையை வைத்தவளும்  நீ 
சில ஆண்களின் முகத்தில் தாடியை வளர
 வைத்தவளும் நீ 
யார் நீ ...?
வானத்தில் இருந்து தடம் மாறி 
பூமியில் பிறந்த தேவதையா .?

தனிமை


இன்பத்தின் அரவனைப்பில் 
இணையும் உறவுகள் 
துன்பத்தின் பிடியில் 
சிக்கிக் சுழலும் போது 
உறவைக் கத்தரித்து 
உருமாறிப் போவதேனோ ...?

கற்று கொ (கெ)டுத்தவள்


காதலிக்க கற்றுக் கொடுத்த காதலியே 
ஏன்  நீ மறப்பதற்கு கற்றுக் கொடுக்காமல் 
சென்று விட்டாய் ..? 

ஒரு தலைக் காதல்





உள்ளத்தில் ஓய்வில்லாமல் ஒத்திகை
பார்த்து அரங்கேற்றம் செய்யப்படாத நாடகம் .!
வெட்கத்தால் மனம் திறவாமல்
பேசிக்கொள்ளும் ஊமை .

மரணம்


இயந்திர மனிதனுக்கு 
ஊதியம் இல்லாத ஓய்வு 
மரணம் .................

வலிகள் ......!



அழிந்து விடுமா  என்ற அச்சம் கரைமுழுக்க 
அவள் காலடி தடங்கல் - சில சமயம் தலையே 
வெடிக்க இருக்கும் தலைவலியைக் கூட 
தாங்கி கொள்கிறேன் - இருந்தும் தலைவலி 
தந்த வலிகள் தாங்க முடியாமலே ...............!

கொஞ்ச கொஞ்சமாக கொலை செய்பவளே 
உனக்கு கொழுப்பு அதிகம் தான் ...!
நீ தூங்கும் வேளையில் உன்னை பற்றி 
அதிகமாய் எழுதுகிறேன் - எதிரில் தோன்றியதும் 
எழுத்துக்களையெல்லாம் கொளுத்தி விட்டு போகிறாய் ....!

திரையிட வேண்டும் உன் விழிகளுக்கு - அதுவரை 
வைத்தியம் தர வேண்டும் என் வலிகளுக்கு ...!
காரணம் தவறினால் மட்டுமல்ல காதல் 
தவறினாலும் மரணமே ...........!

பொற்சிலையே


சிற்பி செதுக்காத 
பொற்சிலையே 
என் சித்தத்தை 
நீயறியாயோ ..?..........

ரதி தேவி


நீ என்ன அந்த 
ரதி தேவி வடிவான 
சிலையா .?
இல்லை ரவி ராஜன் 
எழுதாத கவியா ..?

காதல் சுகமானது




கண்களில் காந்தமும் 
பாதங்களில் முற்களும் 
வார்த்தையில் விசமும் 
கொண்டு - புன்னகையால் 
கொள்ளும் உன் காதல் 
சுகமானது .

அவள்


அவள் 
என் கனவு மேகங்களை 
காதல் புயல் வீசி 
சென்றவள்.


மனைவி


மனைவி 

எந்தப் பத்திரிகையிலும் 
வராத கவிதை எனக்கு 
பக்கத்தில் பிரசுரமாயிருந்தது 
திருமண பத்திரிகையில் .



அப்படியா


அப்படியா ...?
ஆண் .....
இதயத்தின் அவஸ்தை
உனக்கெங்கு புரியும் .?
அதன் வருத்தம்
உனக்கெப்படி தெரியும் ..?
உன்னைத்தான் "பெண் "
என்கிறார்களே .!

நீ


உன்னுடைய பழுத்த 
மேனிக்கும் 
பழப்பளப்பான 
தோளுக்கும் 
ஆசைப்பட்டு 
I LOVE YOU சொல்லும் 
ஒருவனுக்கு 
"ஓகே " சொல்லிவிடு 
ஏனென்றால் 
நீ இன்றைய சமுதாய 
பெண்ணல்லவா ...........! 

அவள் நினைவுகள்

அவள் நினைவுகளை  
அடைகாக்கும் 
வெப்பத்தில் ஒரு 
ஜீவன் வெந்துக்கொண்டிருக்கிறது .

மழை


முத்துக்கள் போல 
பூமியின் மீது பொழியப்படும் 
தண்ணீர்த்துளி 

செவ்வாய், 10 ஜூன், 2014

பேனை




என்
சிந்தையில் சிலிர்த்த
சில கீறல்களுக்கு
உடன் உயிரூட்டி 
உருவம் .

திங்கள், 9 ஜூன், 2014

நிலவு


நான் முத்தமிட நினைக்கும்
பூந்தோட்ட காவல்காரன் .

பேனாவின் கண்ணீர்



உன் நினைவுகள் என்னை 
தாக்கும்  பொழுது என் 
விரல்களுக்கிடையில் சிக்கிக் 
கொள்ளும் பேனா 
சில நேரம் புன்னகையும் 
பல நேரம் கண்ணீரும் சிந்துகின்றது .



ராட்சஸி


நான் உன்னை அனுஅனுவாய் 
ரசிப்பதால் 
நான் ரசிகன் 
என்னை அனுஅனுவாய் 
கொல்வதால் 
நீ ராட்சஸி .......



என் கல்லறை மீது


யாரேனும் இங்கு அழ நேர்ந்தால் அது 
அவளுக்காகத்தான் 
கல்லறைப் பூக்கள் அனைத்திலும் 
அவளின் வாசனை 
இவன் சுயநலவாதி 
அவளுக்காய் 
மட்டுமே வாழ்ந்தவன் 
உன் பாதத்தை நோகச் 
செய்யும் என் கல்லறை பூக்களை மன்னித்து விடு ......


I LOVE YOU - NISHA


  
A       =   ன்னுடைய பார்வையின் 
B       =   ம்பமாய் இருப்பவளே - உன்  
C       =   ங்கார கூந்தலே 
D       =   சம்பர் பூ தவழுதடி ! உன்   
E       =   தழ் சிந்தும் புன்னகையை  
F        =   ப்போதும் பார்த்தால் என்னுள்ளம்  
G       =   ல் என குளிருதடி 
H       =   ச்சில் குளித்தெழும் உன் நாக்கு - என்  
I        =   ம்புலன்களையும் அடக்குதடி 
J        =   ன்னல் பார்த்து 
K       =   லி செய்யும் உன் விழியிரண்டும்  
L       =   ல்லை இல்லா இன்பமடி  
M      =   னம் மாத்திரம் உன்னை நினைப்பதால்   
N       =   ன்னுடைய மூச்சிலும் பேச்சிலும் 
O       =   டி மறைகின்றாய் என்னவளே 
P        =   பன்னிப் பிணைந்த என் இதயமானது 
Q       =   விலே நிற்குதடி உன்னிடம் வரம் கேட்க 
R       =   ராரோ பாடும் என் அன்புக்கு 
S        =   என நீ கூறும் வரை 
T       =   க் டிக் என துடிக்குதடி என் இதயம் 
U       =   லகில் எனக்கு யாருமில்லை உன்னைத்தவிர 
V       =   ண்ணுலகம் போனாலும் மறவேன் உன்னை 
W      =   ould be என உனைக் கொண்டேன் - என்னை 
X       =   ரே எடுத்துப்பார் அதில் உன் உருவம் இருக்கும்  
Y       =   es என உன் இதயம் அசையாவிட்டால் 
Z       =   ero என்னும் மரணக் குழிக்குள் நான் விழுந்து விடுவேன் 


A TO Z காதல்



A       =   னது டைரிகளில் 
B       =   ரிந்து போன உன் நினைவுகள் 
C       =   தறிய இதயக் கண்ணாடியில் 
D       =   னமும் உன் பிம்மங்கள்  
E       =   தயங்கள் பிரிந்தாலும் 
F        =   ப்பொழுதும்  உன் நினைவுத்துடிப்புகள் 
G       =   வனுக்குள் உறைந்து போன 
H       =   ச்சரிகை கருவியை உன் விழிகள் 
I        =   ந்து மணி ஆணவுடன்  
J        =   ன்ம சந்தோசமடைந்த நாட்கள் - நான் 
K       =   ட்காமல் வாங்கித் தந்த 
L       =   லா புத்தகத்திலும் உன் பெயர்கள் 
M      =   னதிற்குள் புன்னகை வரச்செய்து  
N       =   ளும் மகிழ்ச்சி தந்த நாட்கள்  
O       =   ரு நாளுமில்லாத திருநாளாய் 
P        =   ன் வீட்டு ஜன்னலிலிருந்து நீ 
Q       =   டுத்தனுப்பிய காதல் கவிதைகள் 
R       =   ரமாய் நான் காதலை சொல்ல 
S        =   ரமமின்றி நீ  
T       =   ருந்திவிடு  - இது நட்பென்றாய் 
U       =   கம் அனைத்தும் எனக்குள் 
V       =   ழுந்து விடுமாறு உன் 
W      =   edding கார்டை கையில் திணித்தாய் - நட்புக்கு 
X       =   சாம்பிளாக இருப்போம் என்றாய் - ஆனாலும் 
Y       =   ய்ந்து போன உன் நினைவுகள்  
Z       =   oom ஆகிக்கொண்டு தானிருக்கிறது 

மனித மூளை


மனித மூளையின் எடை சுமார் 1400 கிராம் இருக்கும் .மனிதனின் ஒட்டுமொத்த எடையில் இது 2.5 சதவீதம் .

மனித மூளையின் மடிப்புகளை விரித்தால் சுமார் 2500 ச.செ.மீ பரப்பளவு இருக்கும் .

சாதரணமாக தன மூளையில் 90,000 கோடி சொற்களை நினைவுபடுத்திக் கொள்ள முடியும் .

இரத்தத்தில் உள்ள 25 சதவீத பிராண வாயு மூளையால் பயன்படுத்தப்படுகின்றது .

15 வினாடிகளுக்கு ஒரு துளி இரத்தம் கூட மூளைக்கு செல்லாமல் தடைப்பட்டால் மயக்கம் வந்துவிடும் .

இதயத்திலிருந்து பம்ப் செய்யப்படும் இரத்தத்தில் 20 சதவீதம் மூளைக்கு செல்கிறது .

35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தினமும் மூளையில் உள்ள நரம்பு செல்கள் குறைந்து கொண்டேயிருக்கும் .இதனால்தான் வயதாகும் போது  ஞாபக மறதி ஏற்படும் .

உடலில் வலி எங்கு ஏற்பட்டாலும் அதை உணர்வது மூளைதான் .ஆனால் மூளையில் ஏதேனும் காயம் ஏற்பட்டால் அந்த வலியை உணரும் சக்தி மூளைக்கு கிடையாது .

மூளையில் இரத்தம் உறைதல் அல்லது மூளையின் இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டால் பக்கவாதம் உண்டாகும் .

அவளும் அதுவும்



பைத்தியகாரியாகினால் கந்தல் கட்டி 
பிச்சைகாரியாகினால் வாழ்க்கை 
வெள்ளத்தால் அள்ளுண்டு போய் 
பட்டனத்து தெருவோரம் கரையொதுங்கினால் 

இன்று அவள் துணை கோர முகம் 
கொண்ட கூடவே திரியும் சொறி 
நாய் தான் 

இளமை அவள் மீது எழிலைத் தெளித்த போது 
ஆசை மொழிகள் உதிர்த்து அவளை அணைத்து ,
அனுபவித்து முடிவில் நானறியேன் என 
கூறி மறைந்த ஆறறிவு நாயைவிட 
எச்சில் சோற்று நன்றிக்காய் இடையறாது 
அவளைத் தொடரும் இந்தச் சொறிநாய் எத்தனையோ 
மேலானது 

போகும் வழி எங்கே ...?
பொழுது விடிவது எங்கே ....?
என்றறியா அவளுடன் பயணிக்கும் நாயின் 
பயங்கரத் தோற்றத்துக்கும் பயமற்ற 
உறுமல்களுக்கும் பயந்து இரவு திரைமறைவில் ,
அவளைத் தொட முயன்று தோற்ற சில பண்புகெட்ட 
மனித நாய்கள் ஒட்டமெடுத்தன இருளைக்   
கிழித்துக் கொண்டு ..

வாகனங்கள் எத்தனை ..?
பாதை நீதிகள் எத்தனை ..?
மஞ்சள் கோடுகள் எத்தனை ..?
அதை மதிப்பவர்கள் எத்தனை ..?
கண்களை மூடிக்கொண்டு பாதையைக் கடப்பாள் 
அந்தப் பாவை ;...
பெண்ணவளை நம்பிக் கொண்டு பின் தொடர்ந்தது 
நாயும் .

ஒரு நாள் ,
பேருந்தில் அடிபட்டு பேதையவள் தான் 
இறந்தாள் பின் சென்ற நாயதுவும் 
பின் சில்லால் மாண்டதுவே ...!

என்றும் உன் நினைவுகள்


நொடிக்கு ஒரு நிமிடம் 
உன் நினைவுகளால் - நான் 
நொந்து கொண்டிருக்கிறேன் 
உன்னை மறக்க முடியாமல் 
காதலில் பிரிவுகள் - காதலை 
அதிகரிக்கும் என்பார்கள் - நம் 
காதல் பிரிவு - இன்னொரு 
காதலனை உனக்கு தந்துவிட்டது 
இன்னொருத்தியின் நிழலைக்கூட 
என் மனம் பார்க்க மறுக்கின்றது 
நீயோ ...! இன்னொருவனின் 
நினைவுகளை என்றும் சுமக்க 
ஆயத்தமாகிவிட்டாய்  !
உண்மையான காதலுக்காய் 
உயிரையும் கொடுப்பார்கள் 
ஊமையாகி போன நம் காதலுக்காய் 
உன்னையே கொடுத்துவிட்டேன் 
இன்னொருவனுக்கு ...
பாசத்தை தவிர உன்னிடம் 
நான் எதையும் கேட்கவில்லை 
வேஷத்தைத் தவிர உன்னிடம் 
நான் எதையும் பெறவில்லை 
காலமெல்லாம் உயிர் மனைவியாக 
இருப்பாய் என நினைத்தேன் 
கல்லறையிலும் அது - வெறும் 
கனவாகிவிடும் என நினைக்க 
மறந்தேன் .