counter

Well Come To My Page

வியாழன், 29 நவம்பர், 2012

என் கனவுகள்



என் கனவுகள் ..........!

என் இமைகள் உறக்கம் 

தழுவிட மறுக்கின்றது ..........
ஏனெனில் என் இதயத்தில் 
உன் நினைவுகள் 
விழித்திருந்து விளையாடும் 
செல்லக் குழந்தைகள் 
என்பதினால் ....!

என் உள்ளமும் உயிரும் 
உன் வரை எண்ணி காத்திருக்க 
என்  உணர்வுகளை புதுப்பித்தவளே 
எப்போது வருவாய் என் கனவுகளின் 
நிஜம் காண .............................................

நான் உன் அடிமை



என்னால் .............
இயன்றது ..........
இப்போது எதுவுமே 
இல்லை ...!

எல்லாமே உன்னால் 
முடிந்ததுகளாகவும் ....
முடியாதவைகளாகவே ..........

எத்தனை  கர்வம் ........
எத்தனை வீரம் ......
எத்தனை  துணிச்சல்......
எத்தனை  ஆவேசம் ........
இருந்த என்னில் ......

இன்று எல்லாமே 
நீரில் பூத்த .....
நெருப்பாய்  நிலை 
இன்றி போயிற்று .........!

நீயே என் உயீர்ராகி 
உன் அன்பே என் நிம்மதியானதால் ..................!

வலியும்  இனிக்கிறது .........
வதைகளும் சுவைக்கின்றது ..........
தேனும் புளிகின்றது ...........
காதலே நீயே என் ............

சுவைகளின் சிகரமாகி 
உனக்கே நான்...............
அடிமையானதால் ................!

பிரிவின் துயரம்


என் இனியவளே .!
கனமாகி இதயம் 
கவலைகளால் கண்ணீர் 
வடிக்கிறது  கல்லடி பட்ட 
காயமா .?-இது காதல் தந்த காயம் 
ஆறாத ரணங்களாய் .............................

காதல் காயங்களுக்கு 
கண்ணீர் தான் மருந்தா .....?
கண்ணீர் கூட காயங்களை 
ஆற்றாத போது -நீ தந்த காதல் 
காயங்களுக்கு மருந்தை எங்கே 
தேடுவேன்...?எப்படி ஆற்றுவேன் .?

வசை பாடும்  மனித இனம் 
சகித்து கொள்வதா ..?
மெல்லவும் முடியவில்லை 
விழுங்கவும் முடியவில்லை 
ஜீரணிக்க முடியாத உன் பிரிவு 
துயரில் சிக்கித் தவித்து 
நித்தமும் வாடுகின்றேன் நான் 
வேதனையில் ..! 

புதன், 28 நவம்பர், 2012

நண்பனே உனக்காக .....


ஒன்றுமில்லாது 
பூமிக்கு வந்த போது 
புது பொலிவைத் தந்து 
விட்ட என் பெற்றோருக்கு 
நன்றி .!


புரியாத புதிராக

நானிருந்த போதினில்
புதிருக்கு விடை தேடித்
தந்த என் ஆசானுக்கு
நன்றி .!

எல்லாம் இருப்பினும்
பாசம் என்னவென்று
இருக்க வேண்டும் என்று
உணரவைத்த என் காதலிக்கு
நன்றி ............!

நண்பரென்று நம்பி பின்
நடு வீதியில் கிடக்கும்
நாயென்று
ஆகும் முன்பே ஏமாற்றத்தை
மட்டும் தந்து விலகி சென்ற
என் நண்பர்களுக்கு
மிக மிக நன்றி



வெள்ளி, 23 நவம்பர், 2012

கனடாவின் ஹைக்கூ


கனடாவின் ஹைக்கூ ................"நிஷாந்தினி"

உன் அரசாங்கம் என் காதலுக்கு 

போட்ட வரிதான் "கவிதை"

கவிதைகளில் உன்னை எழுதினால் 
கட்டாயம் எழுத்துகளுக்கு கலர் 
அடிப்பேன் .!

காதல் தீவிரவாதி ஆனதே 
கவிதைகளை துப்பாக்கிகள்ளாக்கி 
கொண்டுதான்................ 

உன் ஒரே பார்வைக்கு 
நிறையக் கவிதைகள் .!
என் நிறையக் கவிதைகளிலும் 
உன் ஒரே ஒரு காதல் .....!

மனசுக்குள்-காதல் மழை 
பெய்கையில் காகிதங்களில் 
கவிதை வெள்ளப்பெருக்கு............ !

உன் புன்னகைகளோ....... .!
என் புதுக் கவிதைகள்........ !
இடையிடையே -நீ வெட்கபடுவது 
கனடாவின் ஹைகூக்கள் .!

காதலை விட கவிதைகளை 
அதிகம் நேசிக்கிறேன் 
கவிதைகளை விட -அதிகம் 
உன்னை நேசிக்கின்றேன் 

மனசின் கரங்கள்



வாழ்க்கை என்பது 
விசித்திர சமுத்திரம் 
அது 
பக்கத்தில் இருப்பதை 
புறக்கணிக்கிறது 
தூரத்தில் இருப்பதை 
நேசிக்கிறது 
இடைவெளி தான் மனதை 
கவர்கிறது 
தொலைவு தான் இதயத்தை 
இணைகிறது ..!

நாம் 
நினைக்கிறபோது 
நேர்கிற இன்பம்  
அது நிகழும்போது 
கிடைக்கும் சுகத்தை 
விட அதிகமானது .!

ஏனெனில் 
மனசினுடைய 
கரங்களின்  எண்ணிக்கை 
மனிதனின் கரங்களை விட 
ஆயிரம் மடங்கு 
அதிகமானவை ......


திங்கள், 12 நவம்பர், 2012

அனுபவங்கள் !



நீலமில்லா வானத்தை 
பூமி விரும்பாது .!
நீ இல்லாத வாழ்க்கையை 
என் மனமும் விரும்பாது .!
நிறுத்தி நிறுத்தி எடுத்து 
செல்ல காதல் என்ன பேருந்து 
பயணமா .?

உயிருக்குள் நீ வந்து 
தங்கிய பின் விலகி செல்ல 
நான் என்ன வாடகை வீடா ..?
நிலவென்று உன்னை வர்ணித்தேன் 
நீங்கி விடுவாய் என அறியாமல் .!

மலரென்று உன்னை வர்ணித்தேன் 
உதிரிந்து விடுவாயென அறியாமல் 

அனுதினம் உன் கனவில் வருவதாக 
சொல்வாயே நீயே எனக்கு கனவுதான் 
என சொல்ல மறந்தாயே ......!

திரும்ப திரும்ப நினைத்தாலும் 
திரும்பி நீ வர மாட்டாய் என என் 
மனதுக்கு தெரியவில்லை ....!

உள்ளதை கொள்ளையடித்த  என் 
உணர்வுகளை அழ வைத்து 
சென்று விட்டாயே .............!

என்னை மணப்பேன் என நீ தந்த 
வாக்குறுதியெல்லாம் என்ன 
நீ எனக்கு போட்ட வாய்கரிசியா ..?
உன் எல்லாம் பாகங்களையும் 
மெழுகாய் செதுக்கிய பிரம்மன் 
இதயத்தை மட்டும் கற்களால் 
செதுக்கி விட்டான் போல 
என் கல்லறைக்கு அதிலிருந்து 
கல் நிரப்ப ..................!

நான் கருப்பன் தான்



நான் காதலை 

சொன்ன போது 
பைத்தியம் என்றாள் 
பரதேசி என்றாள் 
கறுப்பன் என்றாள் 
அனைத்தையும் கேட்டு 
நான் வாய் விட்டு 
சிரித்தேன் 
நீ சொன்னது எல்லாம் 
உண்மையே என்று ......

உன்னை எண்ணி அடிக்கடி 
யோசிப்பது  உண்மையே 
யோசிப்பதால் நான் பைத்தியம் 
தான் 
உன் பின்னே காதலுக்காக 
அலைந்து ஏங்கி திரிவதால் 
நான் பரதேசி தான் 

மழை  வெயில் பாராது 
உன் அன்புக்காக அலைந்து 
தேகம் கறுத்திருப்பதால் 
நான் கருப்பன் தான் 

ஒரு நிமிடம் .!



வெள்ளை காகிதம் 
எடுத்து பேனாவோடு 
நீரோடை அருகில் 
உட்கார்ந்து உன் கவிதைகளை 
தேடுகின்றேன் .............

கண்ணே ....!
என் பாதங்களை 
தொட்டு செல்லும் 
ஒவ்வொரு துளி தண்ணீரும் 
உன்னை நினைவு படுத்த 
என் கவிதைகளுக்கும் 
கால் முளைகின்றது ................

கற்பனைகள் 
எட்டி  நடைபோட 
பக்கத்தில் குட்டி தாமரை 
ஒன்று தன்  அழகை 
காட்டிக் கொள்ள 
என் விழிகள் தாகம் 
தீர்த்து கொள்கிறது ........

கண்ணே .........!
உன்னை நினைத்தால் 
அசிங்கமானதையும் 
நான் அழகாய் வர்ணிப்பேன் 
இவன் வித்தியாசமானவன் 
என்றா பார்க்கிறாய் 
ஆம் உண்மைதான் 
உன்னை காதலித்தவன் 
நானாச்சே .!

இதயத்து கீறல்கள்



உன் நினைவுகளை  
மீட்டுவதை 
இன்றோடு நிறுத்திகொள்கிறேன் 
நான் ஒரு துரதிஷ்டசாலி .!
என் தெரியுமா .?
அதிஷ்டம் என்பது 
எனக்கு 
வெகுதூரம் .............

அன்புக்கு ஏங்கும்  போது 
அது கிடைக்காத போது 
அன்பை தேடுவது -எனக்கு 
நியாயம் இல்லை அல்லவா .?

உன்னோடு கை கோர்க்க 
ஆசைப்பட்ட எனக்கு கிடைத்த 
பரிசு -நீ இன்னொருவனின் 
இதயம் 
உன்னை மலரென பறிக்க 
நினைத்து -என் இதயத்தை 
காயப்படுத்தியது தான் மிச்சம் 
என் இதயம் சிந்தும் இரத்த 
துளிகள் என் கண்களை ஒரு கணம் 
கலங்க வைக்கின்றன 

உன்னை நினைத்ததன் விளைவு 
என்ன தெரியுமா ?-என் இதயத்துக்கு 
கீறல்கள் மட்டுமே ...................

காத்திருப்பேன்........!




என் தேவதையே 

கவியும் எழுதுவேன் 
என 
எனக்கே தெரியாத வரிகளை 
உன்னை நினைத்து எழுத 
வைத்தாய் .!

நீ என்னிடம் காதல் சம்மதம் 
கேட்டு என்னை மீண்டும் 
பிறக்க வைத்தாய் 
காதல் கருவறையில் .!

அதனால் மறந்தேன் 
என் தாயின் கருவறையை 
இழந்தேன் உறவு வலையை 
நீ வீசிய காதல் வலையில் 
அகப்பட்ட மீனாக துடித்தேன் .!

நீ என்னை வெறுத்து விட்டு 
என் நினைவுகளை அழைத்து 
சென்றதால் உன்னை 
சுமந்த மனதுடன் 
காத்திருப்பேன் உன் 
மணவாழ்க்கை 
அழைப்பிதழ் வரும் வரை 
உன் அழைப்பிதழ் என்னை 
அழைக்காதபோதும் 
வாழ்வின் 
இறுதி வரை 
உன் வசந்தமான  
வரவை என்றும் 
எதிர் பார்கின்றேன் நான் ..! 

சொல்லபடாத என் காதல் .!



என்னை சுற்றி நீ 
விட்டு போன கேள்விகள் 
நீ இல்லாத வெற்று நிமிடங்களை 
சுமந்துகொண்டு சூனிய வெளியில் 
அலைந்திருக்கும் 
கனவில் வந்து 
கன்னம் வருடிப்போகும் 
உன் உள்ளங்கை உரசலை 
இனி யாரிடம் சொல்லுவேன் ..?

மறுபிறவி நம்பியவனில்லை 
நீ என்னை மறுக்கும் வரை 
இன்று சொல்லுகிறேன் 
இந்த பிறவியுடன் இனி 
என்னுடன் நீ வரும் 
பிறவிகள் ஏராளம் 

இனி ஒரு பிறவியில் 
உன் மதத்தில் 
உன் குலத்தில் 
உன் பிரிவில் 
உன் முறையாக 
பிறக்கும் ஒரு நாளில் 
பிறந்த என் காதலை சொல்வேன் 
அதுவரை 
இறந்து கிடக்கட்டும் 
சொல்லபடாத என் காதல் 
முற்று பெறாத இந்தக் கவிதையுடன் .........

மௌன அஞ்சலி


காதலில் தோற்ற   
ஆண்களே .!
வாருங்கள் கொஞ்ச 
நேரம் மௌன அஞ்சலி 
செலுத்துவோம் 
இறந்து போன 
நம் நிம்மதிக்காக ...............

கரைகளில்லா 
புன்னகைகள் 
காயங்களில்ல கனவுகள் 
வெள்ளை நிமிடங்கள் 
வெளிச்சமான நாட்கள் 
எல்லாம் இறந்து போனதற்காக 
அஞ்சலில் செலுத்துவோம் 

ஆதாமே ..............?
ஏதேன் தோட்டத்தில் விலக்கப்பட்ட 
கனியை ஏன் கடித்தீர் .............?

வெண்மதி முகங்களால் 
பெறுமதி மிக்க எம் நிம்மதிகள் 
இறந்து போயினவே ..........