counter

Well Come To My Page

வியாழன், 5 நவம்பர், 2015

காதல்

என்னை சுயநலவாதியாய் மாற்றியதைத் தவிர,
பெரிதாய் எதையும் செய்துவிடவில்லை என் காதல்.

ஞாயிறு, 25 அக்டோபர், 2015

காதல்

கற்பனையில் வாழும் என் காதலை உன்னால் கற்பனைகூட செய்திடமுடியாது!...


நான்





எனக்கு உண்மையா ஒருத்தர வெறுக்க தெரியும்.
ஆனா பொய்யா ஒருத்தர நேசிக்க தெரியாது

செவ்வாய், 20 அக்டோபர், 2015

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !

அம்மா ,அப்பா ,நட்பு என 
பல உறவுகள் இருந்தும் உன் 
அன்பைப் பெறத் துடிக்கும் 
என் இதயத்திற்கு எப்படி 
கூறுவேன் உன் மனதில் 
நானில்லை என்று !

அன்பே என்மீது காதல் 
இல்லை- யார் தடை 
போட்டாலும் தட்டி 
போகாதது உன் மீது நான் 
கொண்ட காதல் 
சிலநேரம் மனஸ்தாபம் 
ஏற்பட்டாலும் - மனம் 
விட்டு போகாதது உன் 
மீது நான்  கொண்ட 
காதல் .

என்றுமே என் காதலை 
புரிந்துகொள்ளா விட்டாலும் 
பரவாயில்லை - ஆனால் 
என்றுமே பறை சாற்றி 
விடாதே 

ஏனென்றால் என் வாழ்வில் 
தோன்றிய முதல் காதலும் 
நீ தான் இறுதி காதலும் 
நீதான் .



இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 
20-10-2015



சனி, 10 அக்டோபர், 2015

முடிவு


கவிதைக்கு இன்னும் 
முற்றுப்புள்ளி 
வைக்கப்படவில்லை 
பொருத்தங்கள் 
இடம் மாறித்தான் 
போனது இன்று ஒரு 
கனமெனினும் 
குதூகலித்தேன் 
ஏதோ கட்டி காத்த 
உறவு போல ....
அன்று உன் 
சினுங்கல் குரல் 
உன் சிரிப்பு எல்லாமே 
என்னுடனாக எனக்காக ....
இன்று மனம் 
அங்கலாயித்து 
அவதிப்பட்டு 
மூடிக் கொள்கின்றேன் 
கண்களை கண்ணீரோடு 



திங்கள், 21 செப்டம்பர், 2015

ஏமாற்றங்கள்

நத்தையாய் தினமும் 
ஊர்கிறது நீ தந்த 
ஞாபகங்கள் 

ஏமாற்றங்கள் 
கண்களை 
அருவியாக்கின 
இருந்தாலும் 
ஓரிரு எதிர்பார்ப்புகள் 
அணைகட்டி விட்டன 

எதிர்பார்ப்புகளுடனே 
நகர்வது தானே 
வாழ்க்கை 

தீச்சுவாலைக்குள் 
தன்னை தியாகித்து 
ஜொலிக்கின்றதே 
தங்கம் 

அதுபோல 
நானும் புடம் 
போடப்படுகிறேன் 
ஏமாற்றங்கள் 
என்ற 
தீச்சுவாலைக்குள் !


செவ்வாய், 14 ஜூலை, 2015

புல்லாங்குழல்


ஆம் !
என்னவளும் ஒரு 
புல்லாங்குழல் தான் 
அதை வாசிக்க 
நினைத்தவர்கள் மத்தியில் 
நேசிக்க நினைத்தவன் 
என்பதால்தான் 
என்னவோ அதன் இசை 
ஸ்வரங்களை என் இரு 
விழி நரம்புகளிலும் 
சுமக்கும் வரம் 
கிடைத்தது ஒரு 
கணம் .!!!!!

என் இரு விழி நரம்புகளிலும் 
அதன் இசை நாளங்களை 
இணைத்தேன் உயிர் கொடுத்தேன் 
பின் உரு கொடுத்தேன் 
உணர்வில்லாது நடமாடும் 
உலகம் என்னவளின் 
சுவாசம் மட்டும் 
என்னுடன் .......

சத்தியமாக சொல்கிறேன் 
நான் தவறவிட்ட 
புல்லாங்குழலல்ல அவள் .....
என்னிடமிருந்து தட்டிப் 
பறிக்கப்பட்ட புல்லாங்குழல் ....
ஏனோ ...!
அதை வாசிக்க 
நினைத்தவர்கள் 
உறவுகள் என்பதாலா ,
இல்லை அதற்கு 
நான் தகுதியற்றவன் 
என்பதாலா .???? 

திங்கள், 13 ஏப்ரல், 2015

ஞாபகம்




இதழ்கள் உதிரும் 
என்று தெரிந்தும் 
மலர்களை சுமக்கும் 
மரங்களை போல 
நீ என்னை மறந்து 
விட்டாய் என்று 
தெரிந்தும் 
உன் நினைவுகளை 
சுமக்கும் என் இதயம் 

நிஜங்களும் நிழல்களும்


நிஜங்களை எப்போதும்
இரசிப்பதற்கு அலை
மோதும் என்
கண்களுக்கு விருந்தாக
கிடைப்பது நிழல்களே .!

நிழல்களை
நிஜங்களென்று
அறியாத என்
அப்பாவிக் கண்கள்
நிலை மறந்து
சில கணங்கள்
சிலையாகிப் போனதுண்டு

சொற்களால் சோடிக்கப்பட்ட
காதல் மொழிகளில் 
கசிந்துருகி 
காயம் கண்டுவிட்ட போதும் 
முகமூடிக்குள் ஒளிந்திருக்கும் 
முகங்களை  என்னால் 
அடையாளம் 
காண முடிவதில்லை 

வண்ணங்களின் வனப்புகளில் 
மயங்கிபோய் 
தாளாத துன்பத்தில் 
வீழ்ந்து தவித்தபோதும் 
இன்னும் நிழல்களை 
நிஜங்களென்று நம்பும் 
அறியாமை தொடர்கிறது 

சனி, 7 மார்ச், 2015

அன்னை


ஒரு பிறப்புக்காக 
ஓராயிரம் முறை 
இறப்பவளும் 
ஓர் இறப்புக்காக 
ஓராயிரம் முறை 
துடிப்பவளும் 
அன்னையே .!

சனி, 28 பிப்ரவரி, 2015

ஹைக்கூ கவிதைகள்


நம் இதயம் எந்த 
அளவுக்கு பிடித்தவர்களிடம் 
சண்டை போடுகிறதோ 
அந்த அளவுக்கு அவர்களிடம் 
அன்பை எதிர்பார்க்கிறது

நண்பர்கள் தவறு செய்தால் 
மன்னித்து விடாதே 
மறந்து விடு ஏனெனில் 
அவர்கள் உன்  உறவுகள்  
அல்ல உன் உணர்வுகள் 

எப்போது நீ ஒரு 
உயீர் மீது  அதிக 
அன்பு வைக்கிறாயோ 
அப்போதே உன் உயீர் 
பலவீனம் அடைகிறது 

உனக்கு பிடித்த 
பலருடன் பழகுவதை 
விட உன்னை மட்டுமே 
பிடித்த ஒருவருடன் 
பழகிப்பார் உன்னையே 
உனக்குப் பிடிக்கும் 

உண்மையான அன்புக்கு 
மட்டுமே உன் கண்ணீர் 
துளிகள் தெரியும் நீ 
மழையில் நனைந்தாலும் 
கூட 

தூக்கம் 
அதுவும் 
என்னைவிட்டு தொலைதூரம் 
சென்று விட்டது - என் காதலை போல் 

சிரிப்பு 
உதடுகள் என் உள்ளத்து 
உணர்வுகளை மறைக்கப் 
போடும் நாடகம் 

காத்திருப்பு 
எனது உயீர் என்னை 
விட்டுப்பிரியும் - வரை 
காத்திருக்கிறேன் உன் 
நினைவுகளுடன் 

கடிகாரம் 
என் காலைக் கனவுகளை 
கலைக்கும் எதிரி 

அன்பு 
உலகில் என்றுமே 
உறுதியான அத்திவாரம் 

தலையணை 
வாலிப விழுதுகளின் 
கற்பனை மனைவிகள் 

நாகரீகம் 
தொடைகளைத் தொட்டு 
விட்ட ஆடைகளுக்கு பெயர் 

கனவு 
இரவு எனும் செடியில் 
பூக்கும் பூ 

நிலவு 
வானம் எனும் அரண்மனையில்
நட்சத்திரங்கள் எனும் தோழிகளோடு   
பவனி வரும் மகாராணி 

பேனா 
என் மனதிலுள்ள வார்த்தைகளுக்கு 
உயீர் கொடுத்து செதுக்கும் சிற்பி 

கவிதை 
ரசிப்பவனுக்கு பாயாசம் 
ரசிக்காதவனுக்கு கசாயம் 

காதல் 
நீ விடும் மூச்சு எனக்காக 
என்றால் நான் வாழும் 
வாழ்க்கை உனக்காக அன்பே 

வலிகள் 
உலகில் உண்மையை விட 
பொய்யே கூடியது 
நீ ஒருவரை நேசிக்கலாம் 
அது இயல்பானது 
ஆனால் அவரை துன்புறுத்தாதே 

பெண்மை 
இறைவனுக்கு இவ்வுலகில் நிரந்தரமாக 
இருக்க முடியாமையினால் தோற்று 
வித்த சக்தியே பெண்மை 

கண்கள் 
என் உள்ளத்து உணர்வுகளின் 
பிரதிபலிப்பாய் கண்ணீரை பிறப்பிக்கும் 
கண்ணே நீயும் ஒரு தாய் தானே 

நிரந்தரம் 
நித்தம் நித்தம் மாறும் உலகில் 
நிரந்தரம் எனும் வார்த்தை 
ஒன்றே நிரந்தரம் 

காதல் 
கனவிலே காலங்கழிக்கும் 
குறிக்கோள் அற்றவர்களின் 
ஒரே குறிக்கோள் 

கல்வி 
கருவறை முதல் 
கல்லறை வரை 
நம் வாழ்வுடனே 
வளர்ந்து வரும் 
அழிவற்ற அழகிய கலை 

நம்பிக்கை 
முழுமையாய் நம்பியிருந்தேன் 
அன்று உன்னை 
முகவரி இல்லாமல் 
மடிந்து விட்டோ இன்று 


வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

பணமா .? குணமா .?


பணத்தை விட குணம் தான் 
வேண்டுமென்றால் ...சிரிக்க 
வைப்பேன் பலரையும் 
என்னை சுற்றியிருந்த 
எத்தனையோ 
பேர்களின் கசப்பான 
பேசுக்கள் என் மனதை 
நொடித்து விட்டது 
வாழ்க்கை வலிமையற்று 
போயிருகிறது ..........
எல்லாம் பணம்,பணம் 
அதனாலே இன்று 
யாரையும் சிரிக்க 
வைப்பதில்லை 
முடிந்தால் இன்று 
என்னை சிரிக்க 
வைத்து பாருங்கள் .!

வியாழன், 19 பிப்ரவரி, 2015

நீ


என்னை நீ மறந்துவிட்டாயோ  ?
உன்னை நான் நினைக்கும் 
வேளையில் என்னை நீ 
இழந்து விட்டாயோ .?
உன்னை நான் ஏற்கும் 
வேளையில் காலம் 
கடந்தென்ன பயன் ?
ஞானம் பிறந்தென்ன 
பயன் .?
கைமாறிய கவிதயானேன் 
பள்ளியோர நினைவலைகள் 
என்னுள் பரிதவிப்பை 
ஏற்படுத்துகின்றன 
தனிமை என்னை 
தழுவும் போதெல்லாம் 
கண்களின் வலியும் 
கண்ணீர் உன்னையல்லவா 
நினைவுக் கூறுகின்றது 
சிதைந்த நினைவலைகள் 
சிலருக்கு இன்பத்தையும் 
பலருக்கு  துன்பத்தையும்  
தரும் துன்பத்தின் 
விளிம்பில் நான் 
உண்மை காதலுக்கு 
இறப்பில்லை என்றால் 
தேடிப்பார் உன் 
இதயத்தின் ஒரு 
மூலையில் நான் 
வந்து  நிற்பேன்
நினைவாக .!
மறக்க நினைக்கும் 
நினைவுகள் சில 
நேரம் நினைக்க 
விரும்பும் 
நினைவுகளாகின்றன 
என்றாலும் 
என்றேனும் 
உடன் இருக்கும் 
உன் எண்ணத்தோடு 
உயீர் துறப்பேன் 
இந்த ஜென்மத்தில் 
இவன்  !

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

காத்திருப்பின் தவிப்பு


அன்று நீயும் நானும் ஒன்றாய் 
இருந்த இடத்தில் இன்று 
நான் மட்டும் தனியாய் .........
தனிமையில் நானும் 
வாடுகிறேன் உன்னைக் 
காண மாட்டோமா 
என்ற ஏக்கத்தில் 
எத்தனை பேருக்கு 
சொல்லுவது 
நான் காத்திருப்பது 
உனக்காக என்று 
ஒரு சில நொடிகள் 
உன்னை பிரிந்தால் 
நான் அவஸ்தைப்படும் 
தருணத்தில் உன் 
குரல் கேட்டு 
ஆனந்தம் அடைவேன் 
உன் குறுஞ்செய்தி
பார்த்து களிப்படைவேன் 
ஆனால் இன்றோ 
அது மொத்தமும் 
இன்றி நான் மட்டும் 
ஒரு தனிமை பறவையாய் 
உன் வருகையை 
எதிர்பார்த்து 
காத்திருக்கிறேன் 
ஒவ்வொரு நொடியும் 
ஏக்கத்தில் என் கண்களும் 
ஆவலில் என் கைகளும் ........!   

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

ஆதிக் கடவுள் !


--------------------------- தாமிரா கவிதைகள் -தொகுப்பிலிருந்து -------------------------------

எதிர் எதிர் கூண்டில் 
இருவரும் 
வரம் தராதது 
கடவுளின் குற்றம் 
சிலை உடைத்தது 
பக்தனின் குற்றம் !


தருவதும் இல்லை 
பெறுவதும் இல்லை 
கடவுளின் வேலை 
கடவுளாய் இருத்தல் !

பேரன்பு 
பெருங்காதலாகும் 
பெரும் பக்தி 
உன்மத்தமாகும் !

என் ஆயுள் ரேகையில் 
பயணப்படுகிறது 
கடவுளின் ரௌத்திரம் .!

எனக்கு 
கடவுளாய் இருக்க 
நேர்ந்தது 
என் கடவுள் 
செய்த பாவம் !

அன்பைப் போல் 
இல்லை 
வேறெந்த வன்முறையும் !

உச்சியில் இருப்பாள் 
கங்கை உமையொரு 
பாகம் பார்வதி 
நெஞ்சில் எவளும் 
குடியேறவில்லை 
இந்த ருத்ரனுக்கு !

காணிக்கை செலுத்துவான் 
பக்தன் 
நடை சாத்திச் 
செல்வாள் 
கடவுள் !

சூடம் கொளுத்தியது 
தவறு அவள் 
காவு கேட்கும் காளி !

நீ 
ஊரே கொண்டாடும் 
சாமிதான் என்றாலும் 
சப்பரம் தூக்குபவன் 
தான் முட்டுக் 
கொடுக்க  வேண்டும் !

கனிவாகத்தான் 
இருந்தால் அவளைக் 
கடவுளாக்கியதும் 
கல்லாய் சமைந்தாள் !

படைக்கவும் இல்லை 
காக்கவும்  இல்லை 
அழித்தலை மட்டும் 
அழகாய் செய்கிறாள் 
ஆதிக் கடவுள் !



ஞாயிறு, 25 ஜனவரி, 2015

Kadhal




கற்பனையில் இருக்கும் இதயம்

கவி புனையும் உன்
கண்கள்தான் என்னிடம்
காதலையும் புனைய வைத்தது .
இதனால்தான் மங்கையின்
இரு விழிகளும் மானின்
இரு கண்களும் ஒன்றென
கவினர்கள் கூறுகின்றனரோ
தெரியவில்லை
 அதனால்தான் உனது
செவ்விதழ்களை 
ரோஜாவின் மடல்கள் 
என வர்ணித்தேன் 
மெல்ல கொவ்வைப் 
பழம்போல் இருக்கும் 
உதட்டு வழியாக என்னை 
தன் உள்ளே இதயம் 
எனும் இருட்டு அறையில் 
யாரும் இல்லாத இரவு 
நேரத்தில் குடி 
புகுத்தினாய் 
இனிமையான அந்த 
இரவு அப்போது சுகம்தான் 
இப்போது என்னை இதயமே 
இல்லாதவன்போல் செய்து 
இன்னோரு இதயத்தை 
தேடும் அந்த காம 
காதல்கொண்ட கண்கள் 
எப்போது அமையப்பெறும் .?