counter

Well Come To My Page

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

Charlie Chaplin - சார்லி சாப்ளின்

உலகைச் சிரிக்க வைத்த சோகத்தில் ஆழ்ந்த ஏழை சார்லி சாப்ளின் .அவருடைய வரலாறு கல்லையும் கரைய வைக்கும் .

வறுமை  !வறுமை  !வறுமை  !

அவர் வாழ்வில் விடாப்பிடியாக சூழ்ந்து கொண்ட வறுமை தான் அவரது எல்லாக் கண்ணீருக்கும் காரணமாக அமைந்தது .சிறுபராயத்தில் சார்லினை வறுமை துரத்தி துரத்தி அடித்தது .பின்னாளில் வறுமையை அவர் ஓரளவு வெற்றி கொண்ட போதும் வறுமையால் தோற்ற அவரது காதல் கடைசி வரை அவரை கண்ணீரால் கலங்கடித்தது !

கலையுலகில் ஓரளவு முன்னேறிய காலக்கட்டத்தில் சார்லினின் மனதில் காதல் அரும்பியது .ஹெட்டி என்ற பெண்ணைக் காதலித்தார் .ஆனால் அந்தக் காதல் கைகூடவில்லை . சார்லினின் ஏழ்மையைக் காட்டி காதலைப் பிரித்தான் ஹெட்டியின் அண்ணன் .முதல் காதல் வறுமையால்  போயிற்று .

அந்த காதல் தோல்வியை சார்லி சாப்ளினால் தாங்கி கொள்ளவே முடியவில்லை .தனது வாழ்வின் மகிழ்வை அடியோடு அழித்த நிகழ்வை ,வறுமையை மனதிற்க்குள் சபித்தார் .

அக்காதல் தோல்வி சார்லி சாப்ளினை வாழ்நாள் முழுக்க சித்திரவதை செய்தது !வறுமை நிலை காதலைக் கொன்று விடும் !காதலர்களையும் மனதால் கொன்று விடும் !வருமையாளன் காதல் கொண்டால் அவ்வறுமையே அக்காதலைப் பழி வாங்கி விடும் என்பதற்கு சார்லி சாப்ளினின் காதல் தோல்வியே தக்க சான்றாகும் .

தனது காதலியின் நினைவுகளிலிருந்து தப்பிக்க சார்லி கடும் முயற்சி செய்ய வேண்டியிருந்தது .தன காதலி ஹெட்டியை போலவே இருக்கிறாள் என்று சார்லி சாப்ளின் மில்ட்ரெட் ஹாரிஸ் என்பவளைத் திருமணம் செய்து கொண்டார் .அந்த வாழ்வு சார்லிக்கு நிலைக்கவில்லை .

அதற்க்கு பின்னர் லிட்டா கிரே ,பவுலட் கோடர்ட் ,ஊநா ஓ நீல் போன்றவர்கள் மீது சார்லி சாப்ளின்  காதல் வயப்பட்டதும் காயப்பட்டதும் தனித்த துன்ப வரலாறுகள் .அவர்கள் அனைவரும் தோற்றத்தில் பார்ப்பதற்கு அவரது முதல் காதலி ஹெட்டியை போலவே இருந்தார்கள் என்பதுதான் அதிசயமான தகவல் .அதனால் தான் அவர்களைச் சார்லி சாப்ளின் காதலித்தார் .

உள்ளத்தில் உருவான முதல் காதலை யாராலும் மறக்க முடியாது என்பதற்க்கு சார்லியின்  எடுத்துகாட்டு .தனது வாழ்நாளின் இறுதிவரை தனது காதலி ஹெட்டியை அவரால் மறக்க முடியவில்லை .சார்லி சாப்ளின் புகழின் உச்சியில் நேரம் .தீடிரென்று ஒருநாள் அவரது பெயருக்கு லண்டனிலிருந்து ஒரு கடிதம் வந்தது .யாரை மறக்க முடியாமல் தவித்தாரோ .யார் யாரையெல்லாம் ஹெட்டியாக நினைத்தாரோ ?அந்தக் காதலியிடமிருந்து தான் அக்கடிதம் வந்திருந்தது .

சார்லி சாப்ளினுக்கு அடக்கமுடியாத மகிழ்ச்சி !மனம் படபடவென அடிக்க ...இதயம் ஹெட்டி ...ஹெட்டி ....என்று கூற ,வேகவேகமாக அக்கடிதத்தைப் பிரித்து படித்தார் .அக்கடிதத்தில் அவரது முதல் காதலி என்னை நினைவிருக்கிறதா ?நான் தான் ஹெட்டி !நான் ஒரு முட்டாள் ,அபாக்கியசாலி .நீங்கள் எவ்வளவு உயர்ந்தவர் என்பதை உங்களின் படத்தைப் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் .நீங்கள் லண்டன் வருவதாக இருந்தால் எனக்கு தெரிவியுங்கள் .கடைசியாக உங்களின் கைகளைப் பிடித்துக் கதறி அழவேண்டும் .நான் என்னுடைய தவறுகளுக்காகத் தங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் !என்று கடிதம் எழுதி  இருந்தால் .

கடிதத்தைப் படித்து பார்த்த சார்லிக்கு கால்கள் தரையில் நிற்கவில்லை .வானத்தில் பறந்தார் .யாரைப் பார்க்கமுடியாது என்று நினைத்து நினைத்து வருந்தினாரொ ?யாரைப் பார்த்து இனிப் பேசமுடியாது என்று கருதினாரோ ?யாரப் பார்க்காமலே இறந்து விடுவோமோ என்று நினைத்திருந்தாரோ ?அந்தக் காதலியிடமிருந்து இப்படியொரு அழைப்பு வந்ததைக் கண்டு அகமகிழ்ந்தார் சார்லி சாப்ளின் .

உடனே தான் பார்த்த எல்லா வேலைகளையும் அப்படி அப்படியே போட்டுவிட்டு லண்டனை நோக்கி பயணித்தார் சார்லி சாப்ளின் .லண்டனில் அவருக்கு மிகப்பெரிய வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்படிருந்தது .பஞ்சையாய் ,பராரியாய் ,பிச்சைகாரனாய் இருந்த போது  சார்லி சாப்ளினைத் துரத்தியடித்த அதே லண்டன் அவரை வரவேற்க விழாகோலம் பூண்டது .

சார்லியை வரவேற்க மக்கள் முண்டியடித்து கொண்டு நின்றிருந்தனர்.தனது நிலையையும் உலகத்தின் நிலையையும் எண்ணி சார்லி சாப்ளின் மனதிற்குள்ளேயே சிரித்துக் கொண்டார் .ஆனால் அவரது மனம் முழுமையும் அவரது காதலி ஹெட்டியே நிறைந்திருந்தது .அவளை உடனே பார்க்க வேண்டும் என்று துடித்த அவருக்கு இந்த வரவேற்பு மகிழ்ச்சியை தரவில்லை.விரைவாக சென்று தனது காதலியின் முகம் பார்க்க நினைத்தார் சார்லி சாப்ளின் .

ஆனால் காலத்தின் கொடுமை அங்கும் தலைவிரித்து ஆடியது .

இந்த தடவையும் ஹெட்டி சார்லி சாப்ளினை ஏமாற்றி தான் போயிருந்தால் !விதி !சார்லி சாப்ளினை பார்க்க முடியாமலே அவள் இவ்வுலகத்தை விட்டே சென்றுவிட்டால் .சார்லி சாப்ளினுக்கு செய்த துரோகமா ?அல்லது தன்னால் ஏமாற்றப்பட்ட சார்லியை எவ்வாறு எந்த முகத்தோடு எதிர்கொள்வது என்ற தன்னிலை இரக்கத்தின் காரணமா .?என்னவென்று சொல்ல முடியாத நிலையில் அவள் மரணத்தின் வாசலுக்குள் புகுந்தாள் !யாரைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தாலோ அவரைப் பார்க்காது அவரிடம் மன்னிப்பு கேட்காது மண்ணிலிருந்து விண்ணிற்கு ஏகினாள் .

ஹெட்டியை பார்க்க நினைத்து வந்த சார்லியால் அவளது மரணச் செய்தியைத்தான் கேட்க முடிந்தது !காலமெல்லாம் அவளின் நினைவாகக் கொஞ்ச கொஞ்சமாக செத்து கொண்டிருந்த சார்லி இடிபோன்ற இந்தச் செய்தியை கேட்டு மீண்டும் ஒரு முறை செத்துப்போனார்  !ஆம் !கடவுளைப் போலவே காதலும் சரியாகப் புரிப்படாமலேயே இந்த பூமியை ஆண்டு கொண்டுதான் இருக்கிறது !சார்லி சாப்ளினால் ஓவென வாய்விட்டுக் கதறி அழக்கூட முடியவில்லை.அவ்வளவு மக்கள் வெள்ளம் !நடு இரவில் தன முகத்தை மப்ளர் கொண்டு மூடி ,பசியால் கதறி அழுது  சுற்றி அலைந்து திரிந்த வீதிகளுக்கு மீண்டும் ஒருமுறை போய் மௌனமாக அழுதுவிட்டு வந்தார் அந்த மகா கலைஞன்   !



செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

புகழ்பெற்ற கல்லறை வாசகங்கள் ...


புகழ்பெற்ற கவிஞர் ஷெல்லி தன்  தாயாரின் கல்லறையில் பொறித்திருந்த கல்லறை கவிதை :
சப்தமிட்டு நடக்காதீர்கள் இங்கேதான் என் அம்மா இளைப்பாறிக் கொண்டிருக்கிறாள் .!

உலகப் பேரழகி கிளியோபட்ராவின் கல்லறை வாசகம் :
உலகத்திலேயே அழகான பிணம் இங்கே உறங்கிகொண்டிருக்கின்றது .நல்ல வேளையாகப் பிணமானால் .இல்லாவிட்டால் இந்தக் கல்லறைக்குள் ரோமாபுரி ராஜ்ஜியம் தூங்க வேண்டியதாக இருக்கும் .

மகா அலெக்ஸான்டரின் கல்லறையில் :
இந்த உலகம் போதாது என்று சொன்னவனுக்கு இந்தக் கல்லறைக் குழி போதுமானதாக இருந்தது .

ஒரு கம்யூனிஸ்ட் தொழிலாளியின் கல்லறை வாசகம் :
இங்கும் புதை குழியில் கூட இவன் கரையான்களால் சுரண்டபடுகிறான் .

அரசியல்வாதியின் கல்லறை மீது எழுதப்பட்ட வாசகம் :
தயவு செய்து இங்கே கை தட்டி விடாதீர்கள் ,இவன் எழுந்து விடப் போகிறான் .

அடிமையாகாதே !


போதைக்கு அடிமையாகாதே ;
புதைகுழியில் வீழ்ந்திடுவாய் .!

மாதுக்கு அடிமையாகாதே 
மதிகெட்டு அலைந்திடுவாய் .!

சூதுக்கு அடிமையாகாதே 
சுற்றத்தை இழந்திடுவாய் .!

பணத்திற்க்கு அடிமையாகாதே
குணத்தை இழந்திடுவாய் .!

புகழ்ச்சிக்கு  அடிமையாகாதே
மகிழ்ச்சியை  இழந்திடுவாய் .!

தூண்டுதலுக்கு  அடிமையாகாதே
தூண்டிலில் மாட்டிக்கொள்வாய் .!

புலன்களுக்கு அடிமையாகாதே
பலன்களை  இழந்திடுவாய் .!

கோபத்திற்க்கு  அடிமையாகாதே
ஆபத்தில் வீழ்ந்திடுவாய் .!

உணர்ச்சிக்கு  அடிமையாகாதே ;
உன்னையே  இழந்திடுவாய் .!

அன்பிற்கு அடங்கு ,அறிவுக்கு அடிபணி அத்தனையும் பெற்றிடுவாய் !!!!!!

(ஓர் ஆயுள் கைதியின் அறையில் கண்ட வாசகம் )

பேச்சு


*   மற்றவர்களிடம் பேசும் போது ,கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள் .அது உங்களை பலவீனமானவராக காடும் .

*   மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும் .அது உங்களை நேர்மையானவராக காட்டும் .

*   மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள் .

*   நீங்கள் பேசுவதை  மற்றவர்கள் கேட்க வேண்டுமானால் அவரது முகத்தைப் பார்த்து பேசவும் .

*   நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும் .கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேறி என நினைக்ககூடும் .

*   பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிப்படுத்துவதையோ தவிர்க்கவும் .அது உங்களை நம்பிக்கையற்றவராக காட்டும் .

*  நம்பிக்கையோடு கூடிய புன்னகை ,நீங்கள் சொல்வதை கேட்க விரும்பாதவரையும் கேட்கவைக்கும் .

*  குழந்தைகளோடு பேசும்போது ,அருகில் அமர்ந்து பரிவோடு பேசவும் .

*   உங்கள் பேச்சை விலக்குவதற்க்கு ,உங்கள் கைகளையும் பயன்படுத்தவும் .சைகைகள் நீங்கள் சொல்வதை மேலும் விவரிக்கும் . 


பொன்மொழிகள்


1 - ஒவ்வொருவனும் தன்னை அறிஞன் என்று நினைக்கிறான் அதனால் தான் உலகில் இத்தனை முட்டாள்கள் இருக்கிறார்கள் .

2 -  மௌனமாய் இருக்கும் பொது அழகு பேசுகின்றது 

3 -  நீ மற்றவர்களுக்கு கொடுக்க விரும்பாததை நீ மற்றவர்களிடமிருந்து கேட்க கூடாது 

4 -  உன் கெளரவம் உன்னுடைய நாக்கின் நுனியில் இருக்கின்றது 

5 - ஆயிரம் தடவை அளவு எடு ;ஒரு தடவை வெட்டு .

6 - மக்கள் உன் நற்பெயருக்கு தீங்கு செய்யலாம் ,உன்னுடைய நற்குனத்திற்க்கு  அல்ல 

7 - ஒரு மனிதனுடைய நல்லதிஷ்டமும் துரதிஷ்டமும் அவன் மனைவியே .

8 -  நீ பலமுள்ளவனாக இருக்க விரும்பினால் ,உன்னுடைய பலவீனங்களைத் தெரிந்து கொள் .

9 - அமைதியான நீர் ,ஆழமான அடித்தளம் .

10 - பேசுகிறவனை விட ,கேட்பவனுக்கு அதிக புத்தி வேண்டும் .

11 - கணவன் தலைவன் ,மனைவி அவன் தலையில் இருக்கும் மகுடம் .

12 - கோபத்தால் சாதிப்பதை விட பொறுமையால் ஒருவன் அதிகம் சாதிக்கிறான் .

13 - ஊசியை பார்த்து சல்லடை சொல்கிறது உன்னுடைய வாயில் ஒரு ஓட்டை இருக்கிறது என்று 

14 - சண்டையில் முதலில் வாயை மூடுகிறவன் நல்ல குடும்பத்தில் பிறந்தவன் .

15 - தொடக்கத்தை விட முடிவைப்பற்றி அதிகமாக சிந்தனை செய் .

16 - ஒரு பெண்ணை பற்றி மோசமாக பேசுவதை விட ஒரு கோயிலை எதிரிப்பது 
குறைந்த பாவம் .

17 - பலவீனமானவனுக்கு சீக்கிரம் கோவம் வரும் .

18 - ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது அவனைப் பலவீனமாக்குகிறாய் உன்னைப் பலப்படுத்துகிறாய் .

19 - நீ நல்லது செய்யும் போது உன்னை யாரும் நினைப்பதும் இல்லை .
நீ தவறிழைக்கும் போது உன்னை யாரும் மறப்பதும் இல்லை . 


சனி, 1 பிப்ரவரி, 2014

பொன் மொழிகள்


  • கடவுளிடம் கவலைகளைச் சொல்வதால் கவலைகள் கூடாது,குறையாது  கடவுள் பிரதிநிதிகளிடம் சொன்னால் கவலைகள் கூடிவிடும் .

  • எத்தனை முறை மூழ்கினாலும் எத்தனை  முறை தத்தளித்தாலும் கடைசியில் கரை சேர வேண்டுமனில் கடினமாய் நீந்த வேண்டும் .

  • அழுவதற்க்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் சிரிப்பதற்க்கு ஒரு காரணமாவது ஒளிந்திருக்கும் ,ஆயிரம் கோடி நட்சத்திரங்களில் அதை நாம் கண்டறியவேண்டும் .

  • நம் கவலையின் காரணகர்த்தா ,தோல்விகளை தவிர்ப்பதுதான் நம் கவலைகளுக்கு அருமருந்து .

  • வெற்றியாளர்களின் கதை நாம் எப்படி வாழ வேண்டும் என்று சொல்லும் .தோல்வியாளர்களின் கதை நாம் எப்படி வாழக்கூடாது என்று சொல்லும் .ஆனால்  ,எந்த வெற்றியாளர்களும் தோல்வியைச் சந்திகாதவர்களாக இருக்க முடியாது .  


கடந்த காலம் .!


தன்னம்பிக்கை உள்ளவன் பார்வை முன்னோக்கியே இருக்கும்.அவன் வாழ்க்கை பயணத்தை முன்னோக்கியே நடத்துவான் .முன்னோக்கி செல்வது என்பதே அவனது வாழ்விற்கு அவன் அமைத்துக்கொண்ட சட்டமாகவும் இருக்கும் .அதுவே அவனது இலட்சியமும் .முன்னோக்கிய பார்வை தேவை.

குதிரைகளுக்கு மட்டும் சீனி என்ற முன்னோக்கிப் பார்க்கும் கண்ணாடி போடுகிறோமே ஏன் ? மாடுகள் போல குதிரைகள் மெதுவாக செல்லக்கூடியவை அல்ல ; வேகமாக செல்ல வேண்டியவை .

சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே போனால் அதன் வேகம் தடைப்பட்டு போய்விடும் .முன்னோக்கிப் பார்ப்பதற்கு மட்டுமே அவை பழக்கப்பட்டிருகின்றன  .அப்பொழுது தான் அதன் வேகம் அதிகமாகும் .செல்ல வேண்டிய இடத்தை சீக்கிரம் சென்று அடையமுடியும் .

நமது வாழ்க்கையையும் நாம் முன்னோக்கியதாக அமைத்து கொள்ள வேண்டும் .வளர்ச்சிக்கு அது தான் வழி .கவனத்தை சிதறவிட்டு ,சுற்றும் முற்றும் பார்த்துகொண்டிருந்தால் ,ஆங்காங்கே நின்று நின்று போனால் நாம் போய்  சேரவேண்டிய இடத்திற்குப் போய் சேரமுடியா .

நிகழ்காலமே உயிர்ருள்ள  காலம் .அதேபோல வாழ்கையைப் பின்னோக்கி பார்த்துக்கொண்டே இருப்பதிலும் பயனில்லை .வாழ்வில் நடந்ததற்காகவும் கடந்தததற்காகவும்  வருந்திக் கொண்டிருப்பதும் முன்னெற்றதிற்குப் பெருந்தடையாகும் .

தன்னம்பிக்கை உடைய ஒருவன் ஒருகாலும் கடந்த காலக் குறைபாடுகளை எண்ணி மறுகிகொண்டிருக்கமாட்டான் .கடந்தது இனி மீளாது என்பது அவனுக்கு தெரியும் .அதனால் ,நடந்தவைகள் நடந்தவைகளாகவே இருக்கட்டும் ,இனி நடப்பவைகள் நல்லவைகளாக இருக்கட்டும்  என்று ஒரு முடிவுக்கு வருவான் .நடந்த தவருகளிளிருந்து விடுபட முயல்வான் .அவற்றுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பான் .முன்னோக்கி செல்வதில் நாட்டங்கொள்வான் .

மகிழ்ச்சியானவற்றை நினைவு கூறுங்கள் .முன்னோக்கிச் செல்வதற்க்கு முன்  வந்த பாதைகளை அனுபவங்களை வருங்கால வளர்ச்சிக்கு உதவியாக எடுத்துக்கொள்வதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் .உற்சாகமான செயற்பாடுகளாக இருந்தால் சிறிதுநேரம் அசைப்போட்டு பார்க்கலாம் ,அவ்வளவுதான் கடந்தகால நிகழ்ச்சிகளே வாழ்க்கை ஆகிவிடாது ..