என்னை சுற்றி நீ
விட்டு போன கேள்விகள்
நீ இல்லாத வெற்று நிமிடங்களை
சுமந்துகொண்டு சூனிய வெளியில்
அலைந்திருக்கும்
கனவில் வந்து
கன்னம் வருடிப்போகும்
உன் உள்ளங்கை உரசலை
இனி யாரிடம் சொல்லுவேன் ..?
மறுபிறவி நம்பியவனில்லை
நீ என்னை மறுக்கும் வரை
இன்று சொல்லுகிறேன்
இந்த பிறவியுடன் இனி
என்னுடன் நீ வரும்
பிறவிகள் ஏராளம்
இனி ஒரு பிறவியில்
உன் மதத்தில்
உன் குலத்தில்
உன் பிரிவில்
உன் முறையாக
பிறக்கும் ஒரு நாளில்
பிறந்த என் காதலை சொல்வேன்
அதுவரை
இறந்து கிடக்கட்டும்
சொல்லபடாத என் காதல்
முற்று பெறாத இந்தக் கவிதையுடன் .........

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக