counter

Well Come To My Page

புதன், 2 ஜூலை, 2014

தத்துவங்கள்



மிகவும் நேர்மையாக இருக்காதீர்கள் ; ஏனெனில் நேர்மையான மரங்களே முதலில் வெட்டப்படும் .நேர்மையானவர்களே முதலில் பழிதூற்றப்படுவார்கள்.கொஞ்சம் வளைந்து கொடுங்கள் வாழ்க்கை இலகுவாய் இருக்கும்.


இங்கு விஷமற்ற பாம்புகள் கூட தன்னை விசமுள்ள பாம்பு போல காட்டிக்கொள்ள வேண்டுமாக்கும் .

உன் இரகசியங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ளாதே .அது உன்னை  அழித்துவிடும் .இது தான் மிகப்பெரிய குரு மந்திரம் .

ஒவ்வொரு நட்புக்கு பின்னாலும் ஒரு சுயலாபம் இருக்கின்றது .சுயலாபம் இல்லாத நட்பே இல்லை.இது ஒரு கசப்பான உண்மை .

ஒரு வேலையை செய்யத்தொடங்கும் முன் இந்த மூன்று கேள்விகளையும் கேட்டுக் கொள் .ஏன் இதை செய்கிறேன் .?இதன் முடிவு என்னவாக இருக்கும் .?இதில் நான் வெற்றிபெருவேனா , இல்லையா .? என் ஆழமாக யோசித்து அதில் நல்ல விடைகள் கிடைத்தால் மட்டுமே அந்த பணியை செய்யத் தொடங்கு .

பயம் உன்னை நெருங்கத் தொடங்கும்போதே அதை தாக்கி அழித்துவிடு .

ஒரு பணியைச் செய்யத் தொடங்கிய பின் தோல்வியை குறித்து பயம் கொள்ளாதே .அப்பணியை நிறுத்தவும் செய்யாதே .தன் பணியை செவ்வனே செய்பவர்களே மிக மகிழ்ச்சியான மனிதர்கள் .

மலர்களின் வாசம் காற்று வீசும் திசையில் மட்டுமே போகும் .ஆனால் ஒருவர் செய்யும் தர்மமோ நாலாதிசையும் செல்லும் .