counter

Well Come To My Page

வெள்ளி, 26 ஜூலை, 2013

நன்றாக தூங்குவது எப்படி.......?

குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி, குறிப்பிட்ட நேரத்தில் எழுந்திருக்கப் பழக வேண்டும். அப்படி பழக்கமாக்கி கொண்டால் தூங்குவதற் குரிய நேரம் வந்தவுடன், உறக்கம் உங்களை கட்டியணைக்கும்.
தூங்கச் செல்வதற்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பே சாப்பிட்டு விடவும். சாப்பிட்டவுடன் தூங்கினால் நள்ளிரவில் விழிப்பு வரும்.

1. உறங்க செல்வதற்கு முன்பு 4 மணி நேரத்துக்குள் டீ, காபி, மது என்று எதையும் குடிக்கக் கூடாது.

2. படுக்க செல்வதற்கு முன்பு புகை பிடிக்கவும் கூடாது.

3. தினமும் காலையில் உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது.

4. தூங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் உடற்பயிற்சி செய்யக் கூடாது.

5. தினமும் யோகா, தியானம் செய்வது நல்லது.

6. மதியம் தூங்கி பழகியவர்கள் 20 முதல் 30 நிமிடமே தூங்க வேண்டும்.

7. மதியம் அதிக நேரம் தூங்கினால் இரவு தூக்கம் பாதிக்கும்.

8. தூங்குவதற்கு முன்பு மனதை அமைதியாக்கி தயார் படுத்திக் கொள்ளவும்.

9. உறவினர்களுடன், நண்பர்களுடன் பேசி, ஜாலியாக இருக்கலாம்.

10. டிவி, கம்ப்யூட்டர், நெட், மெயில் என்று மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்ளலாம்.

11. தூங்கச் செல்லும் முன் குளிர்ந்த நீரில் உடலை கழுவலாம்.

12. பால் குடிப்பது நல்லது. அதில் உள்ள சத்துப்பொருட்கள் தூக்கத்தை வரவழைக்கும்.

13. படுக்கை அறை காற்றோட்டமாகவும், சத்தமில்லாத அமைதியாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

14. படுக்கும் அறையில் வேறு பொருட்கள் இருக்கக் கூடாது.

15. நனைந்த உடைகள், உள்ளாடைகள் படுக்கை அறையில் இருக்கக் கூடாது.

16. படுக்கும் அறையில் இரவு பல்புகள் இருக்க வேண்டிய கட்டாயமில்லை.

17. தூங்கும் அறை இருட்டாகவும், வெளியில் இருந்து வெளிச்சம் உள்ளே வராமலும் இருக்க வேண்டும்.

18. படுக்கை அறையில் இதமான குளிர் இருப்பது அவசியம். சூடாக இருக்கக் கூடாது.

19. தூங்கும் அறையில் சத்தம் கூடாது. சத்தம் கேட்டபடி தூங்கினால் நல்லதல்ல. படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் அதிக ஸ்பீடு வேண்டாம். மிதமாக சுற்றினால் சீரான தூக்கம் வரும்.

20. படுக்கை விரிப்புகள் சுத்தமாக இருப்பது அவசியம்.

21. தலையணை மற்றும் படுக்கைகள் மென்மையாக இருக்க வேண்டும்.

22. மல்லாந்து தூங்கும் பழக்கம் உள்ளவர்கள் தலையணையை பயன்படுத்த வேண்டாம்.

23. தூக்கம் வந்தால் மட்டுமே படுக்கையில் படுக்க வேண்டும்.

24. உறக்கம் வரவில்லை என்றால் உடனே எழுந்து சென்று வேறு வேலைகளை பார்க்கலாம்.

25. நள்ளிரவில் விழிப்பு வந்தால் இயல்பாக இருங்கள். அடுத்த நாள் பார்க்க வேண்டிய வேலைகளைப் பற்றி சிந்திக்காதீர்கள். மனதை அமைதியாக்கி இரவை ரசிக்க ஆரம்பித்தால் சீக்கிரமே தூக்கம் வந்துவிடும்.

26. படுத்தபடியே பார்க்கும் விதத்தில் சுவர் கடிகாரமோ, டிவியோ வைக்கக் கூடாது.

27. விடுமுறை நாட்களில் ஓய்வு என்ற பெயரில் பகலில் தூங்குவது கூடாது. அப்படி செய்வதால் அடுத்த நாள் வேலை பார்க்கும் பொழுது தூக்கம் வரும்.

28. ஒருநாள் சரியாக தூக்கமில்லாமல் இருந்தால் அதற்காக கவலை வேண்டாம். அதை நமது உடல் ஆட்டோமேட்டிக்காக ஏற்று கொள்ளும். ஆனால் அதையே தொடர்ந்தால்தான் பிரச்சினை.

29. படுக்கையில் தூக்கம், செக்ஸ் இரண்டை மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும். படிப்பது, படுக்கையில் உட்கார்ந்து டிவி, கம்ப்ïட்டர், லேப்டாப் பார்ப்பது கூடவே கூடாது

தனிமையிலே இனிமை காண முடியுமா

    திரைப்படம்: ஆடிப் பெருக்கு
பாடல்: தனிமையிலே இனிமை காண முடியுமா
பாடியவர்கள்: ஏ.எம்.ராஜா - பீ.சுசீலா
இசை: ஏ.எம்.ராஜா
வரிகள்: கே.டீ.சந்தானம்

தனிமையிலே..தனிமையிலே
தனிமையிலே இனிமை காண முடியுமா

நல் இரவினிலே சூரியனும் தெரியுமா
தனிமையிலே இனிமை காண முடியுமா

துணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா
அதை சொல்லி சொல்லித் திரிவதனால் துணை வருமா
துணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா
அதை சொல்லி சொல்லித் திரிவதனால் துணை வருமா

மனமிருந்தால் வழி இல்லாமல் போகுமா
மனமிருந்தால் வழி இல்லாமல் போகுமா
வெறும் மந்திரத்தால் மாங்காய் வீழ்ந்திடுமா

தனிமையிலே இனிமை காண முடியுமா
நல் இரவினிலே சூரியனும் தெரியுமா
தனிமையிலே இனிமை காண முடியுமா

மலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை
செங்கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை
மலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை
செங்கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை

கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமையில்லை
கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமையில்லை
நாம் காணும் உலகில் ஏதும் தனிமை இல்லை

தனிமையிலே... தனிமையிலே இனிமை காண முடியுமா
நல் இரவினிலே சூரியனும் தெரியுமா
தனிமையிலே இனிமை காண முடியுமா

பனி மலையில் தவமிருக்கும் மா முனியும்
கொடி படையுடனே பவனி வரும் காவலரும்
கவிதையிலே நிலை மறக்கும் பாவலரும்
கவிதையிலே நிலை மறக்கும் பாவலரும்
இந்த அவனியெல்லாம் போற்றும் ஆண்டவனாயினும்

தனிமையிலே... தனிமையிலே இனிமை காண முடியுமா
நல் இரவினிலே சூரியனும் தெரியுமா
தனிமையிலே இனிமை காண முடியுமா

புதன், 24 ஜூலை, 2013

உன் நினைவு



நான் மரநிழலில் நின்று 
கொண்டு 
இன்னொரு நிழலை 
பார்த்து ஏங்குகிறேன் 
தண்ணீர்க் காணாத 
பூச்செடியாய் நான் 
மழை  மேகத்தை கண்டு 
சல்லாபிக்கின்றேன் 
மினி மறையும் உன் 
புன்சிரிப்பும் 
கம்பீரமான உன் வாய் 
பேச்சும் 
ஏனோ உன் நினைவும் 
என் முன் 
வந்து போகிறது 
பொல்லாப்பு என்றிருந்தும் 
போகவில்லை உன் நினைவு 
நீரேயரியாத பாலைவனத்தில் 
உன் நினைவு மட்டும் 
நீர்வீழ்ச்சியாய் 
என் அருகில்  நீ இல்லை 
எங்கு பார்த்தாலும் உன் முகம் 
என் கண் முன் வந்து தெரிகிறது 
கடைசி வரை நீ என்னுடன் 
இருப்பாய் என்றிருந்தேன் 
ஆனால் என்னருகில் நீ 
இல்லை 
அடுத்த ஓர் ஜென்மத்திலாவது 
என்னருகில் இருப்பாயா 
என் காதலியே ........!

திங்கள், 8 ஜூலை, 2013

அவளின் ஞாபகங்கள்.!

மௌன பூகம்பம் 
வைரமுத்து


பன்னிரண்டு பாலைவன வருஷங்களுக்குப் பிறகு
அவளை அவன் பார்க்க நேருகிறது.
எங்கெனில்..
ஒரு ரயில் நிலையத்தில்.

எப்போதெனில்..
ஒரு நள்ளிரவில்.

எதிரெதிர் திசையில் செல்லும் ரயில்கள் இளைப்பாறிக்
கொள்ளும் அந்த இடைவெளியில்..

ரயில்களின் எதிரெதிர் பெட்டிகளில்
பழைய கண்கள் நான்கு பார்த்துக் கொள்கின்றன.

அப்பொழுது-
மனசில் எத்தனை மௌன பூகம்பம்!)
உன்னைப் பார்த்த
ஒரு நிமிஷத்தில்
இமைகளைக்
காணாமல் போட்டு விட்டன
கண்கள்.


நீதானா?
இல்லை-
வேறொருவன் கண்களால்
நான்
பார்ககிறேனா?

மனசின் பரப்பெங்கும்
பீச்சியடிக்கும் ஒரு
பிரவாகம்.

இதயத்தின்
ஆழத்தில் கிடந்த
உன்முகம்
மிதந்து மிதந்து
மேலே வருகிறது.

ஓ!
வருஷங்கள் எத்தனையோ
வழிந்த பிறகும்..
என்
மார்பு தடவும்
அதே பார்வை..

அதே நீ!

என் பழையவளே!

என்
கனவுகளில் அலையும்
ஒற்றை மேகமே!

உன் நினைவுகளில்
நான்
எத்தனையாவது பரணில்
இருக்கிறேன்?

அறிவாயா? என்
மீசைக்கும்
என்
காதலுக்கும்
ஒரே வயதென்று
அறிவாயா?

உன் பெயரை
மறக்கடிப்பதில்
தூக்க மாத்திரை கூடத்
தோற்றுப் போனதே!

ஓ!
நீ மாறியிருக்கிறாய்.
உன்
புருவ அடர்த்தி
கொஞ்சம்
குறைந்திருக்கிறது.

உன்
சிவப்பில் கொஞ்சம்
சிதைந்திருக்கிறது
உன்
இதழ்களில் மட்டும்
அதே
பழைய பழச்சிவப்பு.

இப்போதும்
நாம்
பேசப்போவதில்லையா?

வார்த்தைகள் இருந்தபோது
பிரிந்து போனவர்கள்
ஊமையான பிறகு
சந்திக்கிறோமா?

உன் நினைவுகள்
உன் கணவனைப் போலவே
உறங்கியிருக்கலாம்.
ஆனால்
என் நினைவுகள்
உன்னைப் போலவே
விழித்திருக்கின்றன.

ஓ!
இந்த
ரயில் வெளிச்சம்
நீ
அழுவதாய் எனக்கு
அடையாளம் சொல்கிறதே!
வேண்டாம்!

விழியில் ஒழுகும்
வெந்நீரால்
மடியில் உறங்கும்
உன்
கிளியின் உறக்கத்தைக்
கெடுத்து விடாதே!

இதோ
விசில் சத்தம் கேட்கிறது
நம்மில் ஒரு வண்டி
நகரப் போகிறது.

போய் வருகிறேன்!
அல்லது
போய்வா!
மீண்டும் சந்திப்போம்!
விதியை விடவும்
நான்
ரயிலை நம்புகிறேன்.

அப்போது
ஒரே ஒரு கேள்விதான்
உன்னை நான் கேட்பேன்!

"நீயும் என்னைக்
காதலித்தாயா?"