நான் காதலை
சொன்ன போது
பைத்தியம் என்றாள்
பரதேசி என்றாள்
கறுப்பன் என்றாள்
அனைத்தையும் கேட்டு
நான் வாய் விட்டு
சிரித்தேன்
நீ சொன்னது எல்லாம்
உண்மையே என்று ......
உன்னை எண்ணி அடிக்கடி
யோசிப்பது உண்மையே
யோசிப்பதால் நான் பைத்தியம்
தான்
உன் பின்னே காதலுக்காக
அலைந்து ஏங்கி திரிவதால்
நான் பரதேசி தான்
மழை வெயில் பாராது
உன் அன்புக்காக அலைந்து
தேகம் கறுத்திருப்பதால்
நான் கருப்பன் தான்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக