கனடாவின் ஹைக்கூ ................"நிஷாந்தினி"
உன் அரசாங்கம் என் காதலுக்கு
போட்ட வரிதான் "கவிதை"
கவிதைகளில் உன்னை எழுதினால்
கட்டாயம் எழுத்துகளுக்கு கலர்
அடிப்பேன் .!
காதல் தீவிரவாதி ஆனதே
கவிதைகளை துப்பாக்கிகள்ளாக்கி
கொண்டுதான்................
உன் ஒரே பார்வைக்கு
நிறையக் கவிதைகள் .!
என் நிறையக் கவிதைகளிலும்
உன் ஒரே ஒரு காதல் .....!
மனசுக்குள்-காதல் மழை
பெய்கையில் காகிதங்களில்
கவிதை வெள்ளப்பெருக்கு............ !
உன் புன்னகைகளோ....... .!
என் புதுக் கவிதைகள்........ !
இடையிடையே -நீ வெட்கபடுவது
கனடாவின் ஹைகூக்கள் .!
காதலை விட கவிதைகளை
அதிகம் நேசிக்கிறேன்
கவிதைகளை விட -அதிகம்
உன்னை நேசிக்கின்றேன்
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக