counter

Well Come To My Page

வெள்ளி, 31 ஜனவரி, 2014

Verasa Pogayile - வெரச போகையிலே புதுசா போறவளே



​வெரச போகையிலே புதுசா போறவளே
இது வரையில குளிர் எடுக்கல பெண்ணால
அவ சிரிச்சததும் தல உரையுது தன்னால
என் பேச்சு மூச்சு எங்க காணல

வெரச போகையிலே ....

இது நானா என்ன பழசெல்லாம் எங்க
புது சந்தேகங்கள் உண்டாகுது
இது திண்டாட்டமா இல்ல துள்ளாட்டமா
மண்ண விட்டு ரெண்டு கால் தாவுது

எப்போதும் நான் போகும் பாதை இது
இப்போது நிற்காமால் ஏன் நீளுது
என்னுள்ளம் லேசாக கை மீறுது

வெரச போகையிலே புதுசா போறவளே

நல்லா கச்சிதமா என்ன பிச்சி சும்மா
தச்சி சேர்க்குறது உன் வேலையா
சுற்று வட்டாரத்தில் தந்த பட்டம் எல்லாம்
இப்ப நூல் அறுந்த காத்தாடியா

நேத்தோட நீ வேற நான் வேறையா
இப்போ நீ என் நெஞ்சின் மேல் கூரையா
என்னுள்ளே நீ பாதி நான் மீதியா

வெரச போகையிலே ....​



ஞாயிறு, 26 ஜனவரி, 2014

ஏழையின் காதல்

ஏழையின் காதல்


அன்பே
உன்மேல் வந்த காதல்
உதட்டளவில் வந்ததல்ல!
அது
உயிரின் ஆழத்தில்
ஒவ்வொரு அணுவிலும்
ஒவ்வொரு துளியாய்
கசிந்து வந்தது...
உனக்காவே
பிறந்தேன் !
பூவாய் மலர்ந்து
காதல் கணவுகளை
கண்களில் சுமந்து!
நானும் வந்துள்ளேன்...
உயிர் உள்ளவரை
உன் நிழலாய்
நானும் தொடர்வேன்..
ஊர் உலகமறிய
உன் துணையாய்
நானும் சேர்வேன்...
காலமெல்லாம்
கண்ணுக்கு கண்ணாக
என் இதயத்தின்
கருவறையில்
உன்னையும் ஓரு சேயாக
நான் சுமப்பேன்.........
மண்ணோடு
மழை சேராமல்
மண் வாசம் பிறந்திடாது!
உன்னோடு
நான் சேராமல்
சந்தோசம் வந்திடாது...
கடவுளே
வந்து தடுத்தாலும்
உன் கரமே பிடிப்பேன்!
காலமே எதிர்த்தாலும்
காத்திருப்பேன் உனக்காக! 
யார்வந்து
எது சொன்னாலும்
உன்னை மறக்கமாட்டேன்!
உன்னை நானும் மறந்திருந்தால்
அன்று
உசுரோடு இருந்திருக்கமாட்டேன்!
இப்படி
சொன்ன நீயேதான்
இன்று
என்னை தூக்கியெறிந்துவிட்டாய்....
நீ தூக்கியெறிந்தால்
துரும்பு பிடித்துப்போக
நானொன்றும் தகரடப்பாயில்லை!
இது
சுத்த தங்கம்
காதல் என்பது
உனக்கு
தாவணியில் படிந்த தூசு
நீ தட்டிவிட்டுவிட்டாய்...
எனக்கு
உடலில் பதிந்த உசுரு
நானென்ன செய்வது....
நீ
காதலை வாசிக்கிறாய்..
நான் சுவாசிக்கிறேன்...
உனக்கு
காதல் என்பது
வெறும் வார்த்தை!
எனக்கு
அதுதான் வாழ்க்கை!
நாம் வளர்த்த
காதல் சொலையில்
சுட்டெரிக்கும் சூரியனை
நீ சுழற்றி எறிந்துவிட்டாய்!
பூத்து குலுங்க வேண்டிய
காதல் சோலை
கண்முன்னே கருகுதடி!
காதலிக்கையில்
மனசை பார்த்த நீயோ.....
கல்லியாணமென்றதும்
ஏனோ பணத்தை பார்கிறாய்....
ஆயிரமாயிரம்
பணம் என்னிடமில்லை!
ஏழடுக்கு
மாடிவீடும் என்னிடமில்லை!
ஆனால்
ஆகாயம் அளவுக்கு
அன்பு உள்ளது!
படுத்து உறங்க
ஓழைக்குடிசை உள்ளது!
மாடிவீட்டில்
பஞ்சுமெத்தையில்
கிடைக்காத சொர்கம்!
என் வீட்டில்
நஞ்சுப்பொன பாயில்
கிடைக்குமடி
சொர்கத்திலும் சொர்கம்!
உங்கள் வீட்டு
உப்புமாவிலும்
கேசரிபாத்திலும்
கிடைக்காத சுவை!
எங்கள் வீட்டு
ஊரவச்ச சொத்தை
உப்புகருவாட்டோடு
குடிக்கும்போது கிடைக்குமடி
நுனிநாக்கில் தேனுரும் சுவை !
ஏழையாய் பிறந்தது
எனது பாவமல்ல!
நான் செய்த தவம்!
ஏனெனில்
ஏழைகளின் குடிசையில்தான்
நின்று ஏரிகிறது
பாசமென்ற தீபம்!
உண்மையான
காதலுக்கு முன்னால்
காசு பணமெல்லாம் பஞ்சு!
பாசத்தோடு கொடுக்கும்
பழைய கஞ்சுக்கு முன்னால்
அமிர்தமும் நஞ்சு!
இது
என்றாவது ஓர்நாள்
உனக்கு புரியும்
அப்பொழுது
என் அறுமை
உனக்கு தெரியும்
இந்த நம்பிக்கையில்தான்
என் ஜீவநதி
வற்றிய பின்னும்
கண்ணுக்குள் கொஞ்சம்
உசுரை வைத்து
உனக்காக காத்திருக்கிறேன்........