counter

Well Come To My Page

புதன், 28 ஆகஸ்ட், 2013

அரிதான படம்

உலகை உலுக்கிய பல படங்கள் வெளிவந்திருக்கிறன.அவையனைத்தும் உலக சரித்திரத்தை மாற்றியும் உள்ளது. இங்கு ஒருவர் தான் எடுத்த புகைப்படத்தை எண்ணி தற்கொலையே செய்துகொண்டுள்ளார் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றிய மர்மம் இது.
கெவின் கார்ட்டர்- தென்னாப்பிரிக்காவின் அழகிய ஊரான ஜோஹன்ஸ்பர்க்கைச் சேர்ந்தவர் உலகப் புகழ்பெற்ற புகைபபடக்காரர். எல்லா சிறந்த புகைப்படக்காரர்களைப் போன்றே இவருக்கும் நல்ல புகைப் படங்களை எடுக்க வேண்டுமென்ற ஆசையும் ஆர்வமும் இருந்தன. இந்த ஆர்வம் அவரை நாடு,நகரம்,கிராமம்,காடு, மலை என்று கொண்டு சென்றது.
1993 இல் இந்த ஆர்வம் அவரைத் தனது சக புகைப்படப் பத்திரிக்கையாளர்களுடன் சூடானுக்குக் கொண்டு சென்றது. அப்போது சூடான் வரலாறு காணாத பஞ்சத்தில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது. குறிப்பாக சூடானின் தென்பகுதி மக்கள் உண்ண உணவின்றி, பருக நீரின்றி பசி, தாகத்தில் தவித்துக் கொண்டிருந்தனர்.
பசி பஞ்சத்தில் தவிக்கும் மக்களின் நிலைகளைக் காமிராவில் பதிவு செய்ய கெவின் தொலைதூர கிராமங்கள் வரை சென்றார். இறுதியாக அவர் முயற்சி கைகூடியது. ஒரு நாள் தன் காமிராவை தோளில் தொங்க விட்டுக் கொண்டு உள்ளத்தை உலுக்கக் கூடிய படத்துக்கான காட்சியைத் தேடியலைந்து கொண்டிருந்தபோது அப்படிப்பட்ட காட்சி தென்பட்டது அவரது நற்பேறு என்றுதான் கூற வேண்டும்…

1

பசி பஞ்சத்தால் அடிபட்ட நோஞ்சான் நிலையில் உள்ள ஒரு சிறுமி நடக்கக் கூட இயலாத நிலையில் இ எலும்புக் கூடு போன்ற தன்னுடலை தவழ்ந்து இழுத்துக் கொண்டு மெல்ல மெல்ல ஊர்ந்து செல்வதைக் கண்டார்.

2

அந்தச் சிறுமி ஐக்கிய நாடுகளின் சபையின் சார்பாக அமைக்கப்பட்டு இருந்த உணவு வழங்கும் முகாமை நோக்கி தள்ளாடியபடி தவழ்ந்து கொண்டிருந்தது உண்மையிலேயே இதயத்தைப் பிழியக் கூடியதாக இருந்தது.

3

தோளில் இருந்து காமிராவை இறக்கி கோணம் பார்த்த கெவினுக்கு இன்னொரு வியப்பும் காத்திருந்தது. ஆம் அந்த எலும்பும் தோலுமான சிறுமிக்கும்ப் பின்னாலேயே சிறிது தொலைவில் ஒரு பிணம் தின்னிக்கழுகும் சிறுமியின் மீது பார்வையை நிலை நிறுத்திக் கொண்டு இருந்தது.

4
 
எப்போது சிறுமியின் உடலை விட்டு உயிர் பிரியும் மீதியுள்ள அந்தத் தோலையும் அதைச் சுற்றி இருக்கும் சிறிது மாமிசத்தையும் எப்போது சாப்பிடலாம் எனக் காத்திருந்தது பிணம் தின்னிக்கழுகு. கெவின் கேமரா லென்சை கண்ணுக்கு ஒத்திக் கொண்டார் சிறுமியையும் கழுகையும் ஒரு பிரேமில் அடக்கிக் கொண்டு ‘க்ளிக்’ செய்தார்.

5

அரிதான படம் பதிவாகி விட்டது. இதை விற்றால் நல்ல விலை கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் கமிராவைத் தோளில் மாட்டிக் கொண்டு தனது வண்டியை ஸ்டார்ட் செய்தார்; பறந்து விட்டார். இந்த அரிதான படத்தை நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு விற்று விட்டார்.

6

இந்தப் புகைப்படம் 1993 மார்ச் திங்கள் 26 ஆம் நாள் காலை நாளிதழில் முதல் பக்கத்தில் வெளியானது. இந்தப் படத்தைப் பார்த்ததும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் பத்திரிக்கை அலுவலகத்திற்கு தொலைப்பேசி மூலம் தொடர்புக் கொண்டனர்.

7

அனைவரும் ஒரே கேள்வியைத்தான் கேட்டனர். புகைப்படத்தில் உள்ள சிறுமி என்ன ஆனாள்? அவள் உயிருடன் பிழைத்தாளா அல்லது இறந்து விட்டாளா? இந்தக் கேள்விக்கான பதில் பத்திரிக்கையின் தொலைப் பேசி ஆப்ரேட்டரிடமோ படத்தை எடுத்த கெவின் கார்ட்டர்டமோ இல்லை. 1994இமே 23 அன்று பெரும் கை தட்டல்களுக்கு இடையே கெவின் கார்ட்டர் கொலம்பியப் பல்கலைக்கழகத்தின் பிரமாண்டமான அரங்கத்தில் இந்த அரிதான புகைப்படத்திற்கான புலிட்சர் விருதப் பெற்றுக்கொண்டார் இந்த விருது புகைப்படத் துறையில் நோபல் விருதுக்கு இணையானது.

8

விருது பெற்ற சில நாட்களுக்குப்பின் கெவின் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார். கெவினுக்கும் அங்கு இருந்த பிணம்தின்னிக் கழுகுக்கும் என்ன வேற்றுமை? இரண்டும் ஒரே விதமாகத்தான் செயல்பட்டுள்ளனர்.குறைந்தபட்சம் புகைப்பட நிபுனர் கெவின் அந்த சிறுமிக்கு ஒரு வாய் தண்ணீர் அல்லது சாண்ட்விச் தந்து உயிரைக் காப்பாற்றி இருக்கலாம்.
அல்லது தனது வலுவான கைகளினால் அந்தச் சிறுமியைத் தூக்கிச் சென்று உணவளிக்கும் அமைப்பு அலுவலகத்தின் வாயிலிலாவது சேர்த்து இருக்கலாம்; கல்லெடுத்து வீசி அந்தக் கழுகையாவது விரட்டி இருக்கலாம். ஆனால் இவற்றில் எதையும் செய்யாமல் வெறும் ஒரு படத்தை எடுத்தார்; அதை அதிக விலை தந்த பத்திரிக்கைக்கு விற்று விட்டார் என்று ஒருவர் அவர் மீது குற்றம் சாட்டியதுதான் காரணம்.

9

புகைப்பட வல்லுநர் கெவின் விரைவில் ஜோஹன்ஸ்பேர்க் திரும்பி விட்டார். இரண்டு மாதங்களுக்குப் பின் கடற்கரைக்கு அருகில் அவரது கார் நின்று கொண்டிருந்தது. அதில் அவர் பிணமாகக் கிடந்தார். கெவின் தற்கொலை செய்துகொண்டார். அவரது பிணத்திற்கு அருகில் காவல்துறைக்கு ஒரு கடிதம் கிடைத்தது. அதில் சில வரிகளே இருந்தன. முதல் முதல் வரி I am Really, Really Sorry.


செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

கீதாசாரம் - geetha saram




மறக்கவே நினைக்கிறன்



கடந்த நினைவலைகளை 
மறக்கவே நினைக்கிறன்
புதியவை மறந்தாலும் காதலியின் 
முதல் முத்தம் போல் பழையவை 
மறக்க முயன்றாலும் முடியவில்லை .....

திருப்பி தந்து விடு





கனத்துப்போன இதயத்தோடும் 
கண்ணீர் நிரம்பிய விழிகளோடும் 
காத்து கொண்டிருக்கிறேன் .......!
நான் தந்த கடிதங்களையும் ,பரிசுகளையும்
 திருப்பி தந்தது  போல என்னிடமிருந்து 
நீயாக எடுத்த என் இதயத்தையும் ,நினைவுகளையும் திருப்பி தந்து விடு


வியாழன், 22 ஆகஸ்ட், 2013

தோ‌ல்‌வி கண்ட நட்பு



காதல் தோல்வி அடைந்த போது 
நண்பன் இருந்தான் 
இன்று நட்பு தோல்வி 
அடைந்து விட்டது யாருமே 
இல்லை .......!

நமது நட்பின் ஆழம் 
அதிகம் என்றிருந்தேன் 
அதையும் விட நம் பிரிவின்
 ஆழம் அதிகமாயிற்று 
என்னை உணர்ந்தாய் என்று 
வாழ்ந்தேன் -அனைத்தையும் 
உணர்ந்த நீ எனக்கு  மட்டும் 
என்னையே உணர வைத்து 
விட்டாய் .......

விட்டு சென்ற காதலிக்கும் உனக்கும் 
ஒரு வித்தியாசம் தான் 
அவள் இல்லாமல் கொள்கிறாள் நீ
 இருந்தும் கொள்கிறாய் 
இறுதி வரை புரியவில்லை 
உன் நட்பின் அகலத்தை அளந்துகொள்ள 
நாகரீகம் கருதியேனும் நான் உன்னை 
நெகில்ந்திருந்தால் நாணயமற்றவன் 
என்று மறந்து விடு ..

நீயாக விட்ட பின்பும் நிறைய எழுதுவது 
நியாயமற்றது -எதுவானாலும் 
நல்லதோ கெட்டதோ 
பிரிவின் வலி எனக்கு மட்டுமே  .!

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

தருவீரோ உம் இதயம்





தண்ணீர் குடமேந்தி தடம் பதிக்கும் 
சாலைதனில் தவம் கிடந்தேன் தாரகையே .!!
தளிரிடை குடம் வைத்து தனங்குலுங்கும் நடை 
கண்டு தன்னிலையிழந்து கவி செய்தேன் 
தாமரையே .!
தானம் பல செய்து தரம் மிக்க சொல்கோர்த்து 
தருவித்த மடல்தனை தந்தி அடிக்க என் கைகள் 
தந்திட்டேன் உன் கையில் தந்துவிட்டாய் உன்மனதை 

தந்திட்ட என் கடிதம் உன் தனயன் கைகிட்ட தகவல் 
அறிந்தே தர்ம அடி எனக்கோ தாடைகள் கிழிந்தன 
தங்கச் சிறை உனக்கோ தங்கை பாசம் அடைத்தது 

தாரம் என்று சொல்லி தாலி மாற்றான் கட்ட தலை 
குனிந்து ஏற்று கொண்டாய் தவிக்க என்னை விட்டு 
விட்டாய் தஞ்சம் கொண்ட இதயத்தை தரை மீது வீசி 
விட்டாய் ,

தடம் பதித்தாய் புகுந்த வீடு தடம் பார்த்த என்னை மறந்து 
தண்ணீரில் மானாக தடம் புரண்ட ரயிலாக தனி மரமாய் 
நான் தவிக்க தாண்டி விட்டாய் இதயப்படி தந்து விட்டாய் 
கல்லறைப்படி ..

தண்டித்த என் இதயம் தண்டனை காலமின்றி தண்டிக்க 
மனமும் இன்றி தனியே புழுதிப்பட தரை மீது புரள்கின்றது 
தாமரையாய் மீண்டுமொரு தாரகை வருமென்று தவமியற்றி 
அழுகின்றது தரை விழுந்த என்னிதயம் தவம் விட்டெழுந்து வர 
தருவீரோ உம் இதயம் ...............?



அழகிய நகங்கள்






இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிவிடும் என்று ஒவ்வொரு நகத்தையும் ஒரு நிலவுக்கு ஒப்பிட்டு இருக்கிறான் கவிஞன்.. நிலவுக்கு ஒப்பான நகங்களை அழகாகவும் ,சுத்தமாகவும் வைத்து கொள்வது அவசியம் தானே .!முறையற்ற கருவிகள் ,சிதறிய கவனம் ,ஒழுங்கற்ற முறையில் நகத்தை வெட்டுவது போன்றவை நகங்களின் வளர்ச்சியையும் ,அழகையும் பாதிக்கும் ,தோலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நகங்களை சீராக வெட்டி  விடவும் ,நகம் வெட்டுவதற்கு முன் சவர்கார நீருள்ள பாத்திரத்தில் கைகளை ஊறவிடவும் ,நகம் வெட்டிய பின்னர் மேல் தோலை பராமரிக்க கிரீம் தடவவும் 

புதிதாக நகத்துக்கு பாலிஷ் பூசுவதற்கு முன் டின்னெர் கொண்டு பழைய பொலிசை அகற்றவும் ,பிளேட் போன்ற கருவிகளை உபயோகிக்க வேண்டாம் ,நகங்களுக்கு முதல் எதிரி தண்ணீர் தான் அதிக நேரம் நகங்கள்  தண்ணீரில் நனையும் போது நகத்தில் இருக்கும் இயற்கையான எண்ணெய்ப் பசை தீர்ந்து விடுகிறது இதனால் நகங்கள் வறண்டு உலர்ந்து போய்விடுகின்றன  நகங்கள் உலர்ந்து விடுவதை தடுக்க சரும எண்ணைகளை பூசலாம் ,இதன் மூலம் நகத்தின் எண்ணெய்ப் பசை பாதுகாக்கபடும் ..

வாரம் ஒருமுறையாவது நகங்களை சுத்தமாக்கி ஒப்பனை செய்து அழகாக வைத்து கொள்ள  வேண்டும் ,இரவில் தூங்க போகும்  முன் மேல் தோலுக்கு மொய்ச்சரைஸ் கிரீம் அவசியம் தடவ வேண்டும் இது நகங்களை மென்மையாக வைத்துகொள்ள உதவும் .மூன்று மாதத்திற்கு ஒரு முறைதான் செயற்கை நகங்களை பயன்படுத்த வேண்டும் ,அப்போது கூட வாரத்திற்கு ஒன்று  அல்லது  இரண்டு முறை நகங்களை இயற்கையாக திறந்து இருக்கும் படி பார்த்து கொள்ளவும் .

நகங்கள் ஆரோக்கியமாகவும் ,வலிமையாகவும் இருக்க உணவில் கல்சியம் மற்றும் புரதச்சத்துக்களை அதிகமாக சேர்த்து கொள்ளவும் .நகங்களை வெட்ட கத்தரிக்கோலை பயன்படுத்த கூடாது ஏனெனில் கத்தரிக்கோலால் வெட்டும் போது நகங்களின் வடிவம் மாறிவிடும் 


திங்கள், 19 ஆகஸ்ட், 2013

அயல் தேசத்து காதல்..!





எப்போதுமே காதலுக்கு அந்தஸ்து எதிரிதான் ,


விட்டு போன எனது துயரங்களை மீள் பரிசீலிக்க அடிக்கடி வந்து செல்கிறாள் வட்டி கேட்கும் கடன்காரனாய் ,எதையும் பெறாமல் வட்டியும் முதலுமாய் செலுத்தும் கடன்காரன் நான் .  நீ எடுத்த சென்ற என் சந்தோசங்களை மீட்டு தர யாராலும் முடியவில்லை ,நீ தந்தவைகளை எடுத்துக்கொள் ,என்னை மட்டும் திருப்பி தந்து விடு .....உனக்காக மட்டும் ஒட்டி கிடந்த அந்த ஒற்றை சதையை கசாப்பு கடைகாரனின் மனம் கொண்டு வெட்டி எறிந்து விட்டாய் .....நீ எனக்கு தோழியாக மட்டுமே இருந்திருக்கலாம் நானும் தோழனாகவே வாழ்ந்திருக்கலாம்..

மழை பெய்து நிற்கும் முன் என் வாழ்வில் வந்து வசந்தம் தந்து சென்றாய்,துளியின் ஈரம் கூட மண்ணை தொடவில்லை அதற்குள் மறைந்து விட்டாயே உனது பிரிவுகள்  என் பார்வைப்புலத்தினின்றும் அகன்றன.. உன்னை  பின்தொடரவியலாதபடி என்னை விட்டு அகன்று சென்று விட்டாய்  ...(Feb 12th ) இப்போது அதுவல்ல பேச்சு உன் நேசத்தால் இழந்த என் வாலிபத்தை மட்டும் திருப்பி தந்து விடு எல்லாவற்றையும் எடுத்தச்சென்றபின் உன் நினைவுகளை மட்டும் இங்கெதற்கு வைத்திருக்கிறாய் எடுத்து சென்று விடு 

என் அத்தனையும்  மறந்து உன்னிடம் மண்டி இட்டு கேட்டேன் நீ மட்டும் என்னவளாகி  விடு என்று ..உன் ஆங்கில வார்த்தைகள் என் உணர்வுகளை காயப்படுத்திவிட்டது அப்படி தான் பேசினாய் ..எனக்கென்று எதையும் கேடு பெறுபவன் அல்ல என் நீண்ட பயணத்தின் முடிவில் உன் முகவரி மட்டும் இருக்க வேண்டும் ..

ஆழ்ந்த மூச்சை இழுத்துக்கொள்கிறேன். 
நான் சபிக்கப்பட்ட கடவுளின் நோஞ்சான் குழந்தை.. உன் பிரியங்கள் எனக்கு வாய்ப்பதில்லை..

இன்று மட்டுமா புரிந்து கொள்ள போகின்றாய் .......





என்றுமே 
புரியாத என்னை 
இன்று மட்டுமா புரிந்து கொள்ள போகின்றாய் .......


இன்று வியர்க்கும் வியர்வைத்துளி மட்டுமல்ல அந்த மழைத்துளியும் நினைவுபடுத்துகின்றது எனக்கான உன் முதல் முத்தத்தை ,சில கவிதைகள் ,சில நினைவுகள் என்று மட்டும் வரையறுத்து கூற முடியவில்லை .உன் நினைவுகள் இதுதான் என்றும் என் காதல் அது தான் என்றும் என் இலக்கணத்திலும் வரையறுத்து கூறவும் முடியாது ,இன்று எல்லாமே உன் நினைவுகளாலும் மட்டும் ஆனதென்றும் நான் உன்னால் ஆனவன் என்பதையும் எப்படி புரிய வைப்பேன் .

ஆதாம் தோட்டது கனியை ஏவாள் கடித்த நாளிலிருந்து காதலும் கடிப்பட்டு கொண்டுதானிருக்கின்றது .தன்னிலை அறியாது நேற்று பிறந்த குழந்தைப்போல அடிக்கடி எனக்குள்ளே அழுதுகொள்கிறேன் .. விட்டு சென்றவள் நீ என்றாலும் ஏற்க முடியவில்லை ஏமாற்றியது நீ தானா என்று ......?நீ கலைத்து சென்ற என் வசிப்பிடம் ஒழுங்கற்று கிடக்கின்றது ..எப்படி இதை புரியவைப்பது.! நெருங்க முடியாத எங்கோ ஓர் மாளிகையில் நீ ,நான் ஓர் மூலையில் ..நினைவுகளால் கூட நெருங்க முடியாத உன்னையே நித்தமும் நேசிக்கும் பிரபஞ்ச "பரதேசி " நான் .

உன்னைப்போல் உணர்வருத்து வாழ முடியவில்லை ,போதை இல்லாமல் புத்தியை அலைகழிக்கும் உன் நினைவுகளை என்ன செய்வது .?உன் காதல் போதை என்னை ஆட்கொண்டபின் மீள்வது எப்படி என்று புரியவைப்பாயா .......?ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து விழித்தெழுந்து அழும் குழந்தையை அரவணைப்பது போல அரவணைத்தாய் ஒரு "அன்னையாய் "தடுமாறிய என்னை தலை நிமிர்த்தி நடக்க வைத்தாய் ஒரு "தந்தையாய் "கண்ணுக்கும் இமைக்கும் இடையே உள்ள உறவை உணரவைத்தாய் ஒரு " ஆசானாய் " காதலுக்கும் காமத்திட்குமான வேற்றுமையை உணரவைத்தாய் ஒரு "காதலியாய் "வாழ்வதற்க்கு முன்பே சாவு என்று சொல்லி நரகத்தையும் தந்து விட்டாய் ஒரு தோழியாய் .

எதுவுமே புரியவில்லை இன்றும் உன் புன்னகையின் பின்னால் ஒளிந்து கிடப்பது சாபமா .?விமோசனமா என்று ..........? ஒன்றும் செய்யமுடியாத என் காதலை கொண்டு காத்து கிடக்கின்றேன் மிட்டாய்க்கு ஏங்கும் குழந்தை போல உன்னை தொலைத்து விட்டு அழுகிறேன் எனக்குள்ளே ,..என்னை அழைக்கும் உனது குரல் எங்கே என்று தேடித்தேடி எனது புதிய காலைகளும் பழைய நினைவுகளும் ஓடிக்கொண்டிருக்கின்றது ,...

எப்படியாவது என்றாவது உன் நினைவுகளை என்னிடம் இருந்து பிரித்து வைக்க வேண்டும் என்று நினைத்து போது தான் உணர்த்து கொண்டேன் உன் நினைவுகள் இல்லாமல் நான் இல்லை என்று 


"உண்மை காதல் என்று எதுவும் இல்லை நீ உணரும்வரை "