என்னவளே ...
உன் விருப்பம் தெரியாமல்
நான் உன் மீது காதல் கொண்டேன்
அது தப்பில்லை ஆனால் ,நீயோ
என் வாழ்க்கைத் துணை என்று
என் உள் மனதில் செதுக்கியிருந்தேன்
நீ அறிவாயா .?
உன் கருக் கூந்தல் அழகைக் கண்டு
கருமேகமே வெட்கித்து தலை சாய்கிறது
உன் விழிகளின் அழகில் மயங்கி
விண்மீன்கள் உதிர்ந்து விழுகின்றன
உன் கொவ்வை இதழ்களின் புன்னகையில்
தான் பூக்களே மலர்கின்றன
நீ புன்னகைகாவிடில் என் முற்றத்து
மலர்கள் மலர மறுக்கின்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக