counter

Well Come To My Page

திங்கள், 17 மார்ச், 2014

ஹைக்கூ கவிதைகள்


வாழ்க்கை
கருவறையில் ஆரம்பித்து கல்லறையில்  பயணம்

கருப்பை
சிசுக்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை

பரிசு
கடவுள் தந்தார் பிறப்பு பரிசு
காலன் தந்தான் இறப்பு பரிசு

காதல்
இதய பாத்தியில் ஆணும் பெண்ணும்
விதைக்கும் இளமைகாலத்து இன்பப்பயிர்

அன்பு
உலகையே ஆட்டிப்படைக்கும் உன்னத உணர்வு

பெற்றோர்
நம் உணர்வுகளுக்கு உயிர் கொடுக்கும் உத்தம பிறவி

நிறங்கள்
கண்ணனுக்கு  விருந்தளிக்கும் கடவுளின் படைப்பு

மரணம்
எழுதப்படதாத காவியத்தின் இறுதி அங்கம்

பிரிவு
உறவின் ஆழத்தை அறிய கடவுள் அளித்த சந்தர்ப்பம்

பேனா
என் உள்ளத்திற்கு உருவம் கொடுக்கும் தாய்

பேனை
தன் உயிர் துளியை எம் தலையெலுத்தாக்கும் உருவாக்கப்பட்ட ஓர் உயிர்

நகை
உயர்ந்தோரை கூட காட்டிடும் உலோகம் -உன்னை அழகு படுத்தும் அற்புதம்

மழை
எம் வாழ்வின் துன்பம் கண்டு எமக்காய் வானம் விடும் கண்ணீர்

மரணம்
கரணம் தவறினால் மட்டுமல்ல ..........
காதல் தவறினாலும் மரணமே !

நினைவு
உனது மறக்க முடியாத சில நினைவுகளினால் என்னை நினைவில் வைத்துக்கொள்ள மறந்து விடுகிறேன் .

ஏமாற்றம்
கவலை இல்லாத என் இதயத்துக்கு கவலை கொடுத்தாய் நீ


கருத்துகள் இல்லை: