
பைத்தியகாரியாகினால் கந்தல் கட்டி
பிச்சைகாரியாகினால் வாழ்க்கை
வெள்ளத்தால் அள்ளுண்டு போய்
பட்டனத்து தெருவோரம் கரையொதுங்கினால்
இன்று அவள் துணை கோர முகம்
கொண்ட கூடவே திரியும் சொறி
நாய் தான்
இளமை அவள் மீது எழிலைத் தெளித்த போது
ஆசை மொழிகள் உதிர்த்து அவளை அணைத்து ,
அனுபவித்து முடிவில் நானறியேன் என
கூறி மறைந்த ஆறறிவு நாயைவிட
எச்சில் சோற்று நன்றிக்காய் இடையறாது
அவளைத் தொடரும் இந்தச் சொறிநாய் எத்தனையோ
மேலானது
போகும் வழி எங்கே ...?
பொழுது விடிவது எங்கே ....?
என்றறியா அவளுடன் பயணிக்கும் நாயின்
பயங்கரத் தோற்றத்துக்கும் பயமற்ற
உறுமல்களுக்கும் பயந்து இரவு திரைமறைவில் ,
அவளைத் தொட முயன்று தோற்ற சில பண்புகெட்ட
மனித நாய்கள் ஒட்டமெடுத்தன இருளைக்
கிழித்துக் கொண்டு ..
வாகனங்கள் எத்தனை ..?
பாதை நீதிகள் எத்தனை ..?
மஞ்சள் கோடுகள் எத்தனை ..?
அதை மதிப்பவர்கள் எத்தனை ..?
கண்களை மூடிக்கொண்டு பாதையைக் கடப்பாள்
அந்தப் பாவை ;...
பெண்ணவளை நம்பிக் கொண்டு பின் தொடர்ந்தது
நாயும் .
ஒரு நாள் ,
பேருந்தில் அடிபட்டு பேதையவள் தான்
இறந்தாள் பின் சென்ற நாயதுவும்
பின் சில்லால் மாண்டதுவே ...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக