counter

Well Come To My Page

திங்கள், 9 ஜூன், 2014

மனித மூளை


மனித மூளையின் எடை சுமார் 1400 கிராம் இருக்கும் .மனிதனின் ஒட்டுமொத்த எடையில் இது 2.5 சதவீதம் .

மனித மூளையின் மடிப்புகளை விரித்தால் சுமார் 2500 ச.செ.மீ பரப்பளவு இருக்கும் .

சாதரணமாக தன மூளையில் 90,000 கோடி சொற்களை நினைவுபடுத்திக் கொள்ள முடியும் .

இரத்தத்தில் உள்ள 25 சதவீத பிராண வாயு மூளையால் பயன்படுத்தப்படுகின்றது .

15 வினாடிகளுக்கு ஒரு துளி இரத்தம் கூட மூளைக்கு செல்லாமல் தடைப்பட்டால் மயக்கம் வந்துவிடும் .

இதயத்திலிருந்து பம்ப் செய்யப்படும் இரத்தத்தில் 20 சதவீதம் மூளைக்கு செல்கிறது .

35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தினமும் மூளையில் உள்ள நரம்பு செல்கள் குறைந்து கொண்டேயிருக்கும் .இதனால்தான் வயதாகும் போது  ஞாபக மறதி ஏற்படும் .

உடலில் வலி எங்கு ஏற்பட்டாலும் அதை உணர்வது மூளைதான் .ஆனால் மூளையில் ஏதேனும் காயம் ஏற்பட்டால் அந்த வலியை உணரும் சக்தி மூளைக்கு கிடையாது .

மூளையில் இரத்தம் உறைதல் அல்லது மூளையின் இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டால் பக்கவாதம் உண்டாகும் .

கருத்துகள் இல்லை: