தண்ணீர் குடமேந்தி தடம் பதிக்கும்
சாலைதனில் தவம் கிடந்தேன் தாரகையே .!!
தளிரிடை குடம் வைத்து தனங்குலுங்கும் நடை
கண்டு தன்னிலையிழந்து கவி செய்தேன்
தாமரையே .!
தானம் பல செய்து தரம் மிக்க சொல்கோர்த்து
தருவித்த மடல்தனை தந்தி அடிக்க என் கைகள்
தந்திட்டேன் உன் கையில் தந்துவிட்டாய் உன்மனதை
தந்திட்ட என் கடிதம் உன் தனயன் கைகிட்ட தகவல்
அறிந்தே தர்ம அடி எனக்கோ தாடைகள் கிழிந்தன
தங்கச் சிறை உனக்கோ தங்கை பாசம் அடைத்தது
தாரம் என்று சொல்லி தாலி மாற்றான் கட்ட தலை
குனிந்து ஏற்று கொண்டாய் தவிக்க என்னை விட்டு
விட்டாய் தஞ்சம் கொண்ட இதயத்தை தரை மீது வீசி
விட்டாய் ,
தடம் பதித்தாய் புகுந்த வீடு தடம் பார்த்த என்னை மறந்து
தண்ணீரில் மானாக தடம் புரண்ட ரயிலாக தனி மரமாய்
நான் தவிக்க தாண்டி விட்டாய் இதயப்படி தந்து விட்டாய்
கல்லறைப்படி ..
தண்டித்த என் இதயம் தண்டனை காலமின்றி தண்டிக்க
மனமும் இன்றி தனியே புழுதிப்பட தரை மீது புரள்கின்றது
தாமரையாய் மீண்டுமொரு தாரகை வருமென்று தவமியற்றி
அழுகின்றது தரை விழுந்த என்னிதயம் தவம் விட்டெழுந்து வர
தருவீரோ உம் இதயம் ...............?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக