இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிவிடும் என்று ஒவ்வொரு நகத்தையும் ஒரு நிலவுக்கு ஒப்பிட்டு இருக்கிறான் கவிஞன்.. நிலவுக்கு ஒப்பான நகங்களை அழகாகவும் ,சுத்தமாகவும் வைத்து கொள்வது அவசியம் தானே .!முறையற்ற கருவிகள் ,சிதறிய கவனம் ,ஒழுங்கற்ற முறையில் நகத்தை வெட்டுவது போன்றவை நகங்களின் வளர்ச்சியையும் ,அழகையும் பாதிக்கும் ,தோலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நகங்களை சீராக வெட்டி விடவும் ,நகம் வெட்டுவதற்கு முன் சவர்கார நீருள்ள பாத்திரத்தில் கைகளை ஊறவிடவும் ,நகம் வெட்டிய பின்னர் மேல் தோலை பராமரிக்க கிரீம் தடவவும்
புதிதாக நகத்துக்கு பாலிஷ் பூசுவதற்கு முன் டின்னெர் கொண்டு பழைய பொலிசை அகற்றவும் ,பிளேட் போன்ற கருவிகளை உபயோகிக்க வேண்டாம் ,நகங்களுக்கு முதல் எதிரி தண்ணீர் தான் அதிக நேரம் நகங்கள் தண்ணீரில் நனையும் போது நகத்தில் இருக்கும் இயற்கையான எண்ணெய்ப் பசை தீர்ந்து விடுகிறது இதனால் நகங்கள் வறண்டு உலர்ந்து போய்விடுகின்றன நகங்கள் உலர்ந்து விடுவதை தடுக்க சரும எண்ணைகளை பூசலாம் ,இதன் மூலம் நகத்தின் எண்ணெய்ப் பசை பாதுகாக்கபடும் ..
வாரம் ஒருமுறையாவது நகங்களை சுத்தமாக்கி ஒப்பனை செய்து அழகாக வைத்து கொள்ள வேண்டும் ,இரவில் தூங்க போகும் முன் மேல் தோலுக்கு மொய்ச்சரைஸ் கிரீம் அவசியம் தடவ வேண்டும் இது நகங்களை மென்மையாக வைத்துகொள்ள உதவும் .மூன்று மாதத்திற்கு ஒரு முறைதான் செயற்கை நகங்களை பயன்படுத்த வேண்டும் ,அப்போது கூட வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை நகங்களை இயற்கையாக திறந்து இருக்கும் படி பார்த்து கொள்ளவும் .
நகங்கள் ஆரோக்கியமாகவும் ,வலிமையாகவும் இருக்க உணவில் கல்சியம் மற்றும் புரதச்சத்துக்களை அதிகமாக சேர்த்து கொள்ளவும் .நகங்களை வெட்ட கத்தரிக்கோலை பயன்படுத்த கூடாது ஏனெனில் கத்தரிக்கோலால் வெட்டும் போது நகங்களின் வடிவம் மாறிவிடும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக