அன்று நீயும் நானும் ஒன்றாய்
இருந்த இடத்தில் இன்று
நான் மட்டும் தனியாய் .........
தனிமையில் நானும்
வாடுகிறேன் உன்னைக்
காண மாட்டோமா
என்ற ஏக்கத்தில்
எத்தனை பேருக்கு
சொல்லுவது
நான் காத்திருப்பது
உனக்காக என்று
ஒரு சில நொடிகள்
உன்னை பிரிந்தால்
நான் அவஸ்தைப்படும்
தருணத்தில் உன்
குரல் கேட்டு
ஆனந்தம் அடைவேன்
உன் குறுஞ்செய்தி
பார்த்து களிப்படைவேன்
ஆனால் இன்றோ
அது மொத்தமும்
இன்றி நான் மட்டும்
ஒரு தனிமை பறவையாய்
உன் வருகையை
எதிர்பார்த்து
காத்திருக்கிறேன்
ஒவ்வொரு நொடியும்
ஏக்கத்தில் என் கண்களும்
ஆவலில் என் கைகளும் ........!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக