counter

Well Come To My Page

வியாழன், 19 பிப்ரவரி, 2015

நீ


என்னை நீ மறந்துவிட்டாயோ  ?
உன்னை நான் நினைக்கும் 
வேளையில் என்னை நீ 
இழந்து விட்டாயோ .?
உன்னை நான் ஏற்கும் 
வேளையில் காலம் 
கடந்தென்ன பயன் ?
ஞானம் பிறந்தென்ன 
பயன் .?
கைமாறிய கவிதயானேன் 
பள்ளியோர நினைவலைகள் 
என்னுள் பரிதவிப்பை 
ஏற்படுத்துகின்றன 
தனிமை என்னை 
தழுவும் போதெல்லாம் 
கண்களின் வலியும் 
கண்ணீர் உன்னையல்லவா 
நினைவுக் கூறுகின்றது 
சிதைந்த நினைவலைகள் 
சிலருக்கு இன்பத்தையும் 
பலருக்கு  துன்பத்தையும்  
தரும் துன்பத்தின் 
விளிம்பில் நான் 
உண்மை காதலுக்கு 
இறப்பில்லை என்றால் 
தேடிப்பார் உன் 
இதயத்தின் ஒரு 
மூலையில் நான் 
வந்து  நிற்பேன்
நினைவாக .!
மறக்க நினைக்கும் 
நினைவுகள் சில 
நேரம் நினைக்க 
விரும்பும் 
நினைவுகளாகின்றன 
என்றாலும் 
என்றேனும் 
உடன் இருக்கும் 
உன் எண்ணத்தோடு 
உயீர் துறப்பேன் 
இந்த ஜென்மத்தில் 
இவன்  !

கருத்துகள் இல்லை: