புகழ்பெற்ற கவிஞர் ஷெல்லி தன் தாயாரின் கல்லறையில் பொறித்திருந்த கல்லறை கவிதை :
சப்தமிட்டு நடக்காதீர்கள் இங்கேதான் என் அம்மா இளைப்பாறிக் கொண்டிருக்கிறாள் .!
உலகப் பேரழகி கிளியோபட்ராவின் கல்லறை வாசகம் :
உலகத்திலேயே அழகான பிணம் இங்கே உறங்கிகொண்டிருக்கின்றது .நல்ல வேளையாகப் பிணமானால் .இல்லாவிட்டால் இந்தக் கல்லறைக்குள் ரோமாபுரி ராஜ்ஜியம் தூங்க வேண்டியதாக இருக்கும் .
மகா அலெக்ஸான்டரின் கல்லறையில் :
இந்த உலகம் போதாது என்று சொன்னவனுக்கு இந்தக் கல்லறைக் குழி போதுமானதாக இருந்தது .
ஒரு கம்யூனிஸ்ட் தொழிலாளியின் கல்லறை வாசகம் :
இங்கும் புதை குழியில் கூட இவன் கரையான்களால் சுரண்டபடுகிறான் .
அரசியல்வாதியின் கல்லறை மீது எழுதப்பட்ட வாசகம் :
தயவு செய்து இங்கே கை தட்டி விடாதீர்கள் ,இவன் எழுந்து விடப் போகிறான் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக