போதைக்கு அடிமையாகாதே ;
புதைகுழியில் வீழ்ந்திடுவாய் .!
மாதுக்கு அடிமையாகாதே
மதிகெட்டு அலைந்திடுவாய் .!
சூதுக்கு அடிமையாகாதே
சுற்றத்தை இழந்திடுவாய் .!
பணத்திற்க்கு அடிமையாகாதே
குணத்தை இழந்திடுவாய் .!
புகழ்ச்சிக்கு அடிமையாகாதே
மகிழ்ச்சியை இழந்திடுவாய் .!
தூண்டுதலுக்கு அடிமையாகாதே
தூண்டிலில் மாட்டிக்கொள்வாய் .!
புலன்களுக்கு அடிமையாகாதே
பலன்களை இழந்திடுவாய் .!
கோபத்திற்க்கு அடிமையாகாதே
ஆபத்தில் வீழ்ந்திடுவாய் .!
உணர்ச்சிக்கு அடிமையாகாதே ;
உன்னையே இழந்திடுவாய் .!
அன்பிற்கு அடங்கு ,அறிவுக்கு அடிபணி அத்தனையும் பெற்றிடுவாய் !!!!!!
(ஓர் ஆயுள் கைதியின் அறையில் கண்ட வாசகம் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக