
நிம்மதியை குழி தோண்டும் பெண் ..!
நிம்மதியை குழி தோண்டி
புதைத்து விட்டு
கனவுகளை விதைக்க
சென்றது வாழ்க்கை ....
காதலிப்பது இனிமைதான்
பிரிவு மட்டும் துயரத்திலும்
துயரம் - அழுத்தி அழுத்தி
அவள் நினைவை மல்லாக்
கிடந்தது கிளற விடாமல்
பாறங்கல்லொன்றை தூக்கி
வைத்தேன் தலையில்
இல்லை என்றால்
எழுத்துக்களிடையே
பலவந்தமாய் புகுந்து
கவிதை எங்கும்
ஒட்டி கிடக்கிறது
சோகங்கள் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக