counter

Well Come To My Page

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

நிலவு இரண்டு



தமிழை தரம் பிரித்து -ஒவ்வொரு 
எழுத்தாய் எடுத்து தூசு தட்டி சலவை செய்து 
வானவில்லின் வர்ணத்தை கலவை செய்து 
சத்தமில்லாமல் முத்தம் ஒன்று கொடுத்து 
கவிதை ஒன்று எழுதினேன் -"வையகத்தில் 
வானம் ஒன்று நிலவு இரண்டு என்று "
என் கவிதையை விஞ்ஞானமும் ஏற்கவில்லை 
மேஞ்ஞானமும் ஏற்கவில்லை -கவிதை 
பிழையென்று கண்டனம் தெரிவிக்கின்றனர் 
அதனால் சகியே நீ வந்து நிரூபித்து விடு 
உலகத்தில் நிலவு  ஒன்றல்ல இரண்டுதான் 
என்று வண்ணம் கொண்ட வெண்ணிலவு 
விண்ணில் ஒன்று -தங்க கணம் கொண்ட 
பெண்ணிலவு மண்ணில்  ஒன்று அது "நீ "
தான் என்று 

கருத்துகள் இல்லை: