counter

Well Come To My Page

புதன், 26 ஜூன், 2013

காதல்..............





என் காதல் நேசித்துக்கொண்டிருக்கிறது.................

தன்னைத்தானே .!
எந்த எதிர்பார்ப்புகளுமற்று ஒரு கடைக்கண் பார்வையையோ அல்லது சின்னப்புன்னகையைத்தானும் பரிசளிக்காத காதலியின் பின்னால் 


ஒரு மதுக்கோப்பையின் வண்ணங்கள் கொண்டதா காதல்.. ஒளியில் மினுங்கும் இந்தத் திராவகத்தினுள் உறைந்திருக்கிறது உன் பிரியம்...........

என்று பரிசோதித்து விட்டு கழுவிக்காயவைத்துவிட்டு வெளியேறியவள் நீ. 
வெளியேறிப்போனபின்பும் நான் எதிர்வினைகள் ஆற்றிக்கொண்டிருந்தேன்.. 


உனது குறிப்பேடுகளில் எழுதிக்கொள்.................
அன்பின் எதிர்வினைகள் ஆயுளுக்கானவை அவை நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது முடிவிலிக்காலம் வரை.. என்று..


உனது புன்னகையின் பின்னால் ஒழிந்திருக்கும் விசமத்தின் கொடுவேர்களைக் கண்டு கொள்ளத் திராணியற்றவனாகிக் புன்னகைக்கும் தொழிநுட்பம் வாய்க்கப்பெறாமல் அழுது புலம்பி கொண்டிருப்பவன் நான் ........

காதலுக்கு மட்டும் விதவிதமான எதிரிகள். சிலசமயங்களில் காதலர்களே காதலின் எதிரிகளாகிவிடுகிறார்கள்...


சாந்தன் 

கருத்துகள் இல்லை: