எறும்புகள் இழுத்துச் செல்லும் சிறகொடிந்த ஈசலாய்உன் நினைவுகளிடம் என் இதயம்...
எல்லாம் நம்பிக்கைதான் பகலிலும் தோன்றும் நிலவாய், என்றாவது புலப்படும் என் காதல் உனக்கு ..
முற்ப்பிறவியில், இதைவிடவும் அதிகமாய் உன்னைக்காதலித்திருக்கக்கூடும் நான் உன்மேல் இன்னும் பைத்தியம் போதாதென்று இழுத்தடிக்கின்றதோ காதல் இந்த பிறவியில் ..?
மருதாணியிட்டாய்... நான் கேட்கவில்லை கூடுதல் சிவப்பிற்கேனடி என் இதயத்தை அறுத்தாய்...
தயவுசெய்து சொல்லிச்செல் என்ன விலைக்கு விற்றாய் என்னால் வாங்கமுடியாத உன் இதயத்தை ????
நான் இறந்தபின்பாவது இந்த இ௫ண்ட உலகிர்க்கு உரக்கச்சொல் நீ என் தோழி அல்ல காதலி என்று.
வாழ்ந்து பழகிவிட்ட அறையிலி௫ந்து கிளம்ப மறுக்கின்றன உன்னுடையதான நினைவுகள்....
குறிசொல்லும் ஜோசியக்காரனின் எந்த வார்த்தையும் செவிக்குள் ஏறவில்லை உன்னைக்குறித்து பேசும்வரை ..........
மேகம் வானத்தின் அழுக்கென்றால்உன்னை பற்றிய என் ஞாபகங்களை என்னவென்பாய்?
மறக்க நினைக்கையில்தான் உன் நினைவுகள் இன்னும் இன்னும் நெருக்கமாய் வருகின்றது .......
மரண தண்டனைக்குள் தள்ளப்பட்ட என்னை வாதாடி விடுதலை தருவாய் எனப் பார்த்திருக்க மீண்டும் சோகச் சிலுவைக்குள் அறைந்து சென்றுவிட்டாலே ..!
அழுகிற முகமெலாம் கோழைத்தனத்தின் முகவரி என்று எண்ணி விடாதே அவைகள் பாசத்தின் உறைவிடம் ......
" எல்லாம் இருந்தும் எதுவுமில்லை " என்ற பழமொழிக்கு அர்த்தம் புரியவைத்தவளே உனக்கு நன்றி
நாட்கள் நகர்ந்தாலும் உன் நியாபகங்கள் நகர்வதில்லை ஏன் ....?
என்னை வெற்றி கொள்வது தான் உன் லட்சியம் என்றால் எத்தனை முறை வேண்டுமானாலும் தோற்றுப்போவேன் உனக்காக மட்டும் ...
நீ நேசித்த அளவிற் குயாராலும் என்னை நேசிக்க முடியாது...நீ வெறுத்த அளவிற்கு யாராலும் வெறுக்கவும் முடியாது .......................
நான் ஏமாறவும் இல்லைநீ ஏமாற்றவும் இல்லை.!!என் காதலுக்கோ அதிர்ஷ்டம் இல்லை.!!
கிழிந்த பக்கங்களை அப்படியே வைத்து வாசித்து கொண்டிருக்கிறேன் நம் பழமை காதலில் .......... நீ விட்டு சென்ற பிரிவின் வலியை பின்னிரவுகளில் நனைந்து போன என் தலையணையை கேட்டுப்பார் உனக்கான என் காதலை சொல்லும்
நிழலுக்கு ஒரு மரமில்லா பாலைவன வெளிகளில் உன் காதலின் தாகங்களோடு நதி தேடி நடக்கிறேன் ......என் பயணங்கள் எங்கோ செல்கின்றன பாதைகள் எதுவென்று தான் புரியவில்லை ...........
உற்சாகமூட்டும் மேலதிகக் கொடுப்பனவாக அவ் அப்போது உன் மின்னஞ்சல்கள் என்னை சமாதானபடுத்துகின்றது .......
என்னவள் பகல்வேளைகளில் வழியில் தற்செயலாகப் பார்க்க நேர்கையில் தெரியாதவனொருவனைப் போல என்னைத் தாண்டிச் செல்கிறாள் .........
காலங்களோடு போராடுகின்றேன்.. காத்திருப்போடு தவிக்கிறேன்.. காயப்பட்ட உள்ளதோடு .!
ஒருமுறையாவது நீ நீயாக இல்லமால் நானாக இருந்து பார் அப்போதுதான் என் காதலின் ரணம் உனக்கு புரியும் ..
எழுதி முடிக்கப்பட்ட கவிதையிலிருந்து தூக்கி வீசப்பட்ட சொற்களைப் போலவே உன்னால் நிராகரிக்கபட்டுகொண்டிருகின்றேன் ........
என்னை ஆக்கிரமித்துள்ள உன் நினைவுகளை கொன்று என்று நான் சுதத்திரம் பெற்று கொள்ள போகின்றேன் .....
காதலின் தோல்வியின் காரணம் தேடியே என் வாலிபம் தொலைந்துகொண்டிருகின்றது ..........
பாலைவனக் கானல் நீரை சோலைவனக் குளிர் நீரென நம்பி வந்த நான்தான் ஏமாந்தேன் மறந்து விடுவேன் என்று எண்ணாதே மறவாமல் வாழுவேன் உன் நினைவுகளோடும் என் காதலோடும்.
மரணம் விழி மூடும் முன் இருக்கிறதா நமக்குள் இன்னொரு சந்திப்பு..........?
என் தேவைகளுக்காக ஓர் தேவதையைத் தேடினேன் அவளும் தேவதையாகத் தான் இருந்தால் அவள் தேவைகள் முடியும் வரை.
உன் புன்னகைகள் நிகழ்த்தும் மாற்றங்களறிந்தும் தேடிக்கொண்டிருக்கிறேன் எங்கேயே தொலைந்துபோன என் புன்னகைகளை
எவ்வளவு அவசரமாகப் போய் கொண்டிருந்தாலும்யாரேனும் உன் பெயர் சொல்லி அழைத்தால் ஒரு நிமிடம் நின்று திரும்பிப் பார்க்கிறேன் ஏமாறப்போவது தெரிந்தும்...
உனக்காக நான் நிர்ணயித்த பட்டாம்பூச்சிகள் உலகம் பட்டுபோய்கிடக்கிறது இன்று உன் புன்னகை தொலைத்து ..............
கடந்து சென்றுவிட்டாய் நீ வந்து போனதன் அடையாளமாய் நான் மட்டும் நின்றுகொண்டிருக்கிறேன் இன்னமும் இங்கேயே..!
உன்னை பற்றி எதையும் அழிக்க எண்ணமில்லை என் நெஞ்சில் எவ்வளவு வலி கண்டபோதிலும்...
வலிக்கான சரியான வரிவடிவம் வார்த்தைகளில்வருவிக்க முடிவதில்லை வழங்கிவிட்டுச் சென்ற உன்னாலும் கூட...
சாய்ந்து அழக கூட வேறு தோள்கள் இல்லாமல் செய்துவிட்டாய் இனி நான் யாரிடம் போய் என் சோகங்களைச் சொல்லியழ...?
இல்லாத உன் மீது மட்டும் ஏனடி இவ்வளவு ஏக்கங்கள் ..............?
எனக்குள் எனக்காய் பிறந்த ஓர் இதயம் இன்று நித்தம் நித்தம் அவளுக்காய் துடிகின்றது ..............
உனக்காக மட்டுமே வாழப் பழகிவிட்ட எனக்கு - எனக்காக வாழ தெரியவில்லை...
உன்னை இழந்தேன் என்பதை நான் நம்ப மறுத்தாலும்,தொடர்ந்து என்னை என்னாலலேயே ஏமாற்றிக்கொள்ள இயலாததால்,இன்று ஊர்கிதப்படுதி கொள்கிறேன் நான் இறந்துவிட்டதாக .
நீ இருந்து நான் இறந்திருந்தால் ஒரு உணர்ந்திருப்பாய் என் மன வேதனைகளை...
பல பெண்களை கடந்து வந்த எனக்கு உன்னை மட்டும் கடந்து செல்ல மனமில்லை ,ஏன் இந்த மன மறுப்பு ?
ஏழையின் வேண்டுதல் இறைவா உன் வரங்கள் அவளையே சென்றடையட்டும் எனக்கு அவளின் சாபங்கள் போதும்...........
ஒவ்வொரு காலையும் சோம்பல் முறிக்கையில் கடந்த கால நினைவுகள் என் கால்களை இடருகின்றது .......
நீ விரும்பி விளையாடும் பொம்மை என்பதால் பத்திரமாய் வைத்திருக்கிறேன் என்னை.
நான் என்ன பாவப்படவனா அவசர நிலை பிரகடனமாய் ஏனோ என்னை அகற்றி எறிந்துவிட்டாயே !!!
வந்த சுவடழித்த காதலியே வடுக்கள் மட்டும் ஏன் விட்டுச் சென்றாய் முகவரி தொலைத்த என்னிடம் .........? வடம் இழந்த தேராய் ,வலுவிழந்த புயலாய்செயல் மறந்த மதியாய் .உனை சேராதிருப்பது என் விதியா .........?
அன்பை சொல்கிறேன் என்று அழகானவள் ஒருத்தி வந்தாள் பாக்கெட்டில் பணவீக்கம் என்றதும் பாதியில் சென்றுவிட்டால் .............
காயப்பட்ட என் இதயத்தில் காதல் என்னும் போர்வையில் ஓய்வு கொண்ட பட்சியே,புது புது அர்த்தங்களை என்னில் உணர வைத்த உன் உறவினை, உயிர் மூச்சு உள்ளவரை மறக்க மாட்டேன்... துண்டுப்பட்ட மனம் மட்டும் விம்மி விம்மி கதற மெண்டு மெண்டு விழுங்கும் நினைவுகளோ உன்னைக் கண்டப்படித் தேடுதடி நிஷா .!
பளீரென சுட்டெரிக்கும் வெயிலில் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை கொடூரமாய் கொட்டியது மழை தற்செயலாய் தான் கவனித்தேன் தாண்டிப் போய்க்கொண்டிருந்தாள் அவள் என்னை.
திருதிருவென விழித்துக்கொண்டு,கிறு கிறு வென கிறுக்கிக்கொண்டு தன்னந்தனியே நான்.!என் நிலை என்னவென்று எனக்கே புரியவில்லை.......!
சூறாவளியின் மையத்தில் சுனாமியின் சுழற்சிக்குள் நான் அவள் நினைவுகள்
இறந்த காலம் என்னை ஏமாற்றியது நிகழ்காலம் என் கண்ணை மறைக்கிறதுஎதிர்காலம் என்னை ஏளனம் செய்கிறது தனியாக நான் புலம்புவதை கண்டு ..........
எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏங்கி ஏங்கிஅழுது குழந்தை விரல் சப்பி விழி மூடிதானாகவேத் தூங்கிப் போவது போல உனக்காக நான்
கைகளில் தங்க காசு எனில் லக்ஷ்மி...வீணையுடனிருப்பவள் வாணி...பாம்பின் மேலெனின் ரங்கநாதர்..இதயமே இல்லாதவள் என்றால் என்னவள் ........
உன்னை காதலிக்கும் போது தெரிந்திருக்கவில்லை வாழ்கை நாடகத்தில் மரணத்தின் ஒத்திகை நடக்கிறது என்று..
வரமென்றால் தெய்வம்தருவதன்று உன்னைப்போல் அன்புநெஞ்சம் தருவது உணர்ந்துகொண்டேன் இப்போது..........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக