counter

Well Come To My Page

புதன், 13 பிப்ரவரி, 2013

காதலர் தின வாழ்த்துக்கள்




எதிரியாய் இருந்த நீ இப்போது -எஜமானியாய்  
மாறினாய் எனக்குள் -
என்னை அறியாமல் உன்னை காதலித்தேன் -
புரிந்தது மோதல் தான் காதல் என்று -
நான் உன்னை வெறுப்பது எனக்காக அல்ல 
உனக்காக தான் நீ என்னையும் புரிந்து கொள்ள வில்லை -
என் காதலையும் புரிந்து கொள்ள வில்லை -
ஆனால் நான் என்னையே தொலைத்தேன் உன்னுள் -
நீ என்னை ஓரக்கண்ணால் பார்த்தாய் ஒரு முறை கேள் உன் ஓரப்பர்ர்வையிடம்  எதற்காக என்னை பார்த்தாய் என்று 

நீ இல்லாமல் வாழ்வது இன்பம் உண்மை தான் -
ஆனால் இருந்தும் இல்லாமல் என்பது துன்பமடி ......................

அழகாக சிரிக்கையில் நான் என்னையே மறந்து போனேன் -
நீ என்னை விட்டு விலகையில் நான் என்னையே வெறுத்தேன் 

காரணமில்லா  என் உளறல்களுக்கு நான் உன்னை காதலிப்பதாகவே சொல்கிறேன் 
நீயும் என்னை காதலித்து விட்டு மனம் மாறியதேனோ ...............?
என்னை வெறுத்த உன்னை நினைக்கும் போதெல்லாம் 
என் நினைவெல்லாம் நீயாகிப்போனாய் 

உன் நினைவு தவிர மற்றவை எல்லாம் மறந்து போனது 
ஏனோ 
உன்னை காதலிப்பதால் தானே ..................
புரிந்து கொள் உன்னை நான் காதலிப்பது உண்மை என்று 

இப்போது கூட வாழ்ந்துகொண்டிருகிறேன் 
உன்னோடு அல்ல உன் நினைவுகளோடு என்றும் உனக்காக.

கருத்துகள் இல்லை: